அவல் பால்
மாற்றுப் பெயர்கள் | അവൽ മിൽക്ക് | ||||||
---|---|---|---|---|---|---|---|
தொடங்கிய இடம் | கோட்டக்கல், கேரளா, இந்தியா | ||||||
162 கலோரி (678 kJ) | |||||||
|
அவல் பால் அல்லது அவில் பால் (Avil Milk)[1] என்பது கேரளாவின் மலபார் பகுதியின் தெருக்களில் விற்கப்படும் ஒரு கேரள சமையல் பானமாகும். அவல் பால், பழுத்த வாழைப்பழங்கள், பால் மற்றும் பருப்புகளுடன் சேர்த்து, அவல் கொண்டு தயாரிக்கப்படுகிறது.[2]
வரலாறு
[தொகு]கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்திற்கே தனித்துவம் வாய்ந்த அவல் பால், முதன் முதலில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள விஎச் அவல் பால் கோட்டக்கல்லில் உருவானது. இந்த பால் கலவையில் முக்கிய பொருட்களாக வறுத்த அரிசி அவல்/போஹா (அரிசி), சிக்யுடா வாழைப்பழம்/ மைசூர் வாழைப்பழம் (பாளையம் கோடன் வாழைப்பழம்), வறுத்த வேர்க்கடலை மற்றும் பருப்புகள் உள்ளன. இதைக் காலை உணவுடன் அல்லது இனிப்பாகப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
[தொகு]- அவல்: தடிமனான அவலினைப் பயன்படுத்துவது நல்லது. மெல்லிய அவல் மிக விரைவில் கரைந்துவிடும்.
- நெய் அல்லது வெண்ணெய்: இது விருப்பமானது ஆனால் சுவையாகவும், நிறைவாகவும் இருக்கும். அவல் மற்றும் பருப்புகளை வறுக்கவும் இதைப் பயன்படுத்தவும்.
- வாழைப்பழம்: எந்த பழுத்த வாழைப்பழத்தினையும் பயன்படுத்தலாம். ஒரு முட்கரண்டியினைப் பயன்படுத்தி வாழைப்பழத்தினை மசித்துப் பயன்படுத்தலாம்.
- பால்: குளிர்ந்த பால் நல்லது. தேங்காய்ப் பால், பாதாம் பால், முந்திரி பால் போன்றவற்றையும் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள் அல்லது இலவங்கப்பட்டை தூள் (இது பாலிற்குச் சுவை கூட்டும்)
- வறுத்த பருப்புகள்: வேர்க்கடலை, முந்திரி, பாதாம் போன்றவை.
- இனிப்பு: சுவைக்கு ஏற்ப தேன், சர்க்கரை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
செய்முறை
[தொகு]அவல் பால் செய்முறை மிகவும் எளிதானது. முதலில், நெய்/வெண்ணெய் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ அவலினை வறுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் நெய்யில் சிறிதளவு அவலினை வறுக்கவேண்டும். இதனால் உணவு இன்னும் முழு நிறைவாக இருக்கும். பருப்பு/கொட்டைகள் ஏற்கனவே வறுக்கப்படவில்லை என்றால் வறுக்கவும். வாழைப்பழத்தை ஒரு முட்கரண்டி கொண்டு மசிக்கவும். பருவகால பழங்களைப் பயன்படுத்தினால் துண்டுகளாக நறுக்கவும். பால் குளிர்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் உயரமான கண்ணாடி கோப்பையில் சேகரித்து, கிளறி சாப்பிடலாம் அல்லது குடிக்கலாம்! [3]
படத்தொகுப்பு
[தொகு]மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ അലി, ഷേഹി. "അവല് മില്ക്ക് തയ്യാറാക്കാം". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2021-10-04. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
- ↑ "വിരുന്നുകാർക്ക് നൽകാം അവല്-പഴം ഷെയ്ക്ക്". malayalam.samayam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
- ↑ "ചൂടിനെ ചെറുക്കാൻ തയാറാക്കാം അവിൽ മിൽക്ക്, ഈസി റെസിപ്പി! | avil milk | aval milk | easy smoothies | variety milk shakes | breakfast recipes". vanitha.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.