அமினா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமினா பேகம் (Amina Begum) வங்காளத்தின் நவாப் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் வங்காள பிரபு ஆவார். மேலும் இவர் வங்காளத்தின் கடைசி சுதந்திரமான நவாபான நவாப் சிராச் உத் தவ்லாவின் தாயார் ஆவார். [1]

அமினா பேகம்
வங்காள இளவரசி
அமினா பேகம் அவர்களின் சமாதி
இறப்புநவம்பர் 1760
டாக்கா, வங்காளதேசம்
புதைத்த இடம்
கோஷ்பாக், இந்தியா
துணைவர்சைன் உத் தின் அகமத் கான்
குழந்தைகளின்
பெயர்கள்
மிர்சா மெகதி இகரம் உத் தவ்லா, சிராச் உத் தவ்லா
மரபுஅஃசார் (பிறப்பால்)
தந்தைநவாப் அலிவர்டி கான்
தாய்சர்பு உன் நிசா
மதம்இசுலாம்

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அமினா வங்காளத்தின் நவாப் நவாப் அலிவர்டி கானின் இளைய மகள். இவர் ஜைனுதீன் அகமது கானை மணந்தார். இவர்களுக்கு மிர்சா மெகதி இக்ரம் உத்-தவ்லா மற்றும் சிராச் உத்- தவ்லா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். [2] இவரது கணவர் ஜைனுதீன் அஹ்மத் கான் பாட்னாவின் நாயப் நாஜிம் (கவர்னர்) ஆக அவரது தந்தை வங்காளத்தின் நவாப் அவர்களால் நியமிக்கப்பட்டார். [3]

தொழில்[தொகு]

ஆப்கானிய கிளர்ச்சியாளர்களால் அமினா கணவன் கொல்லப்பட்டதற்கு பின்னர் சிறை பிடிக்கப்பட்டார். இவர் தனது இரண்டு மகன்களுடன் சிறை பிடிக்கப்பட்டார். ஆப்கானியர்களுக்கு எதிரான பயணத்திற்கு தலைமை தாங்கிய வங்காளத்தின் நவாப் அலிவர்டி கான் அவர்களால் அமினா மீட்கப்பட்டார். இவரது மகன் சிராஜ் வங்காளத்தின் நவாப் ஆவார். பிளாசி போரில் இவரது மகன் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் அவர்களது கூட்டாளியான மிர் ஜாஃபர் ஆகியோரால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இவர் தனது தாய், சகோதரி மற்றும் மருமகள் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைபிடிக்கப்பட்டவர்கள் 1758 இல் முர்ஸிதாபாத்தில் இருந்து டாக்காவுக்கு (பின்னர் ஜஹாங்கிர்நகர் என்று அழைக்கப்பட்டனர்) நாடுகடத்தப்பட்டு ஜின்ஜிரா அரண்மனையில் அடைத்து வைக்கப்பட்டனர். [4] [5]

இறப்பு[தொகு]

மிர் ஜாபரின் மகன் மீரான் இவர்களை விடுவிக்க உத்தரவிட்டு 1760 இல் முர்ஸிதாபாத்திற்கு திரும்ப அழைத்தார். மீரனின் உத்தரவின் பேரில் டாக்காவிலிருந்து படகில் சென்று கொண்டிருந்தபோது, அமினா பேகம் படகு மூழ்கியதில் இறந்தார். [4][6] முர்ஸிதாபாத்தின் கோஷ்பாக்கில் இவரது குடும்பத்தினருடன் அடக்கம் செய்யப்பட்டார். [7]

குறிப்புகள்[தொகு]

  1. Khan, Abdul Majed (2007) (in en). The Transition in Bengal, 1756-75: A Study of Saiyid Muhammad Reza Khan. Cambridge University Press. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521049825. https://books.google.com/books?id=ZL38wll43-MC&pg=PA20&dq=Amina+Begum+nawab&hl=en&sa=X&ved=0ahUKEwjv2PaikKvXAhWKhJAKHfYiBX0Q6AEIMzAC#v=onepage&q=Amina%20Begum%20nawab&f=false. 
  2. Karim, KM. "Amina Begum". en.banglapedia.org (in ஆங்கிலம்). Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  3. Chaudhury, Sushil (2016) (in en). Trade, Politics and Society: The Indian Milieu in the Early Modern Era. Taylor & Francis. பக். 252. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781351997287. https://books.google.com/books?id=pTUlDwAAQBAJ&pg=PA252&dq=Amina+Begum+nawab&hl=en&sa=X&ved=0ahUKEwjv2PaikKvXAhWKhJAKHfYiBX0Q6AEIJzAA#v=onepage&q=Amina%20Begum%20nawab&f=false. பார்த்த நாள்: 6 November 2017. 
  4. 4.0 4.1 Karim, KM. "Amina Begum". en.banglapedia.org (in ஆங்கிலம்). Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  5. "Jinjira Palace: A tale lost in time". Prothom Alo (in ஆங்கிலம்). Archived from the original on 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  6. Sengupta, Nitish K. (in en). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib. Penguin Books India. https://books.google.com/books?id=kVSh_TyJ0YoC&pg=PA176&dq=Amina+Begum+nawab&hl=en&sa=X&ved=0ahUKEwjv2PaikKvXAhWKhJAKHfYiBX0Q6AEIPTAE#v=onepage&q=Amina%20Begum%20nawab&f=false. பார்த்த நாள்: 6 November 2017. 
  7. "The Tombs of Murshidabad". The Daily Star (in ஆங்கிலம்). 8 March 2008. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினா_பேகம்&oldid=3702214" இலிருந்து மீள்விக்கப்பட்டது