உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தூதர் (கிறித்தவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருத்தூதர் அல்லது அப்போஸ்தலர் என்னும் சொல் தூதுவர் அல்லது அனுப்பப்பட்டவர் என்னும் பொருள் கொண்ட கிரேக்க சொல்லான ἀπόστολος (அப்போஸ்டொலொஸ்) என்னும் மூல சொல்லிலிருந்து வந்ததாகும்.[1][2]. திருத்தூதர் என்னும் சொல் சீடர் (disciple) என்னும் சொல்லிலிருந்து வேறுபட்டதாகும்.[2][3]

"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார் என்னும் தகவலை மாற்கு நற்செய்தியாளர் குறித்துள்ளார் (காண்க: மாற் 1:15). கடவுளின் ஆட்சியை அறிவித்த இயேசு தம்மோடு இருப்பதற்கும் தம் பெயரால் மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கும் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தார் என்னும் தகவலை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தி ஆசிரியர்கள் தருகின்றனர் (காண்க: மத் 10:1-4; மாற் 3:13-19; லூக் 6:12-16).

இவ்வாறு இயேசு தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களும் இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலுக்குப்பின் உலகெங்கும் சென்று "இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்" என்பதற்குச் சாட்சிகளாய் விளங்கி நற்செய்தி அறிவித்தனர் என்னும் செய்தியைப் புதிய ஏற்பாட்டு நூலாகிய திருத்தூதர் பணிகள் என்னும் நூல் தருகிறது (காண்: திப 1:21-22).

திருத்தூதர்களின் பெயர்கள்

[தொகு]

மத்தேயு நற்செய்தி 10:2-4-இன் படி திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வரபேதுரு என்னும் சீமோன்,

இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்துக்கு பதிலாக மத்தியா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார் (காண்க: திப 1:15-26). பன்னிரு திருத்தூதர்கள் பட்டியலில் சேராதவராக இருந்தாலும், உயிர்த்தெழுந்த இயேசுவிடமிருந்து நேரடியான அழைப்புப் பெற்ற பவுலும் திருத்தூதர் என்றே அழைக்கப்படுகிறார். பிற இனத்தவரின் திருத்தூதர் (Apostle of the Gentiles) என்னும் சிறப்புப் பெயர் பவுலுக்கு உண்டு.

திருத்தூதர்களின் மரணம்

[தொகு]

கிறித்தவப் மரபுப்படி திருத்தூதர்களின் மரணம்:

  • பேதுரு என்னும் சீமோன், - தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 64.
  • செபதேயுவின் மகன் யாக்கோபு - தலை கொய்யப்பட்டு இறந்தார் (கிபி 44) (மறைசாட்சியாக இறந்த முதல் திருத்தூதர்)
  • செபதேயுவின் மகன் யோவான் - வயது முதிர்ந்து இறந்தார் (இயற்கை மரணம் எய்திய ஒரே திருத்தூதர்)
  • அந்திரேயா - X-வடிவ சிலுவையில் அறையப்பட்டார்
  • பிலிப்பு - சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 54.
  • பர்த்தலமேயு, (நத்தானியேல்) - தோல் உரிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார்.
  • மத்தேயு - கோடரியால் வெட்டுண்டு இறந்தார் - கிபி 60.
  • தோமா, - ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தார் - கிபி 72.
  • அல்பேயுவின் மகன் யாக்கோபு - சிலுவையில் அறையப்பட்டு, கல்லாலும், தடியாலும் அடியுண்டு மரித்தார்
  • யூதா ததேயு, - சிலுவையில் அறையப்பட்டார்
  • தீவிரவாதியாய் இருந்த சீமோன் - சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 74.
  • யூதாசு இஸ்காரியோத்து - தற்கொலை செய்து கொண்டார்

யூதாசு இஸ்காரியோத்துக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியா, கல்லால் அடிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார்.

திருத்தூதர்களின் கல்லறைகள்

[தொகு]

யூதாசு இஸ்காரியோத்தை தவிர்த்து திருத்தூதர் பதினொருவரில், எழுவரின் கல்லறைகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. அவை:

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harris, Stephen L., Understanding the Bible. Palo Alto: Mayfield. 1985. p. 371.
  2. 2.0 2.1 "Christian History: The Twelve Apostles". பார்க்கப்பட்ட நாள் 2007-11-19.
  3. "Apostle." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005.
திருத்தூதுப் பொழிவு
இயேசுவின் வாழ்வும் பணிகளும்
முன்னர்
கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் உவமை
புதிய ஏற்பாட்டு
நிகழ்வு
பின்னர்
பேறுபெற்றோர் (Beatitudes)
மலைப்பொழிவு/சமவெளிப் பொழிவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தூதர்_(கிறித்தவம்)&oldid=3239028" இலிருந்து மீள்விக்கப்பட்டது