அசாந்த த மெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசந்தா டி மெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அசாந்த டி மெல்
Ashantha de Mel
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அசாந்த லக்தாச பிரான்சிசு டி மெல்
பிறப்பு9 மே 1959 (1959-05-09) (அகவை 64)
கொழும்பு
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 1)17 பெப்ரவரி 1982 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு17 திசம்பர் 1986 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 20)13 பெப்ரவரி 1982 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப30 அக்டோபர் 1987 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 17 57 42 70
ஓட்டங்கள் 326 466 918 577
மட்டையாட்ட சராசரி 14.17 14.56 19.12 15.18
100கள்/50கள் 0/0 0/0 1/2 0/0
அதியுயர் ஓட்டம் 34 36 100* 39*
வீசிய பந்துகள் 3,518 2,735 7,056 3,347
வீழ்த்தல்கள் 59 59 109 69
பந்துவீச்சு சராசரி 36.94 37.91 37.90 37.23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 2 3 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/109 5/32 6/109 5/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 13/– 22/– 15/–
மூலம்: ESPNcricinfo, 31 சூலை 2015

அசாந்த டி மெல் (Ashantha de Mel, சிங்களம்: අශාන්ත ද මෙල්, பிறப்பு: மே 9, 1959 முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை துடுப்பாட்ட அணிக்காக தேர்வு துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வடிவங்களிலும் விளையாடியுள்ளார். மேலும் இவர் தேசிய அணிக்கான தேர்வாளராக தற்போது உள்ளார் . அவர் இலங்கைத் துடுப்பாட்ட அணி தேர்வுத் துடுப்பாட்ட தகுதி பெற்ற பிறகு நடைபெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் பந்தை இவர் வீசினார்.[1] 1980 களில் இருந்த சிறந்த மித வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். இவர் 1980 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 1981 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 1982 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் பாக்கித்தான் அணியின் சார்பாக விளையாடினார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 4,382 ஓட்டங்களையும் , பட்டியல் அ போட்டிகளில் 2,569 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை அணி , இலங்கை அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார்.

நவம்பர் 2018 இல், அவர் இலங்கை துடுப்பாட்ட வாரியத்தில் தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.இதற்கு முன்பாக இவர் 2012 ஆம் ஆண்டில் இந்தப் பதவியினை வகித்துள்ளார்.[2]

சர்வதேச போட்டிகள்[தொகு]

இவர் தேர்வுத் துடுப்பாட்ட சராசரி அதிகமாகக் கொண்டுள்ளார்.இந்தியக் கண்டத்திற்கு வெளியே ஒரே ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்யில் மட்டுமே இவர் கலந்துகொண்டுள்ளார். இதுவே அதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. மட்டையட்டத்தில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறியுள்ளார். இவர் மூன்று முறை ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

கொழும்பின் இசிபதனா கல்லூரியில் கல்வி கற்ற அவர் பின்னர் கொழும்பு ராயல் கல்லூரிக்கு சென்று உயர்கல்வியினை கற்றார்.

1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் ஒரு பந்து வீச்சாளராக சிறப்பான ஆடட்த்திறனை இவர் வெளிப்படுத்தினார்.

பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஹெடிங்லேயில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் இவர் அவர் 39 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.ஆனால் அந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் தி கவுண்டி மைதானத்தில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 32 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பற்றி நியூசிலாந்து அணியினை 181 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்வதற்கு உதவினார்.மேலும் அந்தத் தொடரில் மொத்தமாக 17 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்தார். முதல் இடத்தில் இந்தியப் பந்துவீச்சாளர் ரோஜர் பின்னி இருந்தார்.

1985 இந்தியாவுக்கு எதிராக[தொகு]

1985 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 64 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ரவி சாஸ்திரி, கபில் தேவ் மற்றும் திலீப் வெங்சர்கர் போன்ற வீரர்கள் உள்பட ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.இரண்டாவது ஆட்டப் பகுதியில் இலக்குகளைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Packer's revolution". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 May 2017.
  2. "Sri Lanka Cricket announce new selection panel". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாந்த_த_மெல்&oldid=2932897" இலிருந்து மீள்விக்கப்பட்டது