உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதராக்சிகுளோரோகுயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(RS)-2-[{4-[(7-குளோரோகுயினோலின்-4-ஐல்)அமினோ]பென்டைல்}(எதில்)அமினோ]எதனால்
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் பிளேக்நில்
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a601240
கட்டுப்பாட்டு உரிமத் தரவு US Daily Med:link
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை D(AU) ?(US)
சட்டத் தகுதிநிலை Prescription Only (S4) (AU) POM (UK) ?-only (அமெரிக்கா) ? Prescription only
வழிகள் வாய்வழி, (மாத்திரைகள்)
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு மாறுபடுவீதம் (74% சராசரியாக); Tmax = 2–4.5 மணி நேரங்கள்
புரத இணைப்பு 45%
வளர்சிதைமாற்றம் கல்லீரல்
அரைவாழ்வுக்காலம் 32–50 நாள்கள்
கழிவகற்றல் பெரும்பாலும் சிறுநீரகம் (மாற்றமேதும் ஏற்படாத மருந்துப்பொருளாக 23–25% ), மற்றும் பித்தநீர் (<10%)
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 118-42-3 Y
ATC குறியீடு P01BA02
பப்கெம் CID 3652
IUPHAR ligand 7198
DrugBank DB01611
ChemSpider 3526 Y
UNII 4QWG6N8QKH Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D08050 Y
ChEBI [1] N
ChEMBL CHEMBL1535 Y
ஒத்தசொல்s ஐதராக்சிகுளோரோகுயின் சல்பேட்டு
வேதியியல் தரவு
வாய்பாடு C18

H26 Br{{{Br}}} Cl N3 O  

மூலக்கூற்று நிறை 335.872 கி/மோல்
  • InChI=1S/C18H26ClN3O/c1-3-22(11-12-23)10-4-5-14(2)21-17-8-9-20-18-13-15(19)6-7-16(17)18/h6-9,13-14,23H,3-5,10-12H2,1-2H3,(H,20,21) Y
    Key:XXSMGPRMXLTPCZ-UHFFFAOYSA-N Y

ஐதராக்ஸிகுளோரோகுயின் (HCQ), இது பொதுவாக ப்ளேகுவானில் என்ற வணிகப் பெயரில் விற்பனை செய்யப்படும் மருந்தாகும். இது மலேரியா குளோரோகுயினுக்கு கட்டுப்படும் தன்மை உள்ள பகுதிகளில் மலேரியா வராமல் தடுப்பதற்கும், மலேரியா வந்த பிறகு சிகிச்சையளிப்பதற்கும் பயன்படும் மருந்துப் பொருளாக உள்ளது.[1] முடக்கு வாதம், லூபஸ் மற்றும் போர்பிரியா கட்னேனியா டார்டா சிகிச்சை ஆகியவை பிற பயன்பாடுகளில் அடங்கும். இது வாய் வழியாக உட்கொள்ளப்படும் மருந்தாகும். கொரோனா வைரஸ் தொற்று 2019 (COVID-19) க்கான சிகிச்சையில் மருந்துப்பொருளாகவும் இது ஆய்வு செய்யப்படுகிறது.[2][3]

இந்த மருந்தின் பொதுவான பக்க விளைவுகளில் வாந்தி, தலைவலி, பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தசை பலவீனம் ஆகியவை அடங்கும்.[1] கடுமையான பக்க விளைவுகளில் ஒவ்வாமை, பார்வைக் குறைபாடுகள் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவையாக உள்ளன.[4] எல்லா ஆபத்துகளையும் விலக்க முடியாது என்றாலும், கர்ப்ப காலத்தில் வாத நோய்க்கு இது ஒரு சிகிச்சையாக உள்ளது.[5] ஐதராக்சிகுளோரோகுயின் மலேரியா எதிர்ப்பு மற்றும் 4-அமினோகுயினோலின் மருந்துகளின் குடும்பத்தைச் சார்ந்ததாக உள்ளது.

