பயனர்:தென்காசி சுப்பிரமணியன்/முதற்பக்க பங்களிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உங்களுக்குத் தெரியுமா திட்டம்[தொகு]

நான் பங்களித்து முதற்பக்க உங்களுக்குத் தெரியுமா பகுதியில் இடம்பெற்ற கட்டுரைகள்

முதற்பக்க கட்டுரைகள் அறிவிப்புத் திட்டம்[தொகு]

நான் பங்களித்து முதற்பக்கத்தில் இடம்பெற்ற கட்டுரைகள்

முதற்பக்கப் படிமம் அறிவிப்பு[தொகு]


முதற்பக்க அறிமுகம்[தொகு]

தென்காசி சுப்பிரமணியன், காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் படிக்கும் தென்காசியைச் சேர்ந்த இயந்திரப் பொறியியல் மாணவர். தமிழ் விக்கிப்பீடியாவில் 15 சூலை 2011 முதல் பங்களித்து வருகிறார். மயன் செங்கோண முக்கோண விதி, புடைநொடி ஆகிய படங்களை தமிழ் விக்கிப்பீடியாவுக்காக வரைந்திருக்கிறார். தமிழ் தொன்மவியல், தமிழர் வரலாறு, அண்டவியல், தமிழர் அறிவியல், சித்தரியல், நாகரிகங்கள், ஆயுதங்கள் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். குமரிக்கண்டம், தென்காசி பாண்டியர், பேரண்டத்தில் புவியின் அமைவிடம், சங்க கால வானியல், சித்தர்களின் அண்டவியல், இன்கா தகவல் பரிமாற்றம், பினாகா ஆகியவை இவர் அதிகமாக பங்களித்த கட்டுரைகளில் சில.

தள அறிவிப்பு[தொகு]

தென்காசி சுப்பிரமணியன், தமிழ்நாட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். தமிழர் வரலாறு, அண்டவியல், தமிழர் அறிவியல், சித்தரியல் முதலிய துறைகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?

பதக்கங்கள்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
குறுகிய காலத்துக்குள் விக்கியின் முறைகளைக் கற்றுத் தேர்ந்து பல நல்ல கட்டுரைகளை உருவாக்கியுள்ள தங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 14:28, 10 ஆகத்து 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

---

உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்த காரணம்பற்றி இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கவும் பல கட்டுரைகளை வளர்த்தெடுக்கவும் வாழ்த்துகள் தென்காசி. :) சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 17:03, 12 நவம்பர் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

---

விக்கிப்புயல் பதக்கம்
தமிழர் வரலாறு தொடர்பாக நீங்கள் எழுதி வரும் கட்டுரைகள், தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சியில் நீங்கள் காட்டும் அசுர உழைப்பை வியந்து இப்பதக்கத்தை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள் இரவி (பேச்சு) 08:22, 25 சூலை 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

---

சிறந்த நகைச்சுவை உணர்வாளர் பதக்கம்
பேச்சுப் பக்கங்களைக் கண்டு புன்முறுவல் பூக்கிறேன் என்றால் அங்கு நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று பொருள் :) இரவி (பேச்சு) 18:12, 8 சூன் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

---

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தாங்களும் ஆதவனும் கட்டுரைப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்படுகின்றீர்கள். ஜூன் 24ம் தேதியான இன்று இருவரும் 24 கட்டுரைகள் என சம அளவில் உள்ளீர்கள். பல்வேறு துறைசார் கட்டுரைகளை தொகுத்து வியப்பில் ஆழ்த்தி வருவதால் இப்பதக்கம் தங்களுக்கு!. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:12, 24 சூன் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

---

Wikipedia Motivation Award விக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம்
சுப்பிரமணிய சுவாமிகள் புதிய பல பயனர்களை ஆர்வமோடு பதக்கமிட்டு ஊக்குவிப்பதால் அடியேன் யாழ்ஸ்ரீயான யாம் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:12, 2 நவம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

---

மரியாதை மிக்கவர் பதக்கம்
பெருந்தகையே இப் பதக்கத்தை இவ் அடியேன் வழங்குகின்றேன். ♥ ஜீவதுவாரகன் ♥ ♀ பேச்சு ♀ 06:32, 2 நவம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

இலக்குகளுடைய பங்களிப்புகளுக்கானவை[தொகு]

வணக்கம், தென்காசி சுப்பிரமணியன்/முதற்பக்க பங்களிப்புகள்!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:15, 2 பெப்ரவரி 2013 (UTC)

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
சூன் 2013 கட்டுரைப் போட்டியில் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சுறுசுறுப்புடன் இயங்கி பலரின் பரோட்டாக்களை முதலில் இருந்து எண்ண வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் :) --இரவி (பேச்சு) 14:31, 12 சூலை 2013 (UTC)