தாய்லாந்து ராமாயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாய்லாந்து ராமாயணத்தின் படி வரையப்பட்ட தேர்

தாய்லாந்து ராமாயணம் (ராமகியென், รามเกียรติ์) என்பது தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். இது வால்மீகி ராமாயனத்தை மூலமாக கொண்டது.[1] இதன் தொலைந்து போன மூலப்பகுதிகள் 1767ஆம் ஆண்டு நட்ந்த அயோத்தியாவின் அழிவில் சிதைந்து போன இக்காப்பியம், 1797ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னனான முதலாம் இராமன் ஆட்சியில் மீளுருவாக்கப்பட்டது. இரண்டாம் இராமன் ஆட்சியில் இக்காப்பியத்தின் மூலம் தாய்லாந்து நாடகமான கொன், அந்நாட்டவர்களின் கலை, இலக்கியம் என அனைத்திலும் வேரூன்றியது.

இக்காப்பியத்தின் மூலம் வால்மீகி ராமாயணமாக இருந்த போதிலும் இதன் நடைத்தன்மை, போர் வர்ணனை, ஆடைகள், இதில் கூறப்படும் நில அமைப்புகள், இயற்கை காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை தாய்லாந்து பண்பாட்டுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பொருளடக்கம்

[தொகு] பாத்திர அமைப்பு

இதன் பாத்திர அமைப்புகள் வால்மீகி ராமாயணத்துடன் ஒத்து வந்த போதிலும் இதன் பாத்திர பெயர்கள் தாய் மொழிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுளது.

[தொகு] கடவுள்கள்

தாய் மொழிப்பெயர் - தமிழ்ப்பெயர்
  1. ஃப்ரா ஈசுவா/சிவ்வா - சிவன்
  2. ஃப்ரா நரய்/விட்சானு - நாராயணன்
  3. ஃப்ரா ப்ரோம் - பிரம்மன்
  4. ஃப்ரா உமா-தேவ்வி - பார்வதி
  5. ஃப்ரா லட்சமி - லட்சுமி
  6. ஃப்ரா இன் - இந்திரன்
  7. ஃப்ரா ஆ-தித் - சூரியன்
  8. ஃப்ரா பாய் - வாயு
  9. ஃப்ரா வித்சனுக்கம் - விசுவகர்மன்
  10. மலி வாரத் - தர்மக்கடவுள்

[தொகு] மானிடர் பாத்திரம்

  1. ஃப்ரா ராம் - ராமன்
  2. ஃப்ரா லக் - இலக்குவன்
  3. நங் சித - சீதை
  4. தோட்சரோத் - தசரதன்
  5. நங் கஒசுரியா - கௌசல்யா
  6. நங் கையகேசி - கைக்கேயி
  7. நங் சமுத்-தெவ்வி - சுமித்ரை

[தொகு] ராமனின் நண்பர்கள்

  1. ஹனுமான் - ஆஞ்சநேயர்
  2. பலி திரத் - வாலி
  3. சுக்ரீப் - சுக்ரீவன்
  4. ஒங்கோட் - அங்கதன்
  5. ஃபிபேக் - விபீடனன்
  6. சோம்ஃபுஃபன் - சாம்பவான்

[தொகு] ராமனின் எதிரிகள்

  1. தோட்சகன் - இராவணன்
  2. இந்தரசித் - இந்திரஜித்
  3. கும்பகன் - கும்பகர்ணன்
  4. மையரப் - பாதாள லோக அரசன்
  5. தோட், கொர்ன், ட்ரிசியன் - இராவணனின் மகன்கள்

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] மேலும் படிக்க

  • Thai Ramayana (abridged) as written by King Rama I, ISBN 974-7390-18-3
  • The story of Ramakian - From the Mural Paintings along the Galleries of the Temple of the Emerald Buddha, ISBN 974-7588-35-8

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாய்லாந்து_ராமாயணம்&oldid=1080144" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்