2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஒன்பதாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (9TH SAF GAMES) பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத் நகரில் 2004 மார்ச் 29 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற்றது. இப்போட்டியில் முதல் தடவையாக ஆப்கானிஸ்தான் கலந்து கொண்டது. 103 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய பாக்கிஸ்தான் இரண்டாமிடத்தையும், இலங்கை மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. முதல் தடவையாக கலந்து கொண்ட ஆப்கானிஸ்தான் 1 தங்கம் உட்பட மொத்தம் 32 பதக்கங்களை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பங்குபெற்ற நாடுகள்[தொகு]

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்[தொகு]

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 170
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 169
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 213
  • மொத்தப் பதக்கங்கள் - 552

விளையாட்டுக்கள்[தொகு]

அதிகாரபூர்வமாக 20 விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

பதக்க நிலை[தொகு]

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  இந்தியா 103 57 32 192
2  பாக்கித்தான் 38 55 50 143
3  இலங்கை 17 32 57 106
4  நேபாளம் 7 6 20 33
5  வங்காளதேசம் 3 13 24 40
6 ஆப்கானிஸ்தான் 1 3 28 32
7  பூட்டான் 1 3 2 06
8  மாலைத்தீவுகள் 0 0 0 00

ஆதாரம்[தொகு]

  • டெயிலிநியுஸ், மார்ச் 23 - ஏப்ரல் 7 2004
  • 'சாப்' விளையாட்டுத் தகவல்கள் (சிங்கள மூலம்) -ராஜா கட்டுகம்பொல ISBN 955-99854-0-X

வெளி இணைப்புகள்[தொகு]