உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பனேரி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பனேரி
  ஊராட்சி  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் இரஞ்சித் சிங், இ. ஆ. ப
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

இராணி சிறீகுமார்

சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில்
சட்டமன்ற உறுப்பினர்

திலிபன் ஜெய்சங்கர் (அதிமுக)

மக்கள் தொகை 1,825
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அப்பனேரி ஊராட்சி (Appaneri Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே அமைந்துள்ளது. அப்பனேரி ஊராட்சி தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பிப்ரவரி 2020 முதல் தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அப்பனேரி ஊராட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அப்பனேரி ஊராட்சி பழைய அப்பனேரி, புது அப்பனேரி, புதூர் லட்சுமியாபுரம் என மூன்று சிற்றூர்களை உள்ளடக்கியதாகும். இந்த கிராமங்களை சுற்றிலும் பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களான மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தனியார் பொறியியல் கல்லூரி, அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், செவிலியர் பயிற்சி கல்லூரி காணப்படுகின்றன. இந்த கிராமங்களில் முக்கிய விளைபொருட்கள் பருத்தி, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு மற்றும் மக்கா சோளம் போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1825 ஆகும். இவர்களில் பெண்கள் 965 பேரும் ஆண்கள் 860 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[3]

அடிப்படை வசதிகள்எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள்118
சிறு மின்விசைக் குழாய்கள்7
கைக்குழாய்கள்11
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்4
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்2
உள்ளாட்சிக் கட்டடங்கள்17
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள்2
ஊரணிகள் அல்லது குளங்கள்7
விளையாட்டு மையங்கள்1
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள்26
ஊராட்சிச் சாலைகள்6
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள்5

சிற்றூர்கள்

[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[4]:

  1. பழைய அப்பனேரி
  2. புது அப்பனேரி
  3. புதூர் லட்சுமியாபுரம்

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved நவம்பர் 3, 2015.
  4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பனேரி_ஊராட்சி&oldid=3651553" இலிருந்து மீள்விக்கப்பட்டது