தென்காசிப் பாண்டியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தென்காசி பாண்டியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக்கொண்ட முதல் பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். தன்னால் தென்காசி பெரிய கோவிலை கட்டி முடிக்க இயலாது என்றும் நாளை இக்கோயில் இடிந்து விழும் என கணிக்கப்பட்டதாலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதை மீட்க உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை உலகம்மன் கோயிலின் வாசலிலேயே பதித்துக் கொண்டார்.

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த வந்த பாண்டியர் அனைவரும் தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர்.[1] பதினான்காம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட சுல்தானியர், விஜயநகரத்தவர், நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும்.[2][3] சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்து பாண்டியரும் தென்காசியையே தலைநகராகக் கொண்டு தென்காசி பெரியகோயிலில்[4] உள்ள சிவந்தபாதவூருடைய ஆதீன மடத்தில்[5] முடி சூட்டிக்கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தார், வள்ளியூர், உக்கிரன் கோட்டை போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. தென்காசிப் பாண்டியர்களில் கொல்லங்கொண்டான் என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.

பட்டியல்[தொகு]

தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக்கொண்ட முதல் பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் வழி வந்தவர்கள்.
எண் பெயர் காலம்
1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
2. மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
3. அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
4. குலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499
5. சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
6. பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
7. நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
8. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
9. வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
10. வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
11. கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)

வேறு பெயர்கள்[தொகு]

  1. சச்சிதானந்தபுரம்
  2. முத்துத்தாண்டவநல்லூர்
  3. ஆனந்தக்கூத்தனூர்
  4. சைவமூதூர்
  5. தென்புலியூர்
  6. குயின்குடி
  7. சித்தர்வாசம்
  8. செண்பகப்பொழில்
  9. சிவமணவூர்
  10. சத்தமாதரூர்
  11. சித்திரமூலத்தானம்
  12. மயிலைக்குடி
  13. பலாலிங்கப்பாடி
  14. வசந்தக்குடி
  15. கோசிகை
  16. சித்தர்புரி

மதுரையை பாண்டியர் இழந்தது[தொகு]

விஜயநகரப் பேரரசும் நாயக்கர்களும் 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மதுரையை ஆண்டிருந்தாலும், அவ்வப்போது சில பாண்டியர்கள் இவர்களை எதிர்த்தும் வந்தனர். சில நேரங்களில் மதுரையையும் ஆண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சடையவர்மன் விக்கிரம பாண்டியனும் (கி.பி. 1401 - 1422) அவனின் மகனான அரிகேசரி பராக்கிரம பாண்டியனும் ஆவர்.[8] இவர்கள் மதுரையை சுற்றி 32 கோட்டைகளைக் கட்டினர். பின் விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலேசுவரனாக ஆன பின்னர் மீண்டும் பாண்டியர் தனியாட்சி கோருவர் எனப்பயந்து மதுரையை 72 பாளையங்களாகப் பிரித்தான். அதில் பாண்டியர்களுக்கு எதிராக இருந்த சிலருக்கு .[9]பதவிகள் பல தந்து பாண்டியர்களிடம் அண்டவிடாமல் அவர்களைத் தனியர்களாக்கினான். அதனால் பாண்டியர் மதுரையை நிரந்தரமாக இழக்க வேண்டியதாயிற்று.[8]

செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை[தொகு]

செண்பகப்பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த மழைக்காடுகள் என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம்[10] செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்குக் கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தைக் கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்தக் கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[7]

ஆதாரங்கள்[தொகு]

பாண்டிய குலோதயம்[தொகு]

பாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும்.[1] அதில் உள்ள தகவல்கள்,[11]

  1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.
  2. அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.
  3. சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னனாவான்.

நாணயவியல்[தொகு]

தென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிட்டப்பட்டன. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான ஆகவராமன் என்னும் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த நாணயங்களை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

நகரமைப்பு[தொகு]

கலை[தொகு]

முக்கியக்கோயில்கள்[தொகு]

எண் கோயில் குறிப்பு
1. தென்காசி கோயில் மூலவர் காலம் தெரியவில்லை.
கோயில் கோபுரங்களும் சன்னதிகளும் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டது.
2. திருக்குற்றாலநாதர் கோயில் மூலவர் காலம் தெரியவில்லை.
கோயில் கோபுரங்களும் சன்னதிகளும் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டது.
3. குலசேகரநாதர் கோயில் சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது.

தென்காசி ஆலயச்சிறப்பு[தொகு]

வாயுவாசல் (சடையவர்மன் பராக்கிரம்ம பாண்டியன் வாயில்)[தொகு]

  • இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாசலெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. இதனால் ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம். பால சுப்பிரமணியர் கோயில் வெளியில் இசைத்தூண்கள் உண்டு.

ஒற்றைக் கல் சிலைகள்[தொகு]

மூலம்:தமிழ்வு[2]

இறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிற்ப அதிசயங்கள் சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 16 வியத்தகு சிலைகள் உள்ளன.

