கெட்டு வள்ளம்
கெட்டு வள்ளம் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் காணப்படும் ஒருவகையான படகு வீடுகள் ஆகும். கெட்டு வள்ளம் என்பது கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட படகு எனப்பொருள் தரும் (கெட்டு=கட்டு, வள்ளம்=படகு). இப்படகு வீடுகள் 60 முதல் 70 அடி நீளமும் படகின் நடுப்பகுதியில் 15 அடி அகலமும் கொண்டிருக்கின்றன. இப்படகுகள் பொதுவாக அஞ்சிலி மரத்தைக் கொண்டு செய்யப்பட்டு இருக்கும். பொதுவாக இப்படகுகளின் கூரை பனை ஓலை மற்றும் மூங்கில்கள் கொண்டு வேயப்பட்டு இருக்கும். படகின் வெளிப்புறம் பாதிக்கப்படாமல் இருக்க படகின் வெளிப்பகுதி முந்திரிக்கொட்டையின் எண்ணெய் கொண்டு பூசப்படுகிறது.
வரலாறு [தொகு]
தரை மற்றும் இருப்புப்பாதைகள் இல்லாத காலங்களில் வணிகர்களின் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்திற்கு இவை பெரிதும் பயன்பட்டன.
இப்படகுகள் படகோட்டிகள் தூங்குவதற்கும் சமைப்பதற்கும் போதுமான வசதிகளைக் கொண்டிருந்தன. சில சமயங்களில் படகோட்டிகளின் குடும்பமும் படகில் உடன் இருந்தது. இப்படகோட்டிகள் படகு வலிக்கும் போது பாடும் பாடல்களும் அவர்களுடைய சமையல் முறைகளும் மிகவும் புகழ்பெற்றவை.
படங்கள் [தொகு]
-
கெட்டுவள்ளங்களைச் சுற்றி வாத்துகள்
மேலும் பார்க்க [தொகு]
|
|||||||||||||||||||||||