அய்யப்பன் பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேரளத்தில் வாழும் அய்யப்ப பக்தர்கள் அய்யப்பனை வேண்டி நடத்துகிற கலையே அய்யப்பன் பாட்டு. இதை சாஸ்தாம்பாட்டு என்றும் அழைக்கின்றனர். அய்யப்பன் பிறக்கும் முன்னர் இருந்த பந்தளம் நாட்டு ராஜா குடும்பத்துக் கதையை பாட்டாக பாடுவர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போர் உள்ளிட்ட பிற கதைகளையும் பாட்டில் கேட்கலாம்.

நிகழ்த்தும் முறை[தொகு]

இதில் குறைந்தது ஐவர் ஈடுபடுவர். அனைவரிடமும் உடுக்கை இருக்கும். பந்தலில் அமர்ந்துகொண்டு, நிலவிளக்கை ஏற்றி கணபதியையும், சரஸ்வதியையும் போற்றிப் பாடுவர். பின்னரே, மற்ற கடவுள்களைப் பற்றிப் பாட வேண்டும் என்பது விதி. பாட்டுப் பாடுகையில் சிலர் துள்ளவும் செய்வர். தீக்கனலில் இறங்குவதும் உண்டு. இலத்தாளம், உடுக்கை ஆகியவற்றைப் பயன்படுத்துவர். இரவு நேரங்களில் நிகழ்த்தப்படும்.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யப்பன்_பாட்டு&oldid=1606732" இருந்து மீள்விக்கப்பட்டது