கெடா மந்திரி பெசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெடா மந்திரி பெசார்
Menteri Besar of Kedah
Menteri Besar Kedah
கெடா மந்திரி பெசார் சின்னம்
தற்போது
சனுசி முகமது நோர்
(Muhammad Sanusi Md Nor)

17 மே 2020 முதல்
கெடா மாநில அரசு
உறுப்பினர்கெடா மாநில ஆட்சிக்குழு
அறிக்கைகள்கெடா மாநில சட்டமன்றம்
வாழுமிடம்செரி மென்டலூன், அலோர் ஸ்டார், கெடா
அலுவலகம்Aras 3, Blok A, விசுமா டாருல் அமான், 05503 அலோர் ஸ்டார், கெடா
நியமிப்பவர்சுல்தான் சலாவுதீன்
கெடா சுல்தான்
பதவிக் காலம்5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது
முதலாவதாக பதவியேற்றவர்வான் சம்மியுல் அகமத் வான் பரியுல் ஒசுமான்
(Wan Shammiul Ahmad Wan Farriul Osman)
உருவாக்கம்1886; 138 ஆண்டுகளுக்கு முன்னர் (1886)
இணையதளம்mmk.kedah.gov.my/index.php/kerajaan/menteri-besar

கெடா மந்திரி பெசார் அல்லது கெடா முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Kedah அல்லது First Minister of Kedah; மலாய்: Menteri Besar Kedah; சீனம்: 吉打州大臣) என்பவர் மலேசிய மாநிலமான கெடா மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆவார். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் என்று அழைப்பது வழக்கம். இவர் கெடா மாநில சட்டமன்றத்தின் (Kedah State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.

தற்போது கெடா மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் சனுசி முகமது நோர் (Sanusi Md Nor). இவர் 17 மே 2020 முதல் கெடா மாநிலத்தின் முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.

நியமனம்[தொகு]

கெடா மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, கெடா சுல்தான் முதலில் மந்திரி பெசாரை மாநில நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் மந்திரி பெசார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் மந்திரி பெசார் பெற்று இருக்க வேண்டும்.

கெடா மந்திரி பெசார் இசுலாம் மதத்தைச் சார்ந்தவராகவும்; மலாய் இனத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவரின் குடியுரிமை, பதிவு மூலம் பெற்ற ஒரு மலேசியக் குடிமகனாக இருக்கக்கூடாது. மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில செயற்குழுவில் கெடா சுல்தான் நியமிப்பார்.

மாநில ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் கெடா சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். கெடா மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு[தொகு]

மாநில அரசாங்கம் தனது சட்டங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப் படுமானால்; மந்திரி பெசார் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பது சுல்தானின் பொறுப்பு ஆகும். சுல்தான் அனுமதிக்கும் காலம் வரையில்; மந்திரி பெசார் பதவி வகிக்காத ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியில் இருப்பார்.

ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த மந்திரி பெசார் தன் பதவியைத் துறப்பு செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு மந்திரி பெசாரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய மந்திரி பெசாராகச் சுல்தான் நியமிப்பார்.

அதிகாரங்கள்[தொகு]

ஒரு மந்திரி பெசாரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு மந்திரி பெசார் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு மந்திரி பெசார் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது சுல்தானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு மந்திரி பெசாரால் நிறைவேற்ற முடியாமல் போனால், அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எடுக்கப்படுமானால், அரசாங்கப் பதவிகளில் இருந்து அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.

தற்காலிக மாநில அரசின் மந்திரி பெசார்[தