சூப்பர் பந்துப் பரிமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சூப்பர் பந்துப் பரிமாற்றம் அல்லது சூப்பர் ஓவர் (Super Over)[1][2] அல்லது நீக்குவான் (Eliminator)[3][4] அல்லது ஆங்கிலச் சுருக்கமாக ஓப்சே (Oopse) (ஓரணிக்கு ஒரு ஓவர் நீக்குவான் - One Over Per Side Eliminator)[5], எனப்படுவது மட்டுப்படுத்திய பந்துப் பரிமாற்ற துடுப்பாட்டத்தில் சமனாக முடிந்த ஆட்டங்களில் வெற்றி அணியைத் தேர்கின்ற ஓர் முறைமையாகும்.

ஒர் ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காது இந்த சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் உள்ள இந்த முறைமை இதற்கு முன்னிருந்த பௌல் அவுட் முறைமைக்கு மாற்றாக அமைந்தது.

சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று துடுப்பாட்டக்காரர்களையும் ஒரு பந்து வீச்சாளரையும் சூப்பர் பந்துப் பரிமாற்றங்களுக்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. ஆறு பந்துகளுக்கு, முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. இலக்குகள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு இலக்குகளும் இழந்தநிலையில் அந்த அணியின் சூப்பர் ஓவர் முடிவுறுகிறது.

விதிகள்[தொகு]

முதல் சூப்பர் பந்துப் பரிமாற்றலில் கிறிஸ் கெயில் 25 ஓட்டங்கள் எடுத்தார்

ஆட்டம் சமனானநிலையில் ஆடப்படும் மேநிலை பந்துப் பரிமாற்றத்திலும் ஓட்டங்கள் சமனாக இருப்பின் தங்கள் துடுப்பாட்டத்தின் போது மிகக் கூடிய ஆறு ஓட்டங்களை அடித்துள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.[6][7] இந்த விதியானது முதன்முதலில் மே 5, 2010 அன்று 2010 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளில் ஆத்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இடையே நிகழந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது; இதன்படி ஒரே பந்தில் ஆறு ஓட்டங்களாக அதிகம் அடித்திருந்த ஆத்திரேலியா வெற்றி பெற்றது.[7][8]

எடுத்துக்காட்டு[தொகு]

இந்த சூப்பர் பந்துப் பரிமாற்ற விதி முதன்முதலில் இருபது20 ஆட்டத்தில் திசம்பர் 26, 2008இல் மேற்கிந்தியத் தீவு அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே செயற்பாட்டிற்கு வந்தது. இந்த சூப்பர் ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் 25/1 எடுத்தது; பதிலுக்கு நியூசிலாந்து 15/2 எடுத்துத் தோற்றது.[9]

திசம்பர் 26, 2008 இருபது20 ஆட்டத்தில் இருபது பந்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னதாக இரு அணிகளும் சமன் எய்தியிருந்தன.[2]

- டேனியல் வெட்டோரி நியூசிலாந்து அணியின் "நியமிக்கப்பட்ட பந்து வீச்சாளராக" விளங்கினார்.
- கிறிஸ் கெயிலும் சேவியர் மார்சலும் "குறு-துடுப்பாட்டத்தை" துவக்கினர்.
- எந்த பந்தையும் எதிர்கொள்ளும் முன்னரே மார்சல் ஓட்டமெடுக்கையில் வெளியேற்றப்பட்டார்; அடுத்து வந்த சிவ்நாராயின் சந்தர்பால் மறுமுனையில் மட்டையாளராக இருந்தார்.
- கெயில் தான் எதிர்கொண்ட ஆறு பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
"சூப்பர் பந்துப் பரிமாற்றத்தில்" மேற்கிந்தியத் தீவுகளின் புள்ளிகள் ஆறு பந்துகளில் ஒரு இலக்கிற்கு 25 என இருந்தது.[10]


- சுலைமான் பென் மேற்கிந்தியத் தீவுகளின் நியமிக்கப்பட்டப் பந்து வீச்சாளராக இருந்தார்.
- "சூப்பர் பந்துப் பரிமாற்றத்தின்" மூன்றாவது பந்தில் நியூசி துவக்க மட்டையாளர் ஜேகப் ஓரம் அடித்த பந்து பிடிக்கப்பட்டு வெளியேறினார். இந்தப் பந்தை பிடிக்கும் முன்னரே மட்டையாளர்கள் முனை மாறியிருந்தனர்.
- மூன்றாவது மட்டையாளரான ராஸ் டைலர் ஐந்தாவது பந்தில் குச்சங்கள் வீழ்ந்து வெளியேற்றப்பட்டார். ஓரமின் சக துவக்க மட்டையாளர் பிரண்டன் மெக்கல்லம் ஒரு பந்தையும் எதிர்கொள்ளவில்லை.
கருந்தொப்பியாளர்களின் சூப்பர் பந்துப் பரிமாற்ற புள்ளிகள் ஐந்து பந்துகளில் இரண்டு இலக்குகளையும் இழந்து 15 ஆக இருந்தது.[10]


இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி சூப்பர் ஓவரிலும் ஆட்டத்திலும் வெற்றி கண்டது.
(இந்தக் குறிப்பிட்ட ஆட்டம் சூப்பர் பந்துப் பரிமாற்றக் கருத்திற்கான சோதனையோட்டமாக அமைந்திருந்தமையால் அலுவல்சார் முடிவு சமன் என்றே குறிப்பிடப்பட்டது.[2]

சூப்பர் பந்துப் பரிமாற்ற முறையில் முடிவான ஆட்டங்கள்[தொகு]

இந்த முறைமை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அலுவல்முறையில் முதன்முதலாக 2011 உலகக்கிண்ணப் போட்டியில் வெளியேறுநிலையில் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. [11][12] ஆனால் வெளியேறு நிலையில் ஆடப்பட்ட எந்தவொரு ஆட்டமுமே சமனில் முடியாததால் இந்த விதி செயல்படுத்தப்படவில்லை.

பன்னாட்டு இருபது20 ஆட்டங்கள்[தொகு]

நாள் நிகழிடம் வெற்றியாளர் புள்ளிகள் தோற்றவர் புள்ளிகள் இருபது20 ஆட்டம் சான்று
26 திசம்பர் 2008 ஈடன் பூங்கா, ஆக்லாந்து, நியூசிலாந்து WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் &0000000000000025.00000025/1 Flag of New Zealand.svg நியூசிலாந்து &0000000000000015.00000015 அனைத்து இலக்குகளும் இழந்து மேற்கிந்தியத் தீவுகளின் நியூசிலாந்து நாட்டு வருகையின் முதல் ஆட்டம் [10]
28 February 2010 இலங்காசுடர் பூங்கா, கிறைஸ்ட் சர்ச், நியூசிலாந்து Flag of New Zealand.svg நியூசிலாந்து &0000000000000009.0000009/0 Flag of Australia.svg ஆஸ்திரேலியா &0000000000000006.0000006/1 ஆத்திரேலியாவின் நீயூசி வருகையின் இரண்டாம் ஆட்டம் [13]
7 செப்டம்பர் 2012 டிஎஸ்சி துடுப்பாட்ட அரங்கம், துபாய், ஐக்கிய அரபு அமீரகம் Flag of Pakistan.svg பாக்கித்தான் &0000000000000012.00000012/0 Flag of Australia.svg ஆஸ்திரேலியா &0000000000000011.00000011/1 அமீரகத்தில் பாக்கித்தான் எதிர் ஆத்திரேலியா தொடரின் இரண்டாம் ஆட்டம் [14]
27 செப்டம்பர் 2012 பல்லேகலே பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், கண்டி, இலங்கை Flag of Sri Lanka.svg இலங்கை &0000000000000013.00000013/1 Flag of New Zealand.svg நியூசிலாந்து &0000000000000007.0000007/1 ஆட்டம் 13 [15]


சான்றுகோள்கள்[தொகு]

  1. "Windies edge NZ in Twenty20 thriller". www.abc.net.au ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (2008-12-26). பார்த்த நாள் 2008-12-26.
  2. 2.0 2.1 2.2 "Benn stars in thrilling tie". cricinfo.com cricinfo.com (2008-12-26). பார்த்த நாள் 2008-12-26.
  3. "One-over eliminator could replace bowl-out". cricinfo.com cricinfo.com (2008-06-27). பார்த்த நாள் 2008-12-26.
  4. "2009/10 Champions League Twenty20, Match 11 - Feroz Shah Kotla Ground, Delhi, IND". ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (2009-10-13). பார்த்த நாள் 2009-10-14.
  5. static.espncricinfo.com/db/DOWNLOAD/0000/0035/oopse.pdf
  6. "What is a Super Over?". என்டிடிவி (21 March 2010). பார்த்த நாள் 6 May 2010.
  7. 7.0 7.1 "Aussies take bizarre win over title-holders". Stabroek News. 6 May 2010. http://www.stabroeknews.com/2010/sports/05/06/aussies-take-bizarre-win-over-title-holders/. பார்த்த நாள்: 6 May 2010. 
  8. "2nd Match, Group A: Australia Women v England Women at Basseterre". cricinfo.com cricinfo.com (2010-05-05). பார்த்த நாள் 2010-05-06.
  9. http://www.cricinfo.com/newzealand/engine/match/366707.html
  10. 10.0 10.1 10.2 "Commentary - 1st Twenty20 International - New Zealand v West Indies at Auckland, December 26, 2008". cricinfo.com cricinfo.com (2008-12-26). பார்த்த நாள் 2009-01-14.
  11. "Points Table | ICC Cricket World Cup 2010/11". CricInfo. பார்த்த நாள் 2011-03-26.
  12. "Cricket World Cup 2011: Decision Review System & Super Over Debut in WC 2011". Cricwaves. 2011-02-05. http://www.cricwaves.com/cricket/news/articles/33993926sevawcirc/cricket-world-cup-2011-decision-review-system-amp-super-over-debut-in-wc-2011.html. பார்த்த நாள்: 2011-03-26. 
  13. "Black Caps win super over thriller". ABC Radio Grandstand website. 28 February 2010. http://www.abc.net.au/news/stories/2010/02/28/2832413.htm. பார்த்த நாள்: 6 May 2010. 
  14. . http://www.espncricinfo.com/pakistan-v-australia-2012/engine/current/match/571149.html. பார்த்த நாள்: 07 Sep 2012. 
  15. "Sri Lanka beat New Zealand in super over thriller". The Hindu website. 27 September 2012. http://www.thehindu.com/sport/cricket/sri-lanka-beat-new-zealand-in-super-over-thriller/article3942046.ece. பார்த்த நாள்: 27 Sep 2012.