தமிழக முத்திரைக் காசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்ககால பாண்டியர் வெளியிட்ட வெள்ளி முத்திரைக் காசுகள்

தமிழகத்தின் முத்திரைக் காசுகள் பெரும்பாலும் பொ.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் பொ.மு. 2ஆம் நூற்றாண்டினவையாக இருக்கின்றன. இவை கிடைக்கப்பட்ட இடம், இவற்றின் காலம் கொண்டு நடன காசிநாதன் என்பவர் ஒரு அட்டவனையும் வெளியிட்டுள்ளார்[1].

அட்டவணை[தொகு]

ஊர் மாவட்டம் நூற்றாண்டு (பொ.மு.)
மாம்பலம் சென்னை 5
வெம்பாவூர் திருச்சி 5
வீரசிகாமணி நெல்லை 5
தாராபுரம் ஈரோடு 5
கன்னியன்குட்டை சேலம் 4
தொண்டைமான் நத்தம் தென்னார்க்காடு 4
சாவடிப்பாளையம் கோவை 4
பெணார் கோவை 4
போடி நாயக்கனூர் மதுரை 2
அழகன் குளம் இராமநாதபுரம் 2
கரூர் திருச்சி 2
காவிரிப்பூம்பட்டினம் தஞ்சாவூர் 2
நவலை தர்மபுரி 2
கொடுமனல் ஈரோடு 1

மற்றவை[தொகு]

மேலும் சில இடங்களில் கிடைத்த நாணயங்கள் பற்றி சில பேர் குறிப்புகள் தந்துளனர்.

ஊர் எண்ணிக்கை குறிப்புகள்
வெம்பாவூர் (திருச்சி) 2366 வெள்ளி முத்திரை நாண்யங்கள்[2]
போடிநாயக்கனூர் 1138 வெள்ளி முத்திரை நாணயங்கள்[2]
கொடுமணல் 2 வெள்ளி முத்திரை நாணயங்கள்[3]
கோட்டயம் (கேரளா) 162 66 ரோம நாணயங்களும், 34 (2-6) வரையறை நாணயங்களும்[4]
அங்கமலை 783 (1-6) வரையறை நாணயங்கள்[4]
பாண்டிய நாடு 7 6 வெள்ளி, 1 செம்பு[5]

மீளாய்வு[தொகு]

முதலில் இதைப்போன்ற முத்திரை காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக்காசுகளை வெளியிட்டுள்ளதால் வடவிந்திய வழியே தமிழகத்துக்கு இக்காசுகள் வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. காசிநாதன், நடன., தமிழர் காசு இயல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003, (முதற்பதிப்பு 1999)
  2. 2.0 2.1 சம்பகலட்சுமி ஆர்.1996.157
  3. ராஜன் 1994.25
  4. 4.0 4.1 சத்திய மூர்த்தி டி.1994 45-50
  5. கிருட்ணமூர்த்தி ஆர் 1997.45-50
  6. இரா.கிருஷ்ணமூர்த்தி (23 ஜூன் 2010). "சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு". இரா.கிருஷ்ணமூர்த்தி. dinamalar.com. p. 1. பார்க்கப்பட்ட நாள் 07 சூலை 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)