ஐதராக்ஸிகுளோரோகுயின் 1955ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மருத்துவ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டது.[1] இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ள தேவைப்படும் பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள மருந்துப் பொருளாகும்.[6] 2017 ஆம் ஆண்டில், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மருத்துவச் சீட்டுகளின் அடிப்படையிலான ஆய்வில், அமெரிக்காவில் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் 128 வது இடத்தைப் பெற்ற மருந்தாகும்.[7][8]

மருத்துவ பயன்பாடு

[தொகு]

ஐதராக்சிகுளோரோகுயின் என்பது உள்ளாரப் பரவிய இணைப்புத் திசுக்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட அழற்சி தசைநார்ப் புரத நோய், முடக்கு வாதம் போன்ற வாதம் தொடர்பான நோய்கள், போர்பைரியா குடேனியா டார்டா, க்யூ காய்ச்சல் மற்றும் சில வகை மலேரியா ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுகிறது.[1] உள்ளாரப் பரவிய இணைப்புத் திசுக்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட அழற்சி தசைநார்ப் புரத நோய்க்கான சிகிச்சையாகப் பயன்படுகிறது.[9] சில வகையான மலேரியாக்கள் மற்று் சிக்கலான நோய்களுக்கு வேறுபட்ட மற்றும் கூடுதல் மருந்துப் பொருள்கள் தேவைப்படுகின்றன.[1]

முதன்மை ஸ்ஜோர்ஜென் நோய் அறிகுறிக்கு சிகிச்சை அளிக்க இது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது, ஆனால், இது திறன்வாய்ந்ததாக இருக்கவில்லை.[10] ஐதராக்சிகுளோரோகுயினானது, இலைம கீல்வாத நோய்க்கான சிகிச்சையில் இது பரவலாக பயன்படுத்தப்பட்டது. இது கீல்வாதம் போன்ற நோய்க்கான சிகிச்சைகளுக்கு தேவைப்படுவது போன்ற எதிர் சுருளுயிரிச் செயல்பாட்டையயும், எதிர் அழற்சி செயல்பாட்டினையும் கொண்டிருக்கும் தன்மையுடையதாக இருந்தது.[11]

பொருந்தாக்குறிகள்

[தொகு]

இந்த மருந்தின் மேல் ஒட்டப்பட்டுள்ள விவரச்சீட்டு 4-அமினோகுயினோலின் சேர்மங்கள் சார்ந்த மருந்துப்பொருள்களுக்கு அதிநுண்ணிணக்கம் அறியப்பட்ட தனிநபர்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படக்கூடாது என்ற அறிவறுத்தத்தைக் கொண்டுள்ளது.[12] வேறு வகையான பொருந்தாக்குறிகளும் காணப்படுகின்றன.[13][14] இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் தடிப்புத் தோலழற்சி ஆகியவற்றைக் கொண்ட நோயாளிகளுக்கு இம்மருந்தைக் கையாள்வதில் போதுமான எச்சரிக்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

பக்க விளைவுகள்

[தொகு]

இம்மருந்தின் மிகப்பொதுவான தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் மிதமான குமட்டல் மற்றும் அரிதான வயிற்றுத் தசைப்பிடிப்புகளுடனான வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். மிகவும் தீவிரமான தீய விளைவுகளானவை கண்ணைப் பாதிக்கக்கூடிய, மருந்தளவு தொடர்பான விழித்திரை நோய் ஆகும். இது ஐதராக்சிகுளோரோகுயினின் பயன்பாடு நிறுத்தப்பட்டதற்கும் பிறகும் தொடரக்கூடியது.[1] தீவர மலேரியாவிற்கான குறுகிய கால சிகிச்சையினால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் இதயப் பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு, அடிவயிற்றுப் பிடிப்புகள், போதிய பசியின்மை, தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவையாகும்.[1]

