இஸ்ரேலின் மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்ரேலின் மாவட்டங்கள்
அமைவிடம்இஸ்ரேல்
எண்ணிக்கை6 மாவட்டங்கள்
மக்கள்தொகை10,32,800 (ஹைபா மாவட்டம்) – 21,96,900 (மத்திய மாவட்டம்)
பரப்புகள்190 km2 (72 sq mi) (டெல் அவீவ் மாவட்டம் ) – 14,190 km2 (5,477 sq mi) (தெற்கு மாவட்டம்)
அரசுமாவட்ட ஆட்சியரகம்
உட்பிரிவுகள்வட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பிரதேசக் குழுக்கள்
இஸ்ரேலின் மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் இயற்கை பிரதேசங்களின் வரைபடம், 2018
மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் இயற்கைப் பிரதேசங்கள் வாரியாக மக்கள் தொகை, 2018

இஸ்ரேலின் மாவட்டங்கள் (districts of Israel) இஸ்ரேல் 6 நிர்வாக மாவட்டங்களும், 15 வட்டங்களும் கொண்டது. ஒவ்வொரு வட்டமும் இயற்கைப் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[1][2] மேலும் இயற்கைப் பிரதேங்களை பிரிவுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிவுக் குழுக்களில் மாநகராட்சிகள், நகராட்சிகள் அல்லது மண்டலக் குழுக்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) இயங்குகிறது.

1967ல் ஆறு நாள் போரின் போது சிரியாவிடமிருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்த கோலான் குன்றுகள் பகுதிகள் இஸ்ரேலின் ஒரு வட்டமாக செயல்படுகிறது. இந்த கோலான் குன்றுகள் வட்டம் 4 இயற்கை பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோலான் குன்றுகளை ஐக்கிய நாடுகள் அவை இஸ்ரேலின் பகுதியாக ஏற்கவில்லை. அதே போன்று எருசலேம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு எருசலேம் பகுதியை ஐக்கிய நாடுகள் அவை இஸ்ரேலின் பகுதியாக ஏற்கவில்லை. மேலும் இஸ்ரேலின் பகுதியாக மேற்குக் கரையின் மாவட்டங்கள் சேர்க்கப்படவில்லை.

நிர்வாகம்[தொகு]

இஸ்ரேல் அரசின் உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படும் மாவட்ட ஆணையாளரின் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செயல்படும். மாவட்ட ஆணையாளரின் தலைமையில், உள்ளூர் மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட அமைப்பால் திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.[3]ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றங்கள் செயல்படுகிறது.

மாவட்டங்கள்[தொகு]

எருசலேம் மாவட்டம்[தொகு]

மக்கள் தொகை (EoY 2018): 1,133,700[4] பரப்பளவு:: 653 km2[5] தலைமையிடம்:எருசலேம் இயற்கை பிரதேசங்கள்:

 • 111 யூதேயா மலைகள்
 • 112 யூதேயா மலையடிவாரங்கள்
எருசலேம் மாவட்ட நிர்வாக அலுவலகம்

வடக்கு மாவட்டம்[தொகு]

மக்கள் தொகை (EoY 2018): 1,448,100[4]
பரப்பளவு: 4,473 km2[5]

தலைமையிடம்: நோப் ஹாகலில்

இயற்கைப் பிரதேங்கள்:
 • கின்னரெட் வட்டம் – மக்கள் தொகை: 1,12,900
  • 221 கினேரெட் இயற்கை பிரதேசம்
  • 222 கிழக்கின் கீழ் கலிலேயா
 • ஜெஸ் ரீல் வட்டம்  – மக்கள் தொகை: 5,20,100
  • 231 பெல் சியான் சமவெளி இயற்கைப் பிரதேசம்
  • 232 ஹரோத் சமவெளி இயற்கைப் பிரதேசம்
  • 233 கோக்காவ் மேட்டு நில இயற்கைப் பிரதேசம்
  • 234 யிஸ்ரேல் சமவெளி இயற்கைப் பிரதேசம்
  • 235யோக்னியம் பிரதேசம்
  • 236 மெனசீ மேட்டு நிலம்
  • 237 நாசரேத்-தீரன் மலைகள்
 • அக்ரா வட்டம் – மக்கள் தொகை: 6,43,300
  • 241 செஃப்பாரம் பிரதேசம்
  • 242 கார்மெல் பிரதேசம்
  • 243 யேஹியம் பிரதேசம்
  • 244எலோன் பிரதேசம்
  • 245 நஹாரியா பிரதேசம்
  • 246 அக்கோ பிரதேசம்
 • கோலன் வட்டம்b[›] – மக்கள் தொகை: 50,600
  • 291 ஹெர்மோன் பிரதேசம்
  • 292 வடக்கு கோலன்
  • 293 மத்திய கோலான்
  • 294 தெற்கு கோலான்

