அலிவர்தி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிவர்தி கான்
வங்காள நவாப்
வங்காள நவாப்
ஆட்சிக்காலம்29 ஏப்ரல் 1740 – 1751
முன்னையவர்சர்பராசு கான்
பின்னையவர்ரகோஜி போன்சலே
(ஒடிசா, நாக்பூர்)
வங்காள நவாபு
ஆட்சிக்காலம்1751 – 9 ஏப்ரல் 1756
முன்னையவர்சர்பராசு கான்
பின்னையவர்சிராச் உத் தவ்லா
பிறப்பு1676
தக்காணப் பீடபூமி
இறப்பு9 ஏப்ரல் 1756(1756-04-09) (அகவை 79–80)
முர்சிதாபாத்
புதைத்த இடம்
குச்பாக், முர்சிதாபாத்
துணைவர்சர்புன்னிசா
குழந்தைகளின்
பெயர்கள்
பெயர்கள்
சுஜா உல்-முல்க் ஹாசிம் உத்-தௌலாமுகபத் ஜங் மிர்சா முகமது அலிவர்தி கான்
தந்தைமிர்சா முகமது மதானி
தாய்ஈரானிய துர்க்மென் அப்ஷர் குராசான் பழங்குடியினத்தைச் சேர்ந்த தக்காணி முஸ்லிம்
மதம்சியா இசுலாம்[1][2]
இராணுவப் பணி
சார்புமுகலாயப் பேரரசு
சேவை/கிளைவங்காள நவாபுகள்
தரம்நவாப்

அலிவர்தி கான் ( Alivardi Khan ) (1671 - 9 ஏப்ரல் 1756) 1740 முதல் 1756 வரை ஆட்சி செய்த வங்காள நவாப் ஆவார். இவர் 1740 இல் சர்பராசு கானை தோற்கடித்து நவாப்களின் நசிரி வம்சத்தை வீழ்த்தினார்.

இவரது ஆட்சியின் பெரும்பகுதியில், அலிவர்தி ரகோஜி போன்சலேவின் கீழ் அடிக்கடி மராட்டியத் தாக்குதல்களை எதிர்கொண்டார். 1751 இல் சமாதானத் தீர்வுடன் ஒடிசா மாகாணம் சரணடைந்தது. இவர் பீகாரில் பிரிவினைவாதக் கிளர்ச்சிகளையும் இவரது பேரன் சிராஜ் உத்-தௌலாவின் கிளர்ச்சியையும் எதிர்கொண்டார். இருப்பினும் இவை அடக்கப்பட்டன.

அலிவர்தி தனது ஆட்சியின் பிற்பகுதியில் வங்காளத்தை மீண்டும் கட்டியெழுப்பினார். இவர் கலைகளின் புரவலராக இருந்தார். மேலும், முர்சித் குலி கானின் கொள்கைகளை மீண்டும் தொடங்கினார். இவர் இந்தியத் துணைக்கண்டத்தில் ஐரோப்பிய சக்திகளுடன் அரசியல் ரீதியாக நடுநிலையான நிலைப்பாட்டை பராமரித்து, தனது ஆதிக்கத்தில் அவர்களுக்கிடையே எழுந்த அனைத்துவிதமான உட்பூசல்களையும் தடுத்தார். இவருக்குப் பிறகு இவரது பேரன் 1756 இல் சிராஜ் உத் தௌலா ஆட்சிக்கு வந்தார்.

மிர்சா பந்தே அல்லது மிர்சா முகம்மது அலி எனவும் அறியப்படும் இவர் இந்திய -அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும், 1676 இல் தக்காணத்தில் பிறந்தவ்ர.[3][4][5] முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் வளர்ப்புச் சகோதரரின் மகனான இவரது தந்தை மிர்சா முகம்மது மதானியின் மகன் முகமது ஆசம் ஷாவின் நெருங்கிய பாதுகாவலாராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[6] முகம்மது அலியின் தாயார் ஈரானிய துர்க்மென் அப்ஷர் குராசான் பழங்குடியினத்தைச் சேர்ந்த தக்காணி முஸ்லிம் ஆவார். அவர் மூலம், இவர் ஊஜா-உத்-தின் முகம்மது கானின் உறவினர் ஆவார். எனவே இவர் மிர்சா தக்காணி எனவும் அறியப்படுகிறார்.[5] [note 1] [7][8]

