தென்காக்கேசியா

ஆள்கூறுகள்: 42°15′40″N 44°07′16″E / 42.26111°N 44.12111°E / 42.26111; 44.12111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்காக்கேசியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசுத்துறை, 1994இல் அளித்த இந்நிலப்படம்
Coordinates42°15′40″N 44°07′16″E / 42.26111°N 44.12111°E / 42.26111; 44.12111
நாடுகள்
தொடர்புடைய பகுதிகள்
நேர வலயம்UTC+04:00, ஒசநே+03:30, ஒசநே+03:00
அதிக உயரமுள்ள மலையுச்சிShkhara (5,203 மீட்டர்கள் (17,070 அடி))

தென்காக்கேசியா (South Caucasus; Transcaucasia அல்லது Transcaucasus) என்ற புவியியல் பகுதியானது, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா நிலப்பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் தெற்குப் பகுதியில் காக்கசஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது.[1][2] இப்பகுதி தோராயமாக, தற்போதுள்ள ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகியனவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே, இந்நாடுகளை, சில நேரங்களில், காக்கேசிய நாடுகள்(Caucasian States) என அழைப்பர். இம்மூன்று நாடுகளின் பரப்பளவு 186,100 சதுர கிலோமீட்டர்கள் (71,850 சதுர மைல்கள்) ஆகும்.[3] வடக்கு காக்கேசியாவும், தெற்கு காக்கேசியாவும் இணைந்து பெரிய காக்கேசியா என்ற புவியியல் பகுதியாக அமைந்து, ஐரோவாசியாவினைப் பிரிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Caucasus". The World Factbook. Library of Congress. May 2006. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்பிரல் 2024.
  2. Mulvey, Stephen (16 June 2000). "The Caucasus: Troubled borderland". News. BBC. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்பிரல் 2024. "The Caucasus Mountains form the boundary between West and East, between Europe and Asia..."
  3. Solomon Ilich Bruk "Transcaucasia". Encyclopædia Britannica.  

துணை நூல்[தொகு]

  • Shahinyan, Arsen K. (2022). "The Southern Boundaries of the Southern Caucasus". Iran and the Caucasus 26 (4): 418–424. doi:10.1163/1573384X-20220407. 

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
South Caucasus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்காக்கேசியா&oldid=3919637" இலிருந்து மீள்விக்கப்பட்டது