தலையாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலையாட்டம் என்பது கேரளக் கலை. புலையசமுதாயத்தினரின் பிரிவான தண்டப்புலையர் இக் கலையை நிகழ்த்துவர். சாம்பவர், வேட்டுவர், உள்ளாடர் உள்ளிட்ட சமுதாயத்தினருள்ளும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு. தெற்கே மலபார், கொச்சி, சேர்த்தல ஆகி இடங்களில் தலையாட்டம் என்றும் மாவேலிக்கரை, பந்தளம், பத்தனந்திட்ட, செங்கன்னூர், வைக்கம், கோட்டயம், இடுக்கி, சங்கனாசேரி, ஆலப்புழை, கொல்லம் உட்பட்ட இடங்களில் முடியாட்டம் என்றும் அழைக்கின்றனர்.

முறை[தொகு]

தாளமேளத்தோடுகூடிய நடன வகை இது. பாட்டு பாடிக்கொண்டு வாத்தியங்கள் முழக்கும்போது, பெண்கள் தலைமுடி சுழற்றி ஆடுவர். நின்றுகொண்டு மட்டுமில்லாமல், தாளத்திற்கு ஏற்ப நடந்தும் வட்டத்தில் நடந்தும் தலையாட்டம் நடத்துவர். முதிர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட்டோரும் பங்கேற்பர். பாட்டு பாடுவதும் மேளம் முழக்குவதும் ஆண்களின் பங்கு.

இசைக் கருவிகள்[தொகு]

மத்தளம், பறை, கரு, கொக்கேரோ ஆகிய பின்னணி இசைக்கருவிகளும், சில இடங்களில் ஓட்டுகிண்ணமோ கைமணியோ மட்டும் பயன்படுத்துவோரும் உள்ளர்.

பயன்பாடு[தொகு]

உற்சவக் காலங்களிலும், திருமணங்களிலும், புனித நீராட்டுவிழாக்களிலும் நிகழ்த்தப்படுவது உண்டு. தண்டப்புலைய சமுதாயத்தில் பெண்குழந்தைகள் வயதுக்கு வந்தால் பதினைந்தாம் திவசம் நாள் அன்று திரண்டு நடத்துவர்.

கலைஞர்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையாட்டம்&oldid=2223446" இருந்து மீள்விக்கப்பட்டது