இவர்களின் தந்தையைப் போலவே, இவரும் இவரது மூத்த சகோதரர் மிர்சா அகமதுவும் (பின்னர் ஹாஜி அகமது என்று அழைக்கப்பட்டார்) ஆசம் ஷாவின் ஆதரவைப் பெற்றனர். முகம்மது அலி யானை தொழுவத்தின் கண்காணிப்பாளராகவும், துணிகளில் பூத்தையல் செய்யும் பொறுப்பையும் வழங்கினார். இருப்பினும், 1707 இல் ஆசம் ஷா இறந்ததைத் தொடர்ந்து, குடும்பம் வறுமையில் வாடியது. இவர்கள் ஒடிசாவில் உள்ள கட்டக் நகருக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் இவர்களது உறவினர் ஊஜா-உத்-தினின் துணை ஆளுநரிடம் ஒரு வேலயைப் பெற்றனர். இவர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதில் தங்களைத் தாங்களே திறமையாக நிரூபித்தார்கள். பின்னர் ஊஜா-உத்-தின் வங்காள நவாப் ஆவதற்கு உதவினார்கள்.[9]

அதிகாரத்திற்கு வருவது[தொகு]

முர்சிதாபாத் அரசவையில் அலிவர்தி கான் சுமார் 1745

1728 இல், ஊஜா-உத்-தின் முகம்மது அலியை ராஜ்மகாலின் பௌஜ்தாராக பதவி உயர்வு அளித்து, அலிவர்தி கான் என்று பெயரிட்டார்.[10] 1733 இல், இவர் பீகாரின் துணை சுபதாராக நியமிக்கப்பட்டார்.

அலிவர்தி அதிகாரத்திற்கு பெரியதாக ஆசைப்பட்டார். 1740 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி கிரியா போரில் ஊஜா உத்-தினின் வாரிசான சர்பராசு கானை தோற்கடித்து கொன்றார்.[10] இதன் மூலம் வங்காளம் மற்றும் பீகார் இவர் வசம் வந்தது. பின்னர் மார்ச் 3, 1741 இல், புல்வாரியன் போரில் ஒரிசாவின் துணை ஆளுநரும் சர்பராசு கானின் உறவினருமான ருஸ்தம் ஜாங்கை தோற்கடித்தார்.[10] பின்னர், ஒரிசாவும் அலிவர்தியின் கட்டுப்பாட்டில் வந்தது. அலிவர்தி கான் ஒரிசாவில் மிர்சா பகீர் கான் தலைமையில் ஒரு கிளர்ச்சியைத் தோற்கடித்தார். மேலும் இரண்டாவது முறையாக ஒரிசா மீது படையெடுத்து, பர்கா சயீத்களை மிகவும் சிரமத்துடன் அடக்கினார்.[11] அங்கு ஒரு துணிச்சலான போர்வீரரான ஷேக் மாசுமை ஆளுநராக நியமித்தார்.[12]

ஆட்சி[தொகு]

அலிவர்தி கான் ஒரு முக்கியமான போரில் இரண்டு கைதிகளை கைது செய்வது போன்ற ஒரு ஓவியம்

அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனேயே, அலிவர்தி முகலாயப் பேரரசர் முகமது ஷாவால் சட்டப்பூர்வமாகக் கையகப்படுத்தப்பட்டார். முர்ஷித் குலி கானின் கொள்கைகளை மீண்டும் தொடங்கினார். பட்னா, டாக்கா மற்றும் ஒடிசா போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் இவர் பௌஜ்தார்களைத் தேர்ந்தெடுத்தார்.[13]

1742 முதல், மராட்டியப் பேரரசு வங்காளத்தின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி அதன் பிரதேசங்களை அழித்தது. அலிவர்தி உடனடியாக கல்கத்தாவைச் சுற்றி தோண்டப்பட்ட மராட்டிய பள்ளம் என்று அழைக்கப்படும் ஒரு நீண்ட பள்ளத்தை ஏற்படுத்தினார். அலிவர்தி ஒரு சிறந்த பீரங்கிப் படையைக் கொண்டிருந்தார். இருப்பினும் ரகோஜி போன்சலேயின் தலைமையில் வங்காளத்தின் பிரதேசங்களை கொள்ளையடித்து கைப்பற்ற வந்த பேராரிலிருந்து வந்த மராத்தியர்களின் பெரும் படையால் இவரது படைகள் தோற்றன.

