உள்ளடக்கத்துக்குச் செல்

சர்ப்பப்பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகப் பாட்டு நிகழும் களம்

நாகப்பாட்டு அல்லது சர்ப்பப் பாட்டு என்பது கேரளத்தின் பாரம்பரிய கலை வடிவம். புள்ளுவர் என்னும் சமுதாயத்தவர் நாகப் பாட்டை நடத்தி வருகின்றனர். நாக ஆராதனை நடத்தி வாழும்படி பிரம்மாவினால் வரம் கொடுக்கப்பட்டோர், புள்ளுவர் என்று கூறுகின்றனர். நாகக் கோயில்களிலும் சர்ப்பக்காவுகளிலும், வீட்டுமுற்றத்தும் இது நிகழ்த்தப்படும். புள்ளோர்க்குடம், வீணை, இலத்தாளம் ஆகிய கருவிகளை பயன்படுத்தி, நாகப் பாடல்களை பாடி ஆராதிப்பர். [1].

நிகழ்த்தும் முறை[தொகு]

குருத்தோலை கொண்டு அலங்கரித்த மணிப்பந்தலில் நாகப்பாட்டு நடத்தப்படும். நான்கு புறங்களிலும், தூக்குவிளக்கும் மற்று விளக்குகளும் ஏற்றிவைத்து நிகழ்வைத் தொடங்குவர். அரிசி மாவு, மஞ்சள் பொடி, மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்துண்டாக்கிய பொடி, உமிக்கரி, மஞ்சாடி இலைகளை பொடியாக்கிய பச்சைப்பொடி ஆகிய இவை ஐந்து வண்ணப் பொடிகளை பயன்படுத்துவர். நாகங்களையும் தேவிகளையும் வாழ்த்திப் பாடுவர்[1].

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்ப்பப்பாட்டு&oldid=3243275" இலிருந்து மீள்விக்கப்பட்டது