மண்டலிய செம்முருடு அல்லது முடக்கு வாதம் போன்றவற்றுக்கான நீண்ட கால சிகிச்சையின் காரணமாக, கண் நிறமூட்டல், ஆக்னே வல்காரிஸ், குருதிச்சோகை, முடியின் நிறமிழப்பு, வாய் மற்றும் கண்களில் கொப்புளங்கள், இரத்தக் கோளாறுகள், தசைவலிப்பு, பார்வையில் ஏற்படும் சிரமங்கள், குறைக்கப்பட்ட துலங்கல்கள், மனவெழுச்சி மாறுபாடுகள், தோல் நிறத்தின் அடர் நிறம், செவித்திறன் குறைபாடு, தோல் அரிப்பு, தொடர் நமைச்சல், கல்லீரல் பிரச்சனைகள் அல்லது கல்லீரல் செயலிழப்பு, முடியிழப்பு, தசை செயலிழப்பு, பலவீனம் அல்லது தசை மெலிவு, கெட்ட கனவுகள், காளாஞ்சகப்படை, வாசித்தல் குறைபாடுகள், காதிரைச்சல், jதோல் வீக்கம் மற்றும் செதில் உதிர்தல், தோல் அழற்சி, தலைகிறுகிறுப்பு, எடை இழப்பு மற்றும் எப்போதாவது ஏற்படும் கட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு போன்றவை தீவிரமான தீயவிளைவுகளாகும்.[1] ஐதராக்சிகுளோரோகுயின் ஒரு நோயாளியிடம் தற்போதைய நிலையில் காணப்படும் காளாஞ்சகப்படை மற்றும் போர்ஃபைரியா ஆகியவற்றை மேலும் மோசமான நிலையை அடையச் செய்யும்.[1]

மேலும், குறிப்பாக குழந்தைகள் ஐதராக்சிகுளோரோகுயின் மோசமான தீய விளைவுகளுக்கு ஆளாகும் ஆபத்து நிறைந்தவர்கள் ஆவர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "Hydroxychloroquine Sulfate Monograph for Professionals". The American Society of Health-System Pharmacists. 20 March 2020. Archived from the original on 20 March 2020. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
  2. "A systematic review on the efficacy and safety of chloroquine for the treatment of COVID-19". Journal of Critical Care. March 2020. doi:10.1016/j.jcrc.2020.03.005. பப்மெட்:32173110. http://www.sciencedirect.com/science/article/pii/S0883944120303907. 
  3. Grady, Denise (1 April 2020). "Malaria Drug Helps Virus Patients Improve, in Small Study". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on 1 April 2020. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
  4. "Guidance on patients at risk of drug-induced sudden cardiac death from off-label COVID-19 treatments". newsnetwork.mayoclinic.org. 25 March 2020.
  5. "BSR and BHPR guideline on prescribing drugs in pregnancy and breastfeeding-Part I: standard and biologic disease modifying anti-rheumatic drugs and corticosteroids". Rheumatology 55 (9): 1693–7. September 2016. doi:10.1093/rheumatology/kev404. பப்மெட்:26750124. https://academic.oup.com/rheumatology/article/55/9/1693/1744535. பார்த்த நாள்: 17 ஏப்ரல் 2020. 
  6. World Health Organization (2019). World Health Organization model list of essential medicines: 21st list 2019. Geneva: World Health Organization. hdl:10665/325771. WHO/MVP/EMP/IAU/2019.06. License: CC BY-NC-SA 3.0 IGO.
  7. "The Top 300 of 2020". ClinCalc. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  8. "Hydroxychloroquine Sulfate - Drug Usage Statistics". ClinCalc. Archived from the original on 11 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  9. "Hydroxychloroquine in dermatology: New perspectives on an old drug". The Australasian Journal of Dermatology. October 2019. doi:10.1111/ajd.13168. பப்மெட்:31612996. 
  10. "Is hydroxychloroquine effective in treating primary Sjogren's syndrome: a systematic review and meta-analysis". BMC Musculoskeletal Disorders 18 (1): 186. May 2017. doi:10.1186/s12891-017-1543-z. பப்மெட்:28499370. 
  11. "Therapy for Lyme arthritis: strategies for the treatment of antibiotic-refractory arthritis". Arthritis and Rheumatism 54 (10): 3079–86. October 2006. doi:10.1002/art.22131. பப்மெட்:17009226.  வார்ப்புரு:Free access
  12. "Plaquenil- hydroxychloroquine sulfate tablet". DailyMed. 3 January 2020. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
  13. "Plaquenil (hydroxychloroquine sulfate) dose, indications, adverse effects, interactions". pdr.net. பார்க்கப்பட்ட நாள் 2020-03-19.
  14. "Drugs & Medications". webmd.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-19.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராக்சிகுளோரோகுயின்&oldid=3928339" இலிருந்து மீள்விக்கப்பட்டது