1747 ஆம் ஆண்டில், ரகோஜி தலைமையிலான மராத்தியர்கள் அலிவர்தியின் பிரதேசங்களைத் தாக்கி, சூறையாடத் தொடங்கினர். ஒரிசாவின் மராத்தா படையெடுப்பின் போது, அதன் சுபேதார் மிர் ஜாஃபர் பர்த்வான் போரில் அலிவர்தி மற்றும் முகலாய இராணுவம் வரும் வரை அனைத்து படைகளையும் முற்றிலுமாக விலக்கிக் கொண்டார். அங்கு ரகோஜியும் அவரது மராட்டியப் படைகளும் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டன. கோபமடைந்த அலிவர்தி, மீர் ஜாபரை வெளியேற்றினார்.[14]

சுஜா-உத்-தௌலாவிடமிருந்து]] சில உதவிகளைப் பெற்ற போதிலும், 1751 ஆம் ஆண்டு ஒடிசாவில் அலிவர்தியின் தற்காப்புப் படைகள் தோற்றன. ஆனால் ஒரிசா இறுதியில் முகலாய பேரரசர் அகமது ஷா பகதூரால் மராத்தியர்களிடம் சரணடைந்தது. 1751 ஆம் ஆண்டு அகமது ஷா பகதூர், அலிவர்தி மற்றும் ரகோஜி இடையே சமாதான உடன்படிக்கை ஏற்படும் வரை இந்த மராத்தா தாக்குதல்கள் தொடர்ந்தன.[10]

1750 இல், பாட்னாவைக் கைப்பற்றிய இவரது மகளின் மகன் சிராச் உத் தவ்லாவிடமிருந்து அலிவர்தி ஒரு கிளர்ச்சியை எதிர்கொண்டார். ஆனால் அலிவர்தி அவரை மன்னித்தார்.[15] பீகாரை தனது நிர்வாகத்திலிருந்து பிரிக்க முயன்ற ஆப்கானியர்களின் கிளர்ச்சியையும் இவர் அடக்கினார்,[10] மேலும் பீகார் வழியாக கொள்ளையடித்த லம்பாடிகளை தண்டித்து அவர்களை தெராய் நோக்கி துரத்தினார்.[16]

சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அலிவர்தி கானின் 16 ஆண்டுகால ஆட்சி பெரும்பாலும் மராட்டியர்களுக்கு எதிராக பல்வேறு போர்களில் ஈடுபட்டது. இறுதியில், இவர் வங்காளத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மீட்டெடுப்பதற்கும் தனது கவனத்தைத் திருப்பினார்.

தென்னிந்தியாவைப் போலல்லாமல், சரியான விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கைகள் மூலம் ஆஸ்திரியாவில் வாரிசுப் போரின் விளைவுகளிலிருந்து வங்காளத்தையும் இவர் காப்பாற்றினார். இவர் ஐரோப்பிய சக்திகளுக்கு நடுநிலையான கொள்கையைப் பேணினார். பிரித்தானிய, பிரஞ்சு மற்றும் டச்சுக்காரர்கள் தனது ஆதிக்கத்தில் ஒருவருக்கொருவர் விரோதப் போக்கைக் கொண்டிருப்பதைத் தடை செய்தார்.[17]

கலாச்சார மற்றும் இசை வளர்ச்சி[தொகு]

அலிவர்தி கான் வீணை மற்றும் கோல் போன்ற பல்வேறு இசைக்கருவிகளின் புரவலராக இருந்தார். சா நாமாவின் பல கையெழுத்துப் பிரதிகளையும் இவர் ஆதரித்தார்.

