வித்வான்சாக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வித்வான்சாக் தொலைகுறித் துப்பாக்கி | |
|---|---|
| அமைக்கப்பட்ட நாடு | |
| பயன்பாடு வரலாறு | |
| பயன்பாட்டுக்கு வந்தது | 2007 - |
| பயன் படுத்தியவர் | பார்க்க பயன்படுத்துபவர் |
| உற்பத்தி வரலாறு | |
| அமைத்தவர் | போர்த்தளவாட தொழிற்சாலை அமைப்பு |
| அமைத்த நாள் | 2005 |
| தயாரிப்பாளர் | திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலை |
| உருவாக்கியது | பிப்ரவரி 2007 |
| அளவீடுகள் (12.7 மிமீ variant) | |
| எடை | 25 kg |
| நீளம் | 1.7 மீ |
| சுடு குழல் நீளம் | 1.1 மீ |
| பணிக் குழு | 2 |
|
|
|
| Calibre | 14.5 x 114மிமீ |
| வெடிக்கலன் செயல் | மனித தாழியங்கி |
| வாய் முகப்பு இயக்க வேகம் | 1,040 மீ/நொடி |
| செயல்திறமிக்க அடுக்கு | 1,800 மீ |
| அதிகபட்ச வரம்பு | 2,000 மீ |
| கொள் வகை | தாளிகை |
| காண் திறன் | 8X42 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கி |
வித்வான்சாக் (Vidhwansak) என்பது தொலைதூரத்திலுள்ள இலக்குகளை தாக்கப் பயன்படும் ஒரு தொலைகுறித் துப்பாக்கி.(sniper rifle)[1] இது வடமொழியில் அழிப்பவன் என்று பொருளிலான “வித்வான்சாக்” எனும் பெயரில் திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் 2005ல் தயாரிக்கப்பட்டது.[2]
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
- 2006ல் முழு பரிசோதனை செய்யப்பட்டது.[3]AMR Vidhwansak at Indian Military Database</ref>
- 2007ல் எல்லை பாதுகாப்புப் படையால் (Border Security Force) 100 வித்வான்சாக்கள் வாங்கும் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.[4]
- 2008ல் எல்லை பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டது.[5]
சிறப்புகள் [தொகு]
- 2,000மீட்டர் வரையிலான தொலைதூர தாக்குதல் திறனுடையது.[3]
- குறி வைத்து தாக்குதல் மற்றும் 8 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கியுடனானது.
- போர்க் கருவிகள், ஆயுதக் கூடங்கள், சிறிய ரகப் போர் வாகனங்களைத் தகர்த்தல் போன்றவைக்கு உதவக்கூடியது.
- 50 முதல் 60 சதவிகிதம் வரையிலான பின்னுதைப்பு விசை தாங்கும் கருவி கொண்டது.(muzzle brake to resist recoil velocity)[3]
விவரங்கள் [தொகு]
வித்வான்சாக் விவரங்கள்
| வெடி மருந்துக் குண்டு | 12.7x108மி.மீ. | 14.5x114மி.மீ. | 20x 82மி.மீ. |
| எடை | 25 கி | 29 கி | 26 கி |
| நீளம் | 1.7 மீ | 2.015 மீ | 1.795 மீ |
| புரியிடைத்தூரம் | 1: 390 மிமீ | 1 : 420 மிமீ | 1 : 560 மிமீ |
| காண் திறன் | 8 X 42 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கி. | ||
| பின்னுதைப்பு வேகம் | 845 மீ/நொடி | 1,080 மீ/நொடி | 720 மீ/நொடி |
| செயல்திறமிக்க அடுக்கு | 1,800 மீ | 1,800 மீ | 1,300 மீ |
பயன்படுத்துபவர் [தொகு]
மேற்கோள் [தொகு]
- ↑ G. Prasad (2006-03-20). "Exhibiting the `powers' that protect us". The Hindu. பார்த்த நாள் 2009-10-13.
- ↑ Girja Shankar Kaura (2006-02-05). "Ordnance factories bag order for 30,000 carbines". The Tribune. பார்த்த நாள் 2009-06-07.
- ↑ 3.0 3.1 3.2 3.3 AMR Vidhwansak at Indian Military Database
- ↑ "Anti-material rifle handed over to BSF". The Hindu (2008-02-15). பார்த்த நாள் 2009-10-13.
- ↑ 5.0 5.1 "BSF IG satisfied of AMR produced at OFT". Oneindia.in (2008-02-15). பார்த்த நாள் 2009-06-07.
வெளி இணைப்புகள் [தொகு]
- Manufacturer information - Vidhwansak at OFB website.