உள்ளடக்கத்துக்குச் செல்

லம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சார லம்பாடி பெண்
மரபு உடை அணிந்த லம்பாடி பெண்

லம்பாடி (Banjara, Lampadi, Lamani or Lambani Banjara) பஞ்சார, லபான எனும் பல பெயர்களால் அழைக்கபடுபவர்கள் ஒரு நாடோடி மக்கள் ஆவர். இவர்கள் வட இந்தியாவின் தற்போதைய ராஜஸ்தான் என்ற மார்வார் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்களாவர். இவர்கள் மராத்தியும் குஜராத்தியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் (Gorer) மற்றும் கார்போலி மொழியையும் பேசுகின்றனர்.[1] ஆங்கில அரசின் ஆவணங்களில் குறிப்பாக அன்றைய ஐதராபாத் மாநில அரசின் ஆவணங்களில் லம்பாடிகள், லம்படாக்கள், பிரிஞ்சாரிகள், பிரிஞ்சாரர்கள், லாமனிகள், பஞ்சாரிகள், மதுரா பஞ்சார்கள், சரன்பஞ்சார்கள், சுகாவிஸ் எனப் பல்வேறு பெயர்களில் லம்பாடியினத்தவர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[2]

தற்சமயம இம்மக்கள் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களோடு கலந்து இச்சூழலுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளமையால் இவர்கள் தங்கள் தாய்மொழியை விட தமிழையே சரளமாகப் பேசுபவர்களாக உள்ளனர்.[3] இவர்களின் மொழி இம்மக்களின் அன்றாட வழக்கிலிருந்து குறைந்து தற்சமயம் அரிதாகியுள்ளது.

லம்பாடி இனத்தவர் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ளனர். தமிழ்நாட்டில் இவர்கள் இனத்துப் பெண்கள் அணியும் உடையைக் கேலிக்குரியதாகச் சொல்லும் வழக்கம் இன்னும் உள்ளது. தமிழ்நாட்டில் லம்பாடி இன மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவுமே வாழ்கின்றனர். கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள இவர்கள் தமிழ்நாட்டிலும் தங்களைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அல்லது பழங்குடியின வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர்.

சொற்பிறப்பு

[தொகு]

லம்பாடிகளை குறிப்பிடும் பஞ்சார என்ற சொல்லானது வன சர என்ற சமசுகிருத சொல்லிலிருந்து உருவானது (பொருள் : காட்டில் அலைந்து திரிபவர்கள்). மற்றொரு பெயரான லமன் (லாமானி அல்லது உப்பு வணிகர்) என்ற சொல்லானது சமூகம் என்று அறியப்படுகிறது. இது லாவனா (உப்பு) என்ற சமசுகிருத சொல்லில் இருந்து உருவானது. இது அவர்கள் நாடு முழுவதும் உப்புப் பொதிகளை கொண்டு சென்று விற்றுவந்த தொழிலாலில் இருந்து உருவானது ஆகும்.[4] லம்பாடி என்பது சமூகத்தைக் குறிக்கும் தனித்துவமான ஒரு சொல்லாகும். இது நரி என்ற சொல்லில் இருந்து உருவானது. அதாவது 'லோம்ப்டி' என்ற சொல்லுக்கு காடுகளில் சுற்றியது என்று பொருள்.

வரலாறு

[தொகு]

பஞ்சாரா இனமக்களின் மூலம் என்பது மிகவும் விவாதத்திற்குரிய விசயமாகும்.  இதில் ஒரு கருத்து என்னவென்றால், இவர்கள் ராஜஸ்தானின் மார்வார் பகுதியிலிருந்து வந்தவர்கள், மற்றொன்று இவர்கள் ஆப்கானிஸ்தானில் தோன்றியவர்கள் எனப்படுகிறது.[5]

19 ஆம் நூற்றாண்டில், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசானது 1871 ஆம் ஆண்டின் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் இந்த சமூகத்தை கொண்டு வந்தனர், இது இவர்களின் பாரம்பரிய தொழில்களை கைவிட கட்டாயப்படுத்தியது.[6] இது அவர்களில் சிலர் மலைகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு அருகிலுள்ள விவசாயிகளாக குடியேற வழிவகுத்தது, மற்றவர்கள் காட்டுப் பகுதிகளுக்குச் சென்றனர். [7]

மொழி

[தொகு]

இவர்கள் பேசும் மொழியானது லம்பாடி மொழி பேசுகிறார்கள்; இது கோர் போல் என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தோ ஆரிய மொழிகளின் குழுவைச் சேர்ந்தது. லம்பாடி மொழிக்கு எழுத்து இல்லாததால், இது தேவநாகரி எழுத்தில் அல்லது தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற உள்ளூர் மொழிகளின் எழுத்துகளில் எழுதப்படுகிறது.[8] இன்று பெரும்பாலான லம்பாடிகள் இருமொழி அல்லது பன்மொழி என, தங்கள் சுற்றுப்புறங்களில் பேசப்படும் முக்கிய மொழிகளை ஏற்றுக்கொண்டவர்களாக உள்ளனர்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாட்டில் நாடோடிகள்". தமிழ் முகில். மார்ச்சு 4, 2011. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 2012.
  2. Bhangya Bukya (2010). subjugated Nomads - The Lambadas Under The Rule of The Nizams. Orient Blackswan. pp. பக்கம் 1.
  3. "லம்பாடி ஆதிக் குடிகள்". சுபாஷினி. தமிழ்மரபு அறக்கட்டளை. 18 September 2011. Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 2012.
  4. Halbar (1986), ப. 14
  5. Burman, J. J. Roy (2010). Ethnography of a Denotified Tribe: The Laman Banjara. New Delhi: Mittal Publications. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-18324-345-2.
  6. N. Shantha Mohan (1988). Status of Banjara Women in India: (a Study of Karnataka). Uppal Publishing House. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185024462.
  7. Shashi, Shyam Singh (2006). The World of Nomads. New Delhi: Lotus Press. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8382-051-4.
  8. Bhukya (2010), ப. 233
  9. Halbar (1986), ப. 20

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லம்பாடி&oldid=3570110" இலிருந்து மீள்விக்கப்பட்டது