இறப்பு மற்றும் வாரிசு[தொகு]

அலிவர்தி கான், 9 ஏப்ரல் 1756 அன்று, தனது 80 வயதில் இறந்தார். தனது தாயின் கல்லறைக்கு அடுத்த குஷ்பாக்கில் அடக்கம் செய்யப்பட்டார்.[18] இவருக்குப் பிறகு 23 வயதாக இருந்த இவரது மகளின் மகன் சிராச் உத் தவ்லா ஆட்சிக்கு வந்தார்.

குடும்பம்[தொகு]

இவரது சமகாலத்தவர்களைப் போலல்லாமல், அலிவர்திக்கு சர்புன்னிசா என்ற ஒரே ஒரு மனைவி மட்டுமே இருந்தார்.[19][20] இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.[21] அவர்களில் குறைந்தது இவரது மூத்த சகோதரர் ஹாஜி அஹ்மத்தின் இரண்டு மகன்களை திருமணம் செய்து கொண்டனர்.[22][23] அலிவர்தி தனது மருமகன்களை விட அதிக நாட்கள் வாழ்ந்தார். இவருக்கு சொந்த மகன்கள் இல்லாததால், இவருக்குப் பிறகு இவரது பேரன் சிராச் உத் தவ்லா ஆட்சிக்கு வந்தார்.[22][23][24]