  1. அக்னி வீரபத்திரர்
  2. ரதிதேவி
  3. மகா தாண்டவம்
  4. ஊர்த்துவ தாண்டவம்
  5. காளிதேவி
  6. மகாவிஷ்ணு
  7. மன்மதன்
  8. வீரபத்திரர்
  9. பாவை
  10. பாவை
  11. தர்மன்
  12. பீமன்
  13. அர்ச்சுனன்
  14. நகுலன்
  15. சகாதேவன்
  16. கர்ணன்
  • மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை. நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர் காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகள். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.தென்காசி கோவிலின் சிற்பங்கள் தென்காசி ஆண்ட பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச் செல்வங்கள்.

சுரங்கப்பாதைகள்[தொகு]

தற்போதும் பெரிய கோயிலில் அடைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயில் காணப்படுகிறது. இதில் நான்கு சுரங்கப்பாதைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

  1. கிழக்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதை சுந்தரன் பாண்டியபுரத்தில் உள்ள விந்தன்கோட்டைக்கு செல்வதாகத் தற்போதும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.[13]
  2. மற்றொரு பாதை குலசேகர நாதர் கோவில் வழியாகச் செல்வதாகக் கூறப்படுகிறது.

திருமலாபுரம் ஓவியங்கள்[தொகு]

  • தென்காசி அருகில் திருமலாபுரம் மலையில் ஒரு குகைக் கோவில் உள்ளது. இது கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் என்னும் ஊர் செல்லும் வழியில் உள்ளது இது சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் பாண்டியர் காலத்து வண்ண ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களை முதலில் கண்டுபிடித்தவர் அறிஞர் தூப்ராய் ஆவார். திருமலைப்புரக் குகைக் கோவில் ஓவியங்கள் பாண்டியர் காலத்து ஒவியக்கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.[14]

இலக்கியங்கள்[தொகு]

ஆண்டு தலைநகர் பாண்டியர் நூல்கள் குரு
1560 -1600 கருவையும் பின் தென்காசியும் (முடி சூடவில்லை) வரகுணராமன் வாயு சங்கிதை, இலிங்க புராணம் முதலானவை அகோர சிவம் சுவாமி தேவர் (குலசேகர பாண்டியன் எனவும் கூறுவர்)
1588 – 1613(?) கருவை வரதுங்கராமன் பிரமோத்திர காண்டம், கருவை அந்தாதிகள், கொக்கோகம் வேம்பத்தூர் ஈசான முனிவர்
1564 - 1610 தென்காசி சீவலராமன் என்னும் அதிவீரராமன் நைடதம், காசி கண்டம், கூர்ம புராணம், வெற்றிவேற்கை சுவாமிதேவர்

இவை தவிர்த்துப் பாண்டிய குலோதயம் என்னும் வரலாற்று நூலை மண்டலக்கவி ஒருவரும் தென்காசி பாண்டியர்களின் காலத்தில் இயக்கியுள்ளனர்.

உசாத்துணை[தொகு]

  1. தென்காசி தல புராணம்.
  2. பாண்டியர் வரலாறு.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "4.5 பிற்காலப் பாண்டியர் (கி.பி. 1371 - 1650)". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 27, 2012.
  2. 2.0 2.1 http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=323
  3. http://www.google.co.in/search?sclient=psy-ab&hl=en&tbo=1&tbm=bks&source=hp&q=tenkasi+capital&btnG=Search#sclient=psy-ab&hl=en&tbo=1&tbm=bks&source=hp&q=Tenkasi+as+his+capital&oq=Tenkasi+as+his+capital&aq=f&aqi=&aql=&gs_sm=e&gs_upl=25050l31799l0l32711l2l2l0l0l0l0l1030l1030l7-1l1l0&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&fp=8385552dbf4df292&biw=1366&bih=667
  4. http://books.google.co.in/books?id=sDnaAAAAMAAJ&q=tenkasi+capital&dq=tenkasi+capital&hl=en&ei=Ph68TtCqNoLZrQfHo-zUAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDQQ6AEwAA
  5. தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயில் வரலாறு கோயில் வெளியீடு. 1964. 
  6. http://books.google.co.in/books?id=uXdyGtJH6E0C&pg=PA54&dq=Tenkasi+Pandyas&hl=en&sa=X&ei=3HOiT_z6LdGtrAfy4uyeBw&sqi=2&ved=0CEoQ6AEwBA#v=onepage&q=Tenkasi%20Pandyas&f=false
  7. 7.0 7.1 தென்காசி தல புராணம்
  8. 8.0 8.1 Sathayanatha Iyer (1924). History of the Nayaks of Madura. பக். 58. 
  9. தமிழ்வாணன் (1983). கட்டபொம்மன் கொள்ளைக்காரன். சென்னை: மணிமேகலை பிரசுரம். பக். 18 - 19. 
  10. மனத்துக்கினியான் (சூன் 15, 2012). "மன நிம்மதி தரும் சந்நிதி!". சூன் 15, 2012. http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF!&artid=612973&SectionID=147&MainSectionID=147&SectionName=Vellimani&SEO=. பார்த்த நாள்: சூலை 30, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  11. http://www.tenkasi.com/temples_politicalsovereignty.html
  12. தென்னாட்டுப் போர்க்களங்கள், கா. அப்பாத்துரை
  13. http://www.natpu.in/?p=9868
  14. http://www.varalaaru.com/default.asp?articleid=523