தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், தேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
வகைஅரசு
உருவாக்கம்1990
மாணவர்கள்300
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
இணையதளம்இணையதளம்

தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (The Horticultural College and Research Institute (HC&RI)) என்பது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளில் ஒன்றாகும்[1] ஆகும். இக்கல்லூரி தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பெரியகுளத்தில் 1957இல் ஒரு பழ ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டு அந்த பழ ஆராய்ச்சி நிலையம் 1971இல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. 1990 இல் இந்த நிறுவனம் ஒரு முழுமையான தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமாக மாற்றப்பட்டது.[2]

துறைகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் துறைகள் செயல்படுகின்றன.

  • பழவியல்
  • காய்கறியியல்
  • மலரியல்
  • நறுமணப்பயிரியல்
  • சமுக அறிவியல்

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளம் அறிவியல், முது அறிவியல் தோட்டக்கலைப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-22. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-23. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.