இரட்டை விண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


இரட்டை விண்மீன், கீழே நகரும் பச்சை குறியீடு திண்மை மாற்றத்தை காட்டுகிறது

இரட்டை விண்மீன் (binary star) என்பது தமது ஒரே பொது நிறை மையத்தைச் சுற்றி வரும் இரண்டு விண்மீன்களைக் கொண்ட ஒரு விண்மீன் தொகுதி ஆகும். வெளிச்சமான விண்மீன் முதன்மையானது எனவும் மற்றையது அதன் துணை விண்மீன், அல்லது துணை எனவும் அழைக்கப்படுகிறது.

வானத்தில் சில விண்மீன்கள் இரட்டையாக தென்படும். ஆரம்பத்தில் மானிடர் இது காட்சிப் பிழை என நினைத்ததுண்டு. ஆனால் அவை உண்மையாகவே இரட்டை விண்மீன்கள் என்று பின்னர் தான் கண்டறியப்பட்டது.[1]

சிறப்பு[தொகு]

;இரட்டை விண்மீன்களின் சுற்றுப்பாதை
ஹப்பிள் வான் தொலைநோக்கியால் படம்பிடிக்கப்பட்ட ஸீரியஸ் A மற்றும் B இரட்டை விண்மீன்கள்
இதன் முக்கியத்துவத்தின் காரணம்

வானத்தில் தொலைவில் இருக்கும் விண்மீனின் நிறையை கண்டறிவது, முன் காலத்தில் மிகக் கடினம். ஆனால் அந்த விண்மீன் இரட்டை விண்மீன்களுள் ஒன்றாக இருந்தால் நியூட்டன் விதிகளை பயன்படுத்தி, அவைகள் ஒன்றை ஒன்று சுற்றி வரும் அளவைகளையும், அவைகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் பாதிப்பை வைத்தும் அவற்றின் நிறையை எளிதாக தீர்மானிக்கலாம்.

படக்குறிப்பு

கீழ் படத்திலுள்ள இரட்டை விண்மீன்கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதாலே வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டன் விதிகளை கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.

எ.கா.[தொகு]

  1. சூரியனும் துர்தேவதையும் இரட்டை விண்மீன்கள்.[2]
  2. மதம்: மகாபாரதத்தில் வரும் அசுவினி சகோதரர்களின் அவதாரமாக கருதப்படும் நகுல சகாதேவர்கள் இரட்டை விண்மீன்களே.

மேற்கோள்[தொகு]

  1. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ப-69, இரட்டை நட்சத்திரங்கள், ISBN 978 8189936228
  2. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ப-122, துர்தேவதை, ISBN 978 8189936228

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_விண்மீன்&oldid=1667479" இருந்து மீள்விக்கப்பட்டது