ஹைபா மாவட்டம்[தொகு]

மக்கள் தொகை (EoY 2018): 10,32,800
பரப்பளவு: 866 கிமீ2[5]

மாவட்டத் தலைமையிடம்:கைஃபா

 • ஹைபா மாவட்டம்  – மக்கள் தொகை: 5,83,400
  • 311 ஹைபா பிரதேசம்
 • ஹதேரா வட்டம் – மக்கள் தொகை: 4,49,300

மத்திய மாவட்டம்[தொகு]

மக்கள் தொகை (EoY 2018): 2,196,100
பரப்பளவு: 1,294 km2[5]

மாவட்டத் தலைமையிடம்: ராம்லா

 • ஷரோன் வட்டம் – மக்கள் தொகை: 477,400
  • 411 மேற்கு ஷரோன்
  • 412கிழக்கு ஷரோன்
 • பெட்டா திக்வா வட்டம் – population: 754,300
  • 421 தெற்கு ஷரோன் இயற்கை பிரதேசம்
  • 422 பெட்டா திக்வா இயற்கை பிரதேசம்
 • ராம்லா வட்டம்  – மக்கள் தொகை: 351,700
  • 431 மொடின் பிரதேசம்
  • 432 ராம்லா பிரதேசம்
 • ரெஹோவோட் வட்டம்  – மக்கள் தொகை: 612,600
  • 441 ரெஹோவோட் பிரதேசம்
  • 442 ரிஷோன் பிரதேசம்

டெல் அவீவ் மாவட்டம்[தொகு]

மக்கள் தொகை (EoY 2018): 1,427,200[4]
பரப்பளவு: 172 km2[5]

தலைமையிடம்:டெல் அவிவ்

 • 511 டெல் அவிவ் பிரதேசம்
 • 512ராமாத் கன் பிரதேசம்
 • 513 ஹோலோன் பிரதேசம்

தெற்கு மாவட்டம்[தொகு]

தெற்கு மாவட்டம்

மக்கள் தொகை (EoY 2018): 1,302,000[4]
பரப்பளவு: 14,185 km2[5]

தலைமையிடம்: பீர்சேபா

 • அஷ்கேலோன் வட்டம்  – மக்கள் தொகை: 551,200
  • 611 மல்லாக்கி பிரதேசம்
  • 612 லகிஷ் இயற்கை பிரதேசம்
  • 613 அஷ்தோத் பிரதேசம்
  • 614 அஷ்கிலோன் பிரதேசம்
 • பீர்சேபா வட்டம்  – மக்கள் தொகை: 750,700
  • 621 கெரார் பிரதேசம்
  • 622 பெசோர் பிரதேசம்
  • 623 பீர்சேபா பிரதேசம்
  • 624 சாக்கடல் பிரதேசம்
  • 625 அரவா பிரதேசம்
  • 626 நெகேவ் வடக்கு மலை
  • 627 நெகேவ் தெற்கு மலை

யூதேயா மற்றும் சமாரியா பகுதிகள்[தொகு]

யூதேயா மற்றும் சமாரியா பகுதிகள்

இஸ்ரேலிய மக்கள் தொகை (EoY 2018): 427,800[4]
அரபு மக்கள்/பெடூயின் மக்கள் தொகை: 40,000. (excludes Area A and B).

பெரிய நகரம்:மோடின் இல்லிட்

1967 ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளை ஜோர்டானிடமிருந்து கைப்பற்றி இணைத்துக் கொண்டது. இதன் உரிமை குறித்தான பிணக்குகள் இன்றும் உள்ளது. அதனால் இப்பகுதிகளை இஸ்ரேல் நாட்டின் பகுதிகளாக ஐக்கிய நாடுகள் அவை ஏற்கவில்லை.

மேலும் யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளை மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் இயற்கை பிரதேசங்களாகப் பிரிக்கப்படவில்லை.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Key to the Codes in the Maps - Districts, Sub-Districts and Natural Regions 2018, Israel Central Bureau of Statistics, 2021
 2. Districts, Sub-Districts and Natural Regions 2018, Israel Central Bureau of Statistics, 2021
 3. "Transfer of Power (District Commissioners and District Officers) Law, 5724-1964, Laws of the State of Israel vol. 18 no 38. (pp. 70-71)" (PDF).
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Localities and Population, by District, Sub-District, Religion and Population Group" (PDF). Israel Central Bureau of Statistics. 2019. p. 1. பார்க்கப்பட்ட நாள் July 24, 2020.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Statistical Abstract – Geography (PDF) (Report) (in ஹீப்ரூ). Israel Central Bureau of Statistics. 2016. p. 15 (PDF p. 9). பார்க்கப்பட்ட நாள் December 24, 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்ரேலின்_மாவட்டங்கள்&oldid=3812375" இலிருந்து மீள்விக்கப்பட்டது