உள்ளடக்கத்துக்குச் செல்

உகாண்டா காப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Teleostomi
உகாண்டா காப்
Ugandan kob
ஆண் மான்
உகாண்டாவின் செம்லிகி வனவிலங்கு காப்பகத்தில் பெண் மானும் குட்டியும்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
துணையினம்:
K. k. thomasi
முச்சொற் பெயரீடு
Kobus kob thomasi
(Sclater, 1864)

உகாண்டா காப் ( Ugandan kob) என்பது காப் இனத்தின் ஒரு துணையினம் ஆகும். இது மறிமான் வகையாகும். இவை சகாரா கீழமை ஆபிரிக்காவின், தெற்கு சூடான், உகாண்டா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. உகாண்டா காப் பொதுவாக செம்பழுப்பு நிறத்தில் இருக்கும், இதனால் இது மற்ற காப் கிளையினங்களிலிருந்து வேறுபடுகிறது.

உகாண்டாவின் தேசிய சின்னத்தில் உகாண்டா காப் இடம்பெற்றுள்ளது. இதனுடன் சாம்பல் கொண்டைக் கொக்கு இடம்பெற்றுள்ளது. இவை நாட்டில் இருக்கும் ஏராளமான வனவிலங்கு செல்வத்தைக் குறிக்கிறது.[2]

விளக்கம்

[தொகு]

உகாண்டா காப் ஆப்பிரிக்கச் சிறுமானைப் போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் இவை திடகாத்திரமானவை. இவற்றில் கிடாய்களும் பெட்டைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கிடாய்களுக்கு மட்டுமே நீண்ட கொம்புகள் உள்ளன. சிறுசிறு வளையங்களைக் கொண்ட இக்கொம்புகள் பார்ப்பதற்கு s வடிவில் தோன்றும். கிடாய்கள் நிற்கும்போது தரையிலிருந்து தோள்பட்டை வரை 90 முதல் 100 செமீ (3.0 முதல் 3.3 அடி) உயரம் இருக்கும், சராசரி எடை 94 கிலோ (207 எல்பி) இருக்கும். கிடாய்கள் பெட்டைகளை விட சற்று பெரியவை. பெட்டைகள் தோள்பட்டை வரை 82 முதல் 92 செமீ (2.7 முதல் 3.0 அடி) உயரம் கொண்டவை. சராசரியாக 63 கிலோ (139 பவுண்டு) எடை இருக்கும். தொண்டைத் திட்டு, முகவாய், கண் வளையம், உள் காது ஆகியவற்றில் வெள்ளை உரோமங்கள் வளர்ந்திருக்கும். இவற்றின் உடல் பொன் நிறத்தில் இருந்து செம்பழுப்பு நிறம் வரை இருக்கும். இது மற்ற காப் துணையினங்களிலிருந்து வேறுபடுகிறது. வயிறு மற்றும் கால்களின் உட்புறம் வெண்மையாகவும், முன் கால்கள் கருப்பு நிறமாகவும் இருக்கும்.

பரவலும், வாழ்விடமும்

[தொகு]

இந்த துணையினத்தின் தாயகம் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகும். இது தெற்கு சூடானில், நைல் ஆற்றின் மேற்கில், உகாண்டா மற்றும் காங்கோவின் வடகிழக்கு மக்களாட்சிக் குடியரசில் வாழ்கின்றது. இது ஒரு காலத்தில் வடமேற்கு தான்சானியா வரை பரவி இருந்தது. அங்கு இது விக்டோரியா ஏரியின் விளிம்பில் உள்ள புல்வெளிகளிலும், தென்மேற்கு கென்யாவிலும் மேய்ந்துவந்தது. ஆனால் இது அந்த நாடுகளில் இருந்து அழிக்கப்பட்டது . இது பொதுவாக திறந்த அல்லது மரங்கள் நிறைந்த சவன்னாவில், தண்ணீரின் அருகில் உள்ள தொலைவுக்குள் காணப்படுகிறது. மேலும் இது ஆறுகள் மற்றும் ஏரிகளுக்கு அருகிலுள்ள புல்வெளிகளிலும் வாழ்கிறது. திறந்த புல்வெளியில் படுத்துக் கொள்ளும் இதன் பண்பு வேட்டையாடிகளுக்கு அணுகக்கூடிய இலக்காக அமைகிறது. மேலும் இதன் தற்போதைய மக்கள்தொகையில் 98% தேசிய பூங்காக்கள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலேயே காணப்படுகின்றது.

சூழலியல்

[தொகு]

உகாண்டா காப்கள் பெரும்பாலும் புற்கள் மற்றும் நாணல்கள் தாவரவகைகளை உண்ணும். உகாண்டா காப்கள் அதிகாலையிலும் மாலையிலும் புற்களை மேய்கின்றன. பகலில் ஆற்றுக்குள் இறங்கி நீர்த் தாவரங்களை உண்கின்றன. தெற்கு சூடானில் உள்ள ஒரு மந்தை வறண்ட காலங்களில் 150 முதல் 200 கிமீ (93 முதல் 124 மைல்) பயணம் செய்ததாக பதிவு செய்யப்பட்டது. பெட்டைகள் அவை பிறந்த இரண்டாவது வருடத்தில் பாலியல் முதிர்ச்சியடைகின.[3]

இந்த மான்கள் ஆண்களும், பெண்களும் தனித்தனி கூட்டமாக வாழும். இனப்பெருக்க காலத்தில் இந்த ஒற்றுமை சிதைந்து ஒவ்வொரு ஆண் மானும் எல்லையமைத்து வாழும். ஒவ்வொரு மானும் 200 மீ (660 அடி) விட்டம் கொண்ட எல்லைக்குள் இருக்கும். இந்த எல்லைக்குள் வேறு ஆண் மான் நுழைந்தால் சண்டை துவங்கும். பெண் மான் பல ஆண் மான்களுடன் இனச்சேர்கையில் ஈடுபடுகிறது. பொதுவாக பெண் மான் மழைக் காலத்தின் முடிவில் ஒரு கன்றை ஈனும். கன்றானது நவம்பர் அல்லது திசம்பரில், சுமார் ஒன்பது மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு பிறக்கும்.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. IUCN SSC Antelope Specialist Group (2016). "Kobus kob ssp. thomasi". IUCN Red List of Threatened Species 2016: e.T11043A50190198. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T11043A50190198.en. https://www.iucnredlist.org/species/11043/50190198. பார்த்த நாள்: 12 November 2021.  Database entry includes a brief justification of why this species is of least concern
  2. "Uganda Coat of Arms". Uganda High Commission in Canada. Archived from the original on 27 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 DuVal, E. (2000). "Kobus kob". Animal Diversity Web. பார்க்கப்பட்ட நாள் 27 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உகாண்டா_காப்&oldid=3927967" இலிருந்து மீள்விக்கப்பட்டது