ஆஸ்கர் இசுட்டான்லி தாவ்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்மிரல்

ஆஸ்கர் இசுட்டான்லி தாவ்சன்

Admiral Oscar Stanley Dawson.png
பிறப்புநவம்பர் 13, 1923(1923-11-13)
பர்மாவில் பிரித்தானிய ஆட்சி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போதைய மியான்மர்)
இறப்பு23 அக்டோபர் 2011(2011-10-23) (அகவை 87)
பெங்களூர், இந்தியா
அடக்கம்
சார்பு இந்தியா (1943-1947)
 இந்தியா (1947 முதல்)
சேவை/கிளைNaval Ensign of India.svg இந்தியக் கடற்படை
சேவைக்காலம்1943–1984
தரம்IN Admiral Shoulder curl.png 14-Indian Navy-ADM.svg அட்மிரல்
கட்டளைஇந்தியப் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதிகளின் தலைவர்
தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அலுவலகலின் கட்டளை-தலைமை அதிகாரி
கிழக்கு கடற்படை (FOCEF) கட்டளை அதிகாரி
நீலகிரி கப்பலின் தலைவர்
தல்வார் கப்பலின் தலைவர்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
கோவா படையெடுப்பு
இந்தியா-பாகிஸ்தான் போர், 1965
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
விருதுகள்அதி விசிட்ட சேவா பதக்கம்
பரம் விசிட்ட சேவா பதக்கம்
கல்விஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி
வேறு செயற்பாடுகள்இந்தியாவுக்கான நியூசிலாந்தின் உயர் நிர்வாக அதிகாரி
அங்க காருண்ய கேந்திராவின் தலைவர்

அட்மிரல் ஆஸ்கர் இசுட்டான்லி தாவ்சன் (Oscar Stanley Dawson) (13 நவம்பர் 1923 - 23 அக்டோபர் 2011) இந்திய கடற்படையில் நான்கு நட்சத்திரத் தகுதி பெற்ற அதிகாரியாவார். 1982 மார்ச் 1 முதல் 1984 நவம்பர் 30 வரை கடற்படைப் பணியாளர்களின் 11 வது தலைவராக பணியாற்றினார்.[1] 1983 முதல் ஓய்வு பெறும் வரை, இவர் இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதிகளின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் முன்னர் தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அலுவலகலின் கட்டளை-தலைமை அதிகாரியாகவும், (FOC-in-C) கிழக்கு கடற்படை (FOCEF) கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். 1971ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின்போது இவர் கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநராகவும் இருந்தார்.

ஓய்வுக்குப் பிறகு, நியூசிலாந்தின் இந்திய உயர் ஆணையர் பணியகத்தில் உயர் நிர்வாகியாகப் பணியாற்றினார். இவர் பல சுற்றுச்சூழல் காரணங்களுக்காக பிரச்சாரம் செய்தார். மேலும், மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு குறித்தும் பணியாற்றினார். அக்டோபர் 2011இல் பெங்களூரு இராணுவ மருத்துவமனையில் பெருமூளை இரத்தப்போக்கு காரணமாக இறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆஸ்கர் இசுட்டான்லி 13 நவம்பர் 1923 அன்று ஈ. எஸ் மற்றும் ஒலிவா தாவ்சனுக்கு மியான்மரில் பிறந்தார். இந்தக் குடும்பம் தமிழ்நாட்டின் நாடார் சமூகத்தைச் சேர்ந்தது. மேலும், கிறிஸ்தவத்தை பின்பற்றியது. இவர் தனது உயர்நிலைப் பள்ளியையும், கல்லூரிக் கல்வியையையும் தனது சொந்த ஊரான நாகர்கோவிலில், ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் பெற்றார்.[2] மார்ச் 1942இல் சப்பானின் மியான்மர் மீதான ஆக்கிரமிப்பின் போது, இவரது குடும்பம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியது .

கடற்படை வாழ்க்கை[தொகு]

இந்தியாவுக்குத் திரும்பியதும், இவர் தனது கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். ஆனால் இந்தியன் கடற்படையில் தன்னார்வ பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஜனவரி 8, 1943இல் மிகக் குறைந்த பதவியில் உள்ள அதிகாரியாக நியமிக்கப்பட்டார். [3]

இவர் ஐக்கிய இராச்சியத்தில் வழிசெலுத்தல் மற்றும் திசையில் நிபுணராக பயிற்சி பெற்றார். இரண்டாம் உலகப் போரின்போது, இவர் 1944-1945 களில் நடந்த அரகான் முற்றுகையில் பங்கேற்றார். மேலும், வங்காள விரிகுடா, அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த துணைப் படையினரிடையே பணியாற்றினார்.[4] இந்தியாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து, இவர் 1948இல் லெப்டினெண்டாக பதவி உயர்வு பெற்று இந்தியக் கடற்படையில் ஈர்த்துக்கொள்ளப்பட்டார்.

பிற்கால வாழ்க்கை[தொகு]

தாவ்சன் நவம்பர் 30, 1984 அன்று கடற்படைச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.[5] தனது 41 ஆண்டுகால கடற்படை வாழ்க்கையில் 19 ஆண்டுகளை கடலிலேயே கழித்தார்.

ஆகஸ்ட் 1985 முதல் செப்டம்பர் 1987 வரை நியூசிலாந்தின் இந்திய உயர் ஆணையர் பணியகத்தில் உயர் நிர்வாகியாகப் பணியாற்றினார்.

ஓய்வுக்குப் பிறகு, பெங்களூரு மற்றும் நாகர்கோயிலில் வசித்து வந்தார். பல சுற்றுச்சூழல் காரணங்களை தீவிரமாக ஆதரித்தார். பெங்களூரில் உள்ள அலசூர் ஏரியை சுத்தம் செய்யும் பிரச்சாரத்திற்கு இவர் தலைமை தாங்கினார். 1990களில் ஈய பெட்ரோல் பயன்பாட்டை நிறுத்துவதற்கான பிரச்சாரத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இவர் ஒரு திறமையான பியானோ கலைஞராகவும் இருந்தார்.[6]

2005 ஆம் ஆண்டு முதல், மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வில் கவனம் செலுத்திய அங்க கருண்ய கேந்திரா என்ற தொண்டு அமைப்பின் தலைவராக பணியாற்றினார். இந்த அமைப்பு முதன்மையாக போலியோ, தசைநார் டிஸ்டிராபி, பெருமூளை வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும், விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களையும் ஆதரிக்கிறது. செயற்கை சாதனங்களைப் பயன்படுத்தி மறுவாழ்வு பெற வைப்பதில் இந்த அமைப்பு சிறப்பு கவனம் கொள்கிறது.

இறப்பு[தொகு]

பெருமூளை இரத்தப்போக்கு காரணமாக 23 அக்டோபர் 2011 அன்று தனது 87 வயதில் இறந்தார். இவர் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை, இவரது சகோதரி தெல்மா இவருடன் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Admiral Oscar Stanley Dawson, PVSM, AVSM". Information Resource Facilitation Centre, Indian Navy. 29 September 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 October 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. ""Scott Alumni Association"". 28 May 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Officers of the Royal Indian Naval Volunteer Reserve". The Navy List: July 1945. HM Government, UK. 1945. பக். 2125. 
  4. S. Sartaj Alam Abidi, Satinder Sharma, Services chiefs of India (2007), p. 119
  5. "Admiral Oscar Stanley Dawson". Bharat-Rakshak.com. 27 December 2010 அன்று பார்க்கப்பட்டது.
  6. Krishnan, M. Anantha (2011) Now, Admiral Dawson on new voyage. New Indian Express. 24 October 2011