அண்ணா அறிவியல் மையம், திருச்சிராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அண்ணா அறிவியல் மையம், திருச்சிராப்பள்ளி
நிறுவப்பட்டது10 சூன் 1999
அமைவிடம்புதுக்கோட்டை சாலை ,திருச்சிராப்பள்ளி
வகைகோளரங்கம்
வலைத்தளம்http://tnstc.gov.in/anna-science-centre.html


Moon shown in planetarium dome.

அண்ணா அறிவியல் மையம் என்ற கோளரங்கம் இந்தியாவின் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.[1][2]

நுழைவுவாயில்

அமைவிடம்[தொகு]

இந்தக் கோளரங்கம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகிலுள்ள திருச்சி மற்றும் புதுக்கோட்டை இடையேயான  தேசிய நெடுஞ்சாலை 210 யில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

திருச்சிராப்பள்ளியில் உள்ள அண்ணா அறிவியல் மையம், தமிழக அரசால் ஜூன் 10, 1999 அன்று திறக்கப்பட்டது. இந்த மையத்திற்கு அருகிலுள்ள மாவட்டங்களான  புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், திண்டுக்கல், கரூர் மற்றும் மதுரை போன்ற  மாவட்டங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கோள்களைப் பார்வையிட வருகிறார்கள்.

அம்சங்கள்[தொகு]

இந்தக் கோளரங்கத்தில் "சுற்றுச்சூழல் தொகுப்பு" உள்ளது. இதன் கருப்பொருள்கள்: சுற்றுச்சூழல் அமைப்புகள், உயிர்-புவிசார் வேதியியல் சுழற்சிகள், உயிர்-வேறுபாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவையாகும். இதில்  "ஷார்க் தீவு", மேஜிக் ஷோ, ரோலர் கோஸ்டர் போன்ற பல முப்பரிமானப் படங்கள் உள்ளது.  மேலும் இதில் ''விஜயன் பிரசார்", என்ற எடுசாட் வசதியைக் கொண்டுள்ளது. [3] இதன் மூலம் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில்  உள்ள அறிவியல் மையங்களைப் பற்றிய விவரங்களை அறியலாம்.[4]

நிகழ்ச்சிகள்[தொகு]

இங்கு நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் உள்ளது. தமிழ் நிகழ்ச்சிகள் காலை 10.30, 1.00 மணி மற்றும் 3.30 மணிக்கும். ஆங்கில நிகழ்ச்சிகள் 11.45 மணி, 2.15 மணி மற்றும் 4.45 மணியிலும் நடைபெறும்.[5]

இவற்றையும் காண்க[தொகு]

  • List of planetariums

சான்றுகள்[தொகு]

ஜுராசிக் கால விலங்கின மாதிரிகள் கொண்ட ஒரு பூங்கா முக்கிய கட்டிடத்தின் அருகே அமைந்துள்ளது.

வெளிஇணைப்புகள்[தொகு]