திருப்புவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புவனம்
திருப்புவனம்
இருப்பிடம்: திருப்புவனம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°49′32″N 78°15′16″E / 9.825448, 78.254328அமைவு: 9°49′32″N 78°15′16″E / 9.825448, 78.254328
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் V. ராஜாராமன் [3]
மக்கள் தொகை 21,589 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

திருப்புவனம் (ஆங்கிலம்:Thirupuvanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பொருளடக்கம்

பெயர்க்காரணம் [தொகு]

திருப்புவனம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உச்சரிப்பில் திரிபு ஏற்பட்ட பெயராகும். "திருப்பூவணம்" என்பது திரிந்து திருப்புவனம் ஆகியது. இங்கு பாரிசாதப் பூவின் படிமம் சிவலிங்கமாக உள்ளது. எனவே சிவலிங்கத்தின் பெயர் "பூவணன்" என்பதாகும். இதன் காரணமாக இந்த ஊருக்குத் திருப்பூவணம் என்ற பெயர் உண்டானது. பாண்டிய நாட்டுத் தலங்களில் மூவர் பாடலும் பெற்ற தலம் இது ஒன்றே. 36ஆவது "திருவிளையாடல்" நடைபெற்ற தலம். எலும்பு பூவாக மாறிய தலம், காசிக்கு வீசம் கூட எனப் புகழ் பெற்ற தலம்[4].

மக்கள் வகைப்பாடு [தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்புவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 81.92% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. திருப்புவனம் மக்கள் தொகையில் 13.74% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள் [தொகு]

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. திருப்பூவணம் புராணம், திருப்பூவணக் காசி, புவனம் போற்றும் பூவணம், நூல்கள். ஆசிரியர்: முனைவர். கி.காளைராசன்
  5. http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Sivaganga District;All Taluks Taluk;Thirupuvanam (TP) Town

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புவனம்&oldid=1395897" இருந்து மீள்விக்கப்பட்டது