முகம்மது அமீன் கான் மற்றும் முகம்மது யார் கான் உட்பட அலிவர்திக்கு பல உடன்பிறந்த சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் முறையே கூக்ளி-சூச்சுரா பகுதியின் தளாபதியாகவும் ஆளுநராகவும் பணியாற்றினர்.[25][26][27] இவரது ஒன்றுவிட்ட சகோதரி ஷா கானும் மிர் ஜாபரின் மனைவி ஆவார். பின்னர் இவர் 1757 இல் வங்காளத்தின் அரியணையைக் கைப்பற்றினார்.[28][29] வரலாற்றாசிரியர் குலாம் உசைன் கானும் உறவினர்.[30]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Saiyid Athar Abbas Rizvi (1986). A Socio-intellectual History of the Isnā ʼAsharī Shīʼīs in India: 16th to 19th century A.D. 2. Munshiram Manoharlal Publishers. பக். 46–47. இணையக் கணினி நூலக மையம்:15406211. https://books.google.com/books?id=0Z0OAAAAIAAJ. "Ghulām Husayn Tabātabā'ī's account of 'Alīwardī's death reinforces the suggestion that he was a Shī'ī." 
  2. Rieck, Andreas (2016). The Shias of Pakistan: An Assertive and Beleaguered Minority. Oxford University Press. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-061320-4. https://books.google.com/books?id=t6aKCwAAQBAJ&pg=PA3. 
  3. Datta, Kalikinkar (1939). Alivardi And His Times. University of Calcutta. பக். 2. https://archive.org/details/in.ernet.dli.2015.279485/page/n21/mode/2up. 
  4. Ivermee, Robert (2020). Hooghly:The Global History of a River. பக். 51. https://books.google.com/books?id=6eMJEAAAQBAJ&dq=AlIVARDI+NATIVE+DECCAN&pg=PA51. 
  5. 5.0 5.1 Sarkar, Jadunath (1948). The History of Bengal. University of Dhaka. பக். 436. https://archive.org/details/in.ernet.dli.2015.283729/page/n447/mode/2up. 
  6. Sensarma, P. (1977). The Military History of Bengal. Darbari Udjog. பக். 172. https://books.google.com/books?id=l8ABAAAAMAAJ. 
  7. Antunes, Cátia (2022). Merchant Cultures:A Global Approach to Spaces, Representations and Worlds of Trade, 1500–1800. பக். 124. https://books.google.com/books?id=mplcEAAAQBAJ&dq=Mirza+Deccani+shuja+ud+din&pg=PA125. 
  8. Singh, Nagendra Kr. (2001). Encyclopaedia of Muslim Biography: I-M. A.P.H. Publishing Corporation. https://books.google.com/books?id=qVtuAAAAMAAJ&q=He+was+succeeded+by+his+son+-+in+-+law+Shujaud+-+din+Muhammad+Khan+Bahadur+who+was+also+called+Mirza+Deccani. 
  9. (Sarkar 1948, ப. 436–37)
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 Shah, Mohammad (2012). Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh. 
  11. Rāẏa, Bhabānī Caraṇa (1981). Orissa Under the Mughals:From Akbar to Alivardi : a Fascinating Study of the Socio-economic and Cultural History of Orissa. 
  12. Sahu, N. K. (1981). History of Orissa. 
  13. Markovits, Claude (2004). A History of Modern India, 1480-1950. Anthem Press. பக். 194–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84331-004-4. https://books.google.com/books?id=uzOmy2y0Zh4C&pg=PA194. 
  14. Jaques, Tony (2007). Dictionary of Battles and Sieges: A-E. Greenwood Publishing Group. பக். 137–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-33537-2. https://books.google.com/books?id=3amnMPTPP5MC&pg=PA137. 
  15. William Dalrymple (historian) (2019). The Anarchy: The Relentless Rise of the East India Company. Bloomsbury Publishing. பக். 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4088-6440-1. https://books.google.com/books?id=iRuoDwAAQBAJ. 
  16. Ansari, Tahir Hussain (2019). Mughal Administration and the Zamindars of Bihar. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-000-65152-2. https://books.google.com/books?id=kUueDwAAQBAJ&dq=alivardi+khan+banjaras&pg=PT264. 
  17. Datta, Kalikinkar (1948) (in en). The Dutch in Bengal and Bihar, 1740-1825 A.D.. University of Patna. பக். 12. https://books.google.com/books?id=p4wdAAAAMAAJ. 
  18. William Dalrymple (historian) (2019). The Anarchy: The Relentless Rise of the East India Company. Bloomsbury Publishing. பக். 84, 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4088-6440-1. https://books.google.com/books?id=iRuoDwAAQBAJ. 
  19. Skelton, Robert (1979). Arts of Bengal: The Heritage of Bangladesh and Eastern India : an Exhibition. Whitechapel Art Gallery. https://books.google.com/books?id=B8TYAAAAMAAJ. 
  20. Rahim, A. (1959). "Society and Culture of the Eighteenth Century Bengal". Bengali Literary Review (University of Karachi) 4 (I & II): 127. பன்னாட்டுத் தர தொடர் எண்:0405-413X. https://books.google.com/books?id=q8sVAQAAIAAJ. 
  21. Islam, Sirajul (1997). History of Bangladesh, 1704-1971. Asiatic Society of Bangladesh. https://books.google.com/books?id=CeNtAAAAMAAJ. 
  22. 22.0 22.1 Datta, K.K. (1967). Early Career of Siraj-ud-daulah. Calcutta Historical Society. https://books.google.com/books?id=TxbjAAAAMAAJ. 
  23. 23.0 23.1 Sen, Ranjit (1987). Metamorphosis of the Bengal Polity (1700-1793). Rabindra Bharati University. https://books.google.com/books?id=u3EeAAAAMAAJ. 
  24. Sengupta, Nitish Kumar (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib. Penguin Books India. பக். 162, 164. https://books.google.com/books?id=kVSh_TyJ0YoC&pg=PA162. 
  25. Ghulam Husain Salim (1902). Riyazu-s-Salatin, A History of Bengal. The Baptist Mission Press. பக். 335. https://archive.org/details/riyazussalatinhi00saliuoft/page/335/mode/1up. 
  26. (Sarkar 1948)
  27. Datta, Kalikinkar (1939). Alivardi and His Times. University of Calcutta. பக். 69. https://archive.org/details/in.ernet.dli.2015.279485/page/n91/mode/2up. 
  28. Mukhopadhyay, Subhas Chandra (1980). Diwani in Bengal, 1765: Career of Nawab Najm-ud-Daulah. Vishwavidyalaya Prakashan. பக். 3. https://books.google.com/books?id=uXEeAAAAMAAJ. 
  29. Rashid, Abdur (2001). From Makkah to Nuclear Pakistan. Ferozsons. பக். 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-969-0-01691-1. https://books.google.com/books?id=zORtAAAAMAAJ. 
  30. Syed Hasan Askari (April 1978). "Saiyid Ghulam Hussain Khan". The Panjab Past and Present (Department of Punjab Historical Studies, Punjabi University) XII (I): 257. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-0786. https://books.google.com/books?id=TwlDAAAAYAAJ. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிவர்தி_கான்&oldid=3924532" இலிருந்து மீள்விக்கப்பட்டது