கேரள கடற்கரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முழப்பிலங்காடு கடற்கரை ஆசியாவிலேயே மிக நீளமான வாகனம் செலுத்தக்கூடிய கடற்கரை
திருவனந்தபுரம் நகரில் உள்ள கோவளம் கடற்கரை
பேக்கல் கோட்டை கடற்கரை

கேரள கடற்கரைகள் (Beaches in Kerala) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள 550 கி. மீ. அரபிக் கடல் கடற்கரையில் பரவியுள்ள இடங்களாகும். கேரளா இந்தியத் துணைக்கண்டத்தின் தென்மேற்கு மூலையை ஆக்கிரமித்துள்ள ஒரு கடற்கரை மாநிலமாகும். கடற்கரையின் நிலப்பரப்பு தனித்துவமானது மற்றும் வடக்கிலிருந்து தெற்கே செல்லும்போது திடீரென மாறுகிறது. கேரளாவின் வடக்குப் பகுதிகளில், பேக்கல், தலச்சேரி மற்றும் கண்ணூர் போன்ற இடங்களில், கடற்கரைகளின் விளிம்பிலிருந்து கடற்கரைக்கு மேலே தலைப்பகுதிகள் உயர்வாகக் காணப்படும். போர்த்துகீசியர்கள், இடச்சுக்காரர்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டினர் - காலனித்துவ சக்திகளால் கட்டப்பட்ட கோட்டைகளால் மலைப்பகுதிகள் உள்ளன. இப்பகுதியினைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சி மயக்கம் தருவனவாக உள்ளது. ஒரு காலத்தில் மலபார் கடற்கரையின் மையமாக இருந்த கோழிக்கோட்டிலிருந்து பாறைகள் நிறைந்த நிலப்பரப்புகளுடன் தட்டையான நிலங்களாக மாறுகிறது. அதிக எண்ணிக்கையிலான தென்னை மரம் அடர்ந்த தோப்புகள் கடற்கரையோரத்திலிருந்து வரிசையாக உள்பகுதிகள் வரை நீண்டுள்ளன.[1]

சுற்றுலா[தொகு]

காப்டாடு கடற்கரை
பய்யம்பலம் கடற்கரை, கண்ணூர்
கோழிக்கோடு சாலியத்தில் உள்ள இயற்கை துறைமுகம்

கேரளாவின் நீண்ட கடற்கரையானது மாநிலத்தின் கலாச்சாரம், வாழ்க்கை மற்றும் பாரம்பரியங்களுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது. ஆரம்பக்கால கடற்படையினர் மற்றும் வணிகர்களின் நினைவுகள் கேரளக் கடற்கரையில் புதைந்து காணப்படுகின்றன. பல்வேறு வகையான மற்றும் பாணிகளின் படகுகள் காணப்படுகின்றன. கேரளாவின் கடற்கரைகள், அல்லது கோவளம் இன்னும் குறிப்பாக, அறுபதுகளில் தனி மனித சுற்றுலாவினர் மற்றும் சூரிய குளியல் விரும்புவார்களால் நிரம்பிவழிந்தது.[1][2] எழுபதுகளில் கிப்பிகளின் கூட்டம் தொடர்ந்தது. இது சாதாரண மீன்பிடி கிராமத்தைப் பரபரப்பான சுற்றுலாத் தலமாக மாற்றத் தொடங்கியது.[3] 2002ல், மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 16 கி. மீ. தொலைவிலுள்ள கோவளத்தில் 66 உணவகங்கள் இருந்தன.[4]

1979ஆம் ஆண்டில் கேரளாவிற்கு வருகை தந்த 29,000 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 225,000 ஆக உயர்ந்தது.[4] மேலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. 2006-ல் கேரளாவிற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 428,534 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 23.68% அதிகமாகும். உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 6,271,724 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 5.47% அதிகமாகும்.[5] கேரள சுற்றுலாவின் முக்கியமானது: ஆயுர்வேதம், கடற்கரைகள், (உப்பங்கழி) கால்வாய்கள்.[6]

உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் விவரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றாலும், குசராத்து மற்றும் மகாராஷ்ட்டிராவிலிருந்து உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இவை இரண்டும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள மாநிலங்களாகும். மேலும் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஐரோப்பாவிலிருந்து வருகின்றனர். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாகக் கடற்கரைகள் உள்ளன.[7]

வடக்கு அட்சரேகை 8°18' மற்றும் 12°48' க்கு இடையில் கேரள கடற்கரைகள் அமைந்துள்ளன.[8] கேரளா ஈரப்பதமான பூமத்திய ரேகை வெப்ப மண்டலங்களுக்குள் உள்ளது. கடலோர தாழ் நிலங்களில்[9] சராசரி ஆண்டு வெப்பநிலை 25.0 முதல் 27.5 °C வரை இருக்கும். வருடத்திற்கு 120-140 மழை நாட்களுடன், கேரளாவும் தென்மேற்கு கோடை பருவமழையின் பருவகால கனமழையால் பாதிக்கப்படுகிறது.[10]

சுனாமி[தொகு]

இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி வளைத்த சுனாமி அலைகள், மேற்கு கடற்கரையில் கேரளாவை 26 திசம்பர் 2004 அன்று பிற்பகலில் தாக்கியது. அண்டை நாடான தமிழகத்தில் சுனாமி மரணம் 7,923 ஆக இருந்த நிலையில் கேரளாவில் 170 பேர் உயிரிழந்துள்ளனர்.[11] இருப்பினும், சுற்றிலும் பீதி நிலவியது. திருவனந்தபுரம் பகுதியில் மட்டும் கடலோர கிராமங்களிலிருந்து சுமார் 100,000 பேர் மாவட்ட நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டு 57 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.[12][13]

அணிகலன்[தொகு]

கடலுண்டி ஆற்றின் கழிமுகக் கடற்கரை
கோழிக்கோடு கடற்கரை

கடல் மற்றும் சூரியக் குளியலின் அல்லது அலை மோதலைப் பார்ப்பது கடற்கரைகளின் ஈர்ப்பாக உள்ளதைத் தாண்டி பல நம்பிக்கைகள் கடற்கரையினைச் சார்ந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்ட தலைநகரிலிருந்து 40 கி. மி. தொலைவில் வர்கலா என்ற இடத்தில் உள்ள பாபநாசம் கடற்கரையில் பாவங்களைப் போக்க நீராடும் நம்பிக்கை உள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான ஜனார்த்தன கோவிலிலிருந்து அர்ச்சகர்கள் சடங்குகள் செய்து விசுவாசிகளுக்கு உதவுகின்றனர். கோவிலின் பிரதான மணி 17 ஆம் நூற்றாண்டில் பாய்மரக் கப்பலின் இடச்சு தலைவனால் வழங்கப்பட்டது. ஒப்பீட்டளவில் குறைந்த உணவகக் கட்டணம் மற்றும் மலிவான உணவு ஐரோப்பியச் சுற்றுலா திட்டங்கள் மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் குறைந்த பயணச் செலவு போன்ற காரணங்களால் ஈர்க்கிறது.[1]

போர்த்துகீசிய ஆய்வாளர் வாஸ்கோடகாமா 1498ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சிறிய கடலோர கிராமமான காப்பாட்டி (கப்பாட்) தரையிறங்கினார். இதன் மூலம் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழி திறக்கப்பட்டது. கடற்கரையில் உள்ள தகடு இவரது வருகையை நினைவுபடுத்துகிறது. கோழிக்கோட்டிற்கு முன்பு மார்க்கோ போலோ (1254-1324) மற்றும் இபின் பட்டுடா (1304-1368 அல்லது 1377) ஆகியோர் வருகை தந்துள்ளனர்.[14]

