இன்காக்களின் வரலாறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்கா மன்னர்கள் தென்னமெரிக்காவை ஆண்ட செவ்விந்திய பழங்குடி இனத்தைச் சேர்ந்த மன்னர்கள் ஆவர். இவர்கள் வரலாற்றின் படி கி.பி.1100-1533வரை தென்னமெரிக்காவின் குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டனர். மான்கோ கபாக் என்ற இன்கா மன்னர் இப்பேரரசை தோற்றுவித்ததாக கூறுகின்றனர்.
பொருளடக்கம் |
மன்னர்கள் பட்டியல் [தொகு]
| இன்கா நாகரிகம் |
|---|
| இன்கா சமூகம் |
| கல்வி · சமயம் · தொன்மம் |
| கட்டிடக்கலை · இன்கா சாலை அமைப்பு · படை |
| வேளாண்மை · ஆன்டியச் சமையல் |
| இன்கா வரலாறு |
| இன்கா பேரரசு |
| இன்கா பேரரசை எசுப்பானியர்கள் கைப்பற்றல் |
| எண் | மன்னர் | காலம்(கி.பி.)[1] |
|---|---|---|
| 1. | மான்கோ கபாக் | தெரியவில்லை |
| 2. | சின்சி-ரோகா | 1100-1140 |
| 3. | லோக்யூ-யூபான்க்யுயி | 1140-1195 |
| 4. | மாய்டா-கபாக் | 1195-1250 |
| 5. | கபாக்-யூபான்க்யுயி | 1250-? |
| 6. | ரோகா-2 | ?-? |
| 7. | யாகுவார் | ?-? |
| 8. | வீரகோசன் | ?-1400 |
| 9. | பச்சக்குட்டக் | 1400-1448 |
| 10. | யூபான்க்யுயி | 1400-1448 |
| 11. | டுபாக்-யூபான்க்யுயி | 1448-1482 |
| 12. | ஹுஅய்னெ-கபாக் | 1482-1528 |
| 13. | சுசி-ஹுஅச்கார் | 1529-1533 |
| 14. | அடஹுஅல்பா | 1529-1533 |
முடிவு [தொகு]
மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன் என மக்கள் கருதும்படியான ஆட்சிமுறை(theocracy) ந்டந்தது. இச்சூழ்நிலையிலே 177 வீரர்களுடன் மட்டுமே வந்த எசுபானிய தளபதி பிசாரோ அடஹுஅல்பா என்ற இன்கா மன்னரை கொன்றான். மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன், அவனையே கொன்று விட்டார்கள் என கருதியதால் மக்கள் கிளர்ந்தெழவில்லை. அதன் விளைவாக 433 ஆண்டுகள் சாயாதிருந்த இன்கா பேரரசின் முடி சாய்ந்தது.[2]
உசாத்துணை [தொகு]
- நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History