சிங்கம்புணரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிங்கம்புணரி
சிங்கம்புணரி
இருப்பிடம்: சிங்கம்புணரி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°11′N 78°25′E / 10.18°N 78.42°E / 10.18; 78.42ஆள்கூறுகள்: 10°11′N 78°25′E / 10.18°N 78.42°E / 10.18; 78.42
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு T.முனுசாமி இ.ஆ.ப [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


சிங்கம்புணரி (ஆங்கிலம்:Singampunari), இது இந்தியாவின் தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதன் ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன.[4]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,415 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சிங்கம்புனரி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிங்கம்புனரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சிறப்புகள்[தொகு]

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது.விவசாயம் முதல் தொழிலாகவும், பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள் பணத்தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் இவ்வூரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு. சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. http://tnmaps.tn.nic.in/district.php?dcode=23
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கம்புணரி&oldid=1395924" இருந்து மீள்விக்கப்பட்டது