உள்ளடக்கத்துக்குச் செல்

கோல் (இசைக்கருவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோல்
கோல் கருவி
கோல் கருவி
கோல் கருவி
தாள இசைக்கருவி
வேறு பெயர்கள்மிருதங்கம்
வகைப்பாடுசவ்வினால் இழுத்துக் கட்டப்படும்கருவி
தொடர்புள்ள கருவிகள்

கோல் (Khol) என்பது வட மற்றும் கிழக்கு இந்தியாவில் பக்தி இசையுடன் இணைந்து பயன்படுத்தப்படும் ஒரு சுடுமண்ணாலான இரண்டு பக்க முரசாகும். இது மிருதங்கம் என்றும் அழைக்கப்படுகிறது ( மிருதங்கத்துடன் குழப்பக்கூடாது). இது இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவானது. இரு கைகளின் உள்ளங்கைகள் மற்றும் விரல்களால் இது வாசிக்கப்படுகிறது.

விளக்கம்[தொகு]

நாட்டிய சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, கோல் பண்டைய கோபுச்சா வடிவ முரசினை ஒத்ததாகக் கருதப்படுகிறது.இதன் வலது முகம் அதிக சுருதியைக் கொண்டுள்ளது. மேலும் உலோக ஒலியை உருவாக்குகிறது, அதே சமயம் இடது முகம் குறைந்த ஒலியை உருவாக்குகிறது. பெரிய பக்கத்தை ஈரப்பதத்துடன் சரிசெய்யலாம். ஈரப்பதமான நாளில், பெரிய பக்கம் தளர்ந்து, குறைந்த ஒலியை உருவாக்கி அதிர்வுறும். வறண்ட வானிலை நாளின் போது பக்கமானது இறுக்கமடைகிறது. இது அதிக ஒலியை உருவாக்குகிறது. இசைக்கருவி வாசிப்பவர்கள் தங்கள் கருவிகளில் போதுமான அளவு குறைந்த ஒலியை உருவாக்கவில்லை என உணர்ந்தால் அவர்கள் தங்கள் விரலில் சிறிது தண்ணீரைத் தடவி, பெரிய பக்கத்தின் விளிம்பில் பரப்புவார்கள். [1] [2]

வரலாறு[தொகு]

கோல் தோற்றம் பற்றி பல வரலாறுகள் உள்ளன. வடகிழக்கு இந்தியாவில் பல்வேறு வகையான கோல் கருவி கிடைக்கிறது. ஒடிசா, மணிப்பூர், வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் பொதுவாக வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. அசாமிய பாலிமத் சங்கர்தேவ் மரத்தால் செய்யப்பட்ட கோலை உருவாக்கினார்.[3]

ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு விஷ்ணு (ஜெகன்நாத், ராதா கிருஷ்ணர்) கோவிலிலும் ஆரத்தி சடங்குகளின் போது இந்த கருவி இசைக்கப்படுகிறது. சண்டிதாசர், கோவிந்ததாசர் மற்றும் ஞானதாசர் போன்ற இடைக்கால கவிஞர்களின் ஒடியா, பெங்காலி கீர்த்தனைகளுடன் பறை பயன்படுத்தப்படுகிறது. இது ஒன்பது இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கௌடீயந்ருத்யத்துடன் இணைந்து பயன் படுத்தப்பட்டிருந்தாலும் சங்கீத நாடக அகாதமியால் அங்கீகரிக்கப்படவில்லை.

கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கம், கௌடியா வைணவ சங்கங்களில், பஜனை மற்றும் கீர்த்தனைளில் இது முதன்மையாக இசைக்கப்படுகிறது.

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Khol - India Instruments". www.india-instruments.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  2. "Yathi and Jathi - Classical Music Mridangam". www.mridangams.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  3. Indian Literature. Sähitya Akademi. 1970. p. 84. பார்க்கப்பட்ட நாள் 23 December 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மிருதங்கம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்_(இசைக்கருவி)&oldid=3651418" இலிருந்து மீள்விக்கப்பட்டது