உள்ளடக்கத்துக்குச் செல்

மீலாதுன் நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

06:20, 5 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

மிலாடி நபி ( அல்லது மிலாத்-உன்-நபி, ஆங்: Mawlid, அரபு மொழி: مَوْلِدُ النَبِيِّmawlidu n-nabiyyi, “நபிகளின் பிறந்தநாள்” அல்லது mawlid an-nabī, சிலநேரங்களில் ميلاد , மிலாட் என்பது இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி அல்-அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும். [1]

மாலிட் என்ற சொல் உலகின் சில பகுதிகளில் ,எகிப்து போன்றவை, பிற வரலாற்றுச் சிறப்பு மிக்க சுஃபி பெரியோர்களின் பிறந்த நாள் கொண்ட்டாட்டங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.[2]


பெயரியல்

மௌலிட் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தருத்தல், வம்சாவளி என்ற பொருள்தருகின்ற அராபிய வேர்ச்சொல் (அரபு மொழி: ولد‎) இடமிருந்து பெறப்பட்டுள்ளது. [3] தற்கால பயன்பாட்டில், இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது.[1]

பண்டிகை நாள்

இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா இசுலாம்|சியாக்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சுன்னி இசுலாம்|சுன்னிக்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.


மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Mawlid. Reference.com
  2. In pictures: Egypt's biggest moulid. BBC News.
  3. அரபு மொழி: قاموس المنجد‎ – Moungued Dictionary (paper), or online: Webster's Arabic English Dictionary
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீலாதுன்_நபி&oldid=1014074" இலிருந்து மீள்விக்கப்பட்டது