2017 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||||
அனைத்து 60 தொகுதிகள் அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||
|
2017 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் மணிப்பூர் சட்டமன்றத்திற்கான 60 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 4 மார்ச் மற்றும் 8 மார்ச் ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற தேர்தலைக் குறிக்கும். இதன் 60 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடநதன.[1] நான்கு சட்டசபை தொகுதிகளில் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைந்து வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன.[2]
பின்னணி
[தொகு]முந்தைய சட்டமன்ற பதவிகாலம் 18 மார்ச் 2017 இல் முடிவடைந்தது.[1] முந்தைய தேர்தலில், 2012 நடைபெற்ற காங்கிரஸ் 42 இடங்களில் வெற்றி பெற்றது மற்றும் பதவியில் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.[3] 2014 ஆம் ஆண்டில், மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி அதன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும், ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.[4]
சோதனை அடிப்படையில் இம்பால் (கிழக்கு), இம்பால் (மேற்கு), பிசுனுபூர், தொபால் ஆகிய நான்கு தொகுதிகளில் வாக்காளர் சரிபார்க்க காகித தணிக்கை சோதனை (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.[5]
கால அட்டவணை
[தொகு]- 4 மார்ச் 2017 - முதல்கட்ட வாக்குப்பதிவு
- 8 மார்ச் 2017 - இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு[6]
போட்டியிட்ட கட்சிகள்
[தொகு]- இந்திய தேசிய காங்கிரஸ்
- அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 24 தொகுதிகளில் போட்டியிட்டது. 2012 தேர்தலில் வென்ற அதன் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும் பின்பு காங்கிரசுக்கும் பாசகவிற்கும் சென்று விட்டனர்.[7]
- மக்கள் மீளெழுச்சியும் நீதியும் இணைந்தது என்ற புதிய கட்சியை ஐரோம் சர்மிளா அவர்கள் நிறுவி[8], விசில் சின்னத்தில் இக்கட்சி மூன்று தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. ஐரோம் சர்மிளா மணிப்பூர் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிட்டார்.[9]
- மணிப்பூர் தேசிய சனநாயக கூட்டணி 15 வேட்பாளர்களை இத்தேர்தலில் நிறுத்தியது.[10]
- பாசக
வாக்குப் பதிவு
[தொகு]மார்ச் 4 இல் 38 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.[11] மார்ச் 8இல் 22 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 86 சதவீத வாக்குகள் பதிவானது.[12] நோட்டா வாக்கு 0.5 சதவீதமாக ஆக இருந்தது.
முடிவுகள்
[தொகு]கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றிபெற்ற தொகுதிகள் | முந்தைய தொகுதிகளில் மாற்றம் |
வாக்கு சதவீதம் | ||
---|---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரஸ் | 60 | 28 | - 19 | 35.1 | ||
பாசக | 60 | 21 | + 19 | 36.3 | ||
நாகா மக்கள் முன்னணி | 16 | 4 | - | 7.2 | ||
தேசிய மக்கள் கட்சி | 9 | 4 | + 3 | 5.1 | ||
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | 24 | 1 | -4 | 1.4 | ||
லோக் ஜனசக்தி கட்சி | 9 | 1 | - | 2.5 | ||
சுயேச்சை | 1 | + 1 | 5.1 | |||
மொத்தம் | 60 | |||||
Source: Election Commission of India பரணிடப்பட்டது 2014-12-18 at the வந்தவழி இயந்திரம் |
ஆளுநர் பாசகவை ஆட்சியமைக்க அழைத்து 15 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபிக்க கூறினார்.[13] மணிப்பூர் பாசக முதல்வர் பைரன் சிங் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிரூபித்தார்[14]
இவற்றையும் பார்க்க
[தொகு]- 2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல்
- பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், 2017
- கோவா சட்டமன்றத் தேர்தல், 2017
- உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல், 2017
- உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Terms of the Houses". eci.nic.in. Election Commission of India/National Informatics Centre. Archived from the original on பிப்ரவரி 9, 2014. பார்க்கப்பட்ட நாள் May 23, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "AnnexureVI VVPAT Page 24" (PDF). Archived from the original (PDF) on 2018-02-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.
- ↑ Iboyaima Laithangbam (March 15, 2012). "Ibobi sworn in, but fight for No. 2 slot continues". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/ibobi-sworn-in-but-fight-for-no-2-slot-continues/article2994623.ece.
- ↑ "Manipur party joins Cong". The Telegraph (Calcutta). April 4, 2014 இம் மூலத்தில் இருந்து ஜூலை 25, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160725142603/http://www.telegraphindia.com/1140404/jsp/frontpage/story_18152776.jsp#.V0Qiqfl97IX.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-02-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.
- ↑ "Announcement: Schedule for the General Elections to the Legislative Assemblies of Goa, Manipur, Punjab, Uttarakhand and Uttar Pradesh" (PDF). Election Commission of India. 4 January 2017. Archived from the original (PDF) on 4 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 4 January 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ TMC eyes 2012 repeat performance in Manipur
- ↑ "Irom Sharmila launches new party, to contest Manipur assembly polls next year". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Irom Sharmila, Ibobi Singh file nominations for Manipur polls". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "MNDF announces names of 15 candidates for Manipur election". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ In peaceful first phase, 82% voting recorded in Manipur இந்து (ஆங்கிலம்), 4 மார்ச் 2017.
- ↑ Record 86 per cent turnout in last phase of Manipur polls
- ↑ Highlights | Manipur governor invites BJP-led group to form govt, Parrikar sworn in as Goa CM
- ↑ Manipur Floor Test: BJP's Biren Singh Wins, Thanks PM Modi -- 10 Facts
வெளி இணைப்புகள்
[தொகு]- Manipur election 2017 date பரணிடப்பட்டது 2017-01-05 at the வந்தவழி இயந்திரம்