சகாரா கீழமை ஆபிரிக்கா
சகாரா-கீழமை ஆபிரிக்கா (Sub-Saharan Africa) , புவியியலின்படி, சகாராவிற்கு தெற்கிலமைந்த ஆபிரிக்க கண்டப் பகுதியாகும். ஐக்கிய நாடுகள் அவையின் வரையறையின்படி, சகாராவிற்கு தெற்கே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்துள்ள அனைத்து ஆபிரிக்க நாடுகளுமாகும்.[2] இதற்கு எதிராக வடக்கு ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகளும் அரபு உலகின் உள்ளங்கமான அரபு நாடுகள் கூட்டமைப்பு உறுப்பினர்களாகும். சோமாலியா, சீபூத்தீ, கொமொரோசு, மூரித்தானியா புவியியலின்படி சகாரா-கீழமை ஆபிரிக்காவில் இருப்பினும் அவை அரபு நாடுகள் மற்றும் அரபு உலகின் அங்கங்களாகும்.[3]
சகாராவிற்கும் வெப்ப மண்டல சவான்னாக்களுக்கும் இடையேயான இடைநிலை மண்டலமாக சகேல் உள்ளது. வெப்பமண்டல ஆபிரிக்காவின் சவான்னாக் காடுகள் மேலும் தள்ளி உள்ளன.
3500 பொதுயுகம் முன்பிலிருந்தே ,[4][5] சகாரா பகுதிகளும் சகாரா கீழமை பகுதிகளும் பிரிந்திருந்தன; கடும் வானிலையுடனான குறைந்த மக்கள் வசித்த சகாரா ஓர் இயற்கையான தடுப்பாக இருந்தது. இந்த தடுப்பினூடே சூடானிய நைல் மட்டுமே பாய்ந்தது. அதுவும் கூட நைலின் ஆற்றுப்புரைகளால் தடுக்கப்பட்டது. சகாரா நீரேற்று கோட்பாடு எவ்வாறு தாவரவினங்களும் விலங்கினங்களும் ( மனிதர்கள் உட்பட) ஆபிரிக்காவிலிருந்து மத்திய கிழக்கிற்கும் அதன் வெளியிலும் குடிபெயர்ந்தனர் என்பதை விளக்குகின்றது. ஆபிரிக்க மழைசார் காலங்கள் ஈரமான சகாராவுடன் தொடர்புடையன. அக்காலத்தில் பெரிய ஏரிகளும் மிகுந்த ஆறுகளும் இருந்துள்ளன.[6]
சகாரா கீழமை ஆபிரிக்கா என்ற சொற்பயன்பாடு மிகவும் விமரிசிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு பகுதிகளை புவியியல்படி மட்டுமே குறிப்பிடுகின்றது. தவிரவும் கீழமை என்பது கீழ்நிலையான என்ற தோற்றத்தை வெளிப்படுத்துன்றது. இது ஐரோப்பிய நோக்கில் வரையறுக்கப்பட்டுள்ளதாக விமரிசிக்கப்பட்டுள்ளது.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Composition of macro geographical (continental) regions, geographical sub-regions, and selected economic and other groupings". United Nations Statistics Division. 11 February 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013. "The designation sub-Saharan Africa is commonly used to indicate all of Africa except northern Africa, with the Sudan included in sub-Saharan Africa."
- ↑ "Political definition of "Major regions", according to the UN". Archived from the original on 20 April 2010. பார்க்கப்பட்ட நாள் 15 December 2010.
- ↑ League of Arab States
"Arab States". UNESCO.
Infosamak. "Centre for Marketing, Information and Advisory Services for Fishery Products in the Arab Region". Infosamak.
Halim Barakat, The Arab World: Society, Culture, and State, (University of California Press: 1993), p. 80
Khair El-Din Haseeb et al., The Future of the Arab Nation: Challenges and Options, 1 edition (Routledge: 1991), p. 54
John Markakis, Resource conflict in the Horn of Africa, (Sage: 1998), p. 39
Ḥagai Erlikh, The struggle over Eritrea, 1962–1978: war and revolution in the Horn of Africa, (Hoover Institution Press: 1983), p. 59
Randall Fegley, Eritrea, (Clio Press: 1995), p. mxxxviii
Michael Frishkopf, Music and Media in the Arab World, (American University in Cairo Press: 2010), p. 61
- ↑ "Sahara's Abrupt Desertification Started by Changes in Earth's Orbit, Accelerated by Atmospheric and Vegetation Feedbacks", Science Daily.
- ↑ Claussen, Mark; Kubatzki, Claudia; Brovkin, Victor; Ganopolski, Andrey; Hoelzmann, Philipp; Pachur, Hans-Joachim (1999). "Simulation of an Abrupt Change in Saharan Vegetation in the Mid-Holocene". Geophysical Research Letters 26 (14): 2037–40. doi:10.1029/1999GL900494. Bibcode: 1999GeoRL..26.2037C
"Sahara's Abrupt Desertification Started By Changes In Earth's Orbit, Accelerated By Atmospheric And Vegetation Feedbacks". Science Daily (Science Daily). 12 July 1999. https://www.sciencedaily.com/releases/1999/07/990712080500.htm
- ↑ van Zinderen-Bakker E. M. (14 April 1962). "A Late-Glacial and Post-Glacial Climatic Correlation between East Africa and Europe". Nature 194 (4824): 201–03. doi:10.1038/194201a0. Bibcode: 1962Natur.194..201V. https://archive.org/details/sim_nature-uk_1962-04-14_194_4824/page/201.
- ↑ Herbert Ekwe-Ekwe (2 May 2014). "What exactly does ‘sub-Sahara Africa’ mean?". Pambazuka News. http://www.pambazuka.org/en/category/features/79215.
- ↑ "Contemptuousness Of A "Sub-Saharan Africa" By Chika Onyeani". Africannewsworld. Archived from the original on 27 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-09-29.