கண்ணூர் நகரத்திலிருந்து 2 கி. மீ. தொலைவில் பையாம்பலம் கடற்கரைக்கு அருகில் இந்துக்களின் மயானம் உள்ளது. ஏ. கே. கோபாலன், இ. கே. நாயனார் போன்ற பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களின் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.[1][15]

கேரளாவில் பிரபலமான கடற்கரைகள்[தொகு]

கேரளாவில் மிகவும் பிரபலமான சில கடற்கரைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

பேக்கல் கோட்டையின் எழில்மிகுத் தோற்றம். கடற்கரையினால் சூழப்பட்ட மிகப் பெரிய கோட்டை பேக்கல் கோட்டை
ஆலப்புழா கடற்கரை
3 கி. மீ. நீளமுள்ள கொல்லம் கடற்கரை கேரளாவின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும்
பரவூர் தெக்கும்பாகம்-கப்பில் கடற்கரையில் பெரும் கூட்டம்
கண்ணூரில் நடால் கோல்டன் பீச்

வளர்ச்சி[தொகு]

2006-ல் சுற்றுலா மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ. 912.6 பில்லியன் ஆகும்.[5] இதனால் சுற்றுலாத்துறை அதிக செலவு செய்ய அரசை ஊக்கப்படுத்தியுள்ளது. கேரளாவின் கடற்கரைகள் அழகாகத் தோற்றமளித்து தயாராக உள்ளன. கேரள சுற்றுலாத்துறை கோவளம், ஆலப்புழா, நாட்டிகை, செராய், முழப்பிலங்காடு, பேக்கல் மற்றும் காப்பாடு உள்ளிட்ட 22 கடற்கரைகளை மேம்படுத்த ரூபாய் 1,000 மில்லியன் செலவில் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. கடற்கரை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் 2008 ஆண்டு இறுதியில் முடிக்கப்பட்டது.[16]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Ayub, Akber (ed), Kerala: Maps & More, Coastal Circuit, 2006 edition 2007 reprint, pp. 96-112, Stark World Publishing, Bangalore, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-902505-2-3
  2. Govind, M.Harish. "Ramparts by the Arabian Sea". Magazine. The Hindu, 19 June 2005. Archived from the original on 20 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
  3. "Kovalam". kovalam.hotels.com. Archived from the original on 2 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-07.
  4. 4.0 4.1 Chandrasekhar, Hariharan. "It's simple… No nature, no tourism". Metro Plus Coimbatore. The Hindu, 28 July 2002. Archived from the original on 26 December 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
  5. 5.0 5.1 "Tourist Statistics – 2006" (PDF). Kerala Tourism. Archived from the original (PDF) on 2007-12-02. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
  6. Parthasarathy, Anand. "Kerala opens the doors". Business. The Hindu, 27 January 2003. Archived from the original on 20 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
  7. "Week-long tourism survey launched". The Hindu, 20 January 2006. Archived from the original on 20 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
  8. Government of Kerala 2005.
  9. Brenkert & Malone 2003.
  10. Chacko & Renuka 2002.
  11. Menon, Parvathi. "Rebuilding lives". Frontline, 15–28 January 2005. Archived from the original on 20 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
  12. "Tsunami fear grips Kerala coast". The Hindu, 31 December 2004. Archived from the original on 20 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
  13. Radhakrishnan, S. Anil. "Panic grips travel, hospitality sectors". Kerala. The Hindu, 28 December 2004. Archived from the original on 20 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
  14. Ayub, Akber (ed), p.52
  15. Mathew, Mony K. "Going beyond God's own country". The Hindu Business Line, 13 July 2000. Archived from the original on 20 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
  16. "22 Beaches in the state to the spruced up". News Bytes For You. Kerala Tourism Issue 173, 1 January 2008. Archived from the original on 20 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_கடற்கரைகள்&oldid=3425281" இலிருந்து மீள்விக்கப்பட்டது