வீட்டுக் காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீட்டுக் காகம்
House-Crow444.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு பறவை
வரிசை: பஸெரிபோர்மெஸ்
குடும்பம்: கோர்விடே
பேரினம்: கோர்வஸ்
இனம்: ஸ்பிளெண்டென்ஸ்
இருசொற்பெயர்
கோர்வஸ் ஸ்பிளெண்டன்ஸ்
லூயிஸ் ஜீன் பீஎரே வெய்லோட், 1817

வீட்டுக் காகம் (கோர்வஸ் ஸ்பிளெண்டன்ஸ்) (ஆங்கிலம்:House Crow) மற்றும் கொழும்பு காகம் என வழங்கப்படும் காக குடும்பத்தைச் சேர்ந்த, ஆசியாவைத் தனது தோற்றுவாயாய்க் கொண்டு விளங்கும் பொதுவான பறவையாகும். ஆனாலும், கப்பல் போக்குவரத்தின் காரணமாக இந்நாளில், இந்தப் பறவை உலகின் பல இடங்களிலும் காணப்படுகின்றது. இது ஐரோப்பாவில் காணப்படுகின்ற ஜாக்டோ (Jackdaw) எனப்படும் காகம் மற்றும் கரியன் காகம் (Carrion Crow) என்னும் இரு வகைக் காகங்களுக்கு இடைப்பட்டதான தோற்றவமைப்பைக் கொண்டு காணப்படும். ஆனாலும் இது, குறித்த இரண்டு வகைக் காகங்களையும் விட மெல்லியதாகும். நெற்றி, உச்சி, தொண்டைப் பகுதி, மேல் மார்பு என்பன மினுக்கமான கடும் கரு நிறத்தைக் கொண்டுள்ள அதேவேளை, கழுத்து மற்றும் மார்பு ஆகியன சாம்பல் கலந்த மண்ணிறமானது. சிறகுகளும், வாலும், கால்களும் கருநிறமானவை.

இவற்றின் பல்வேறு உடற் பகுதிகளின் நிறங்களின் கடுமைத்தன்மையும், சொண்டின் தடிப்பும் வேறுபாடாக அமைந்த, பல பிரதேச வேறுபாடுகளைக் கொண்ட காகங்கள் காணப்படுகின்றன.

முதல் சாதம்[தொகு]

ஒரு வீட்டில் வைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும் காகம்.

ஒவ்வொரு நாளும் தமிழர்களின் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் முதல் பங்கு வீட்டுக் காகத்திற்கு வைக்கப்பட்டு அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உசாத்துணைகள்[தொகு]

  1. BirdLife International (2004). Corvus splendens. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 12 May 2006. Database entry includes justification for why this species is of least concern
"http://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுக்_காகம்&oldid=1552876" இருந்து மீள்விக்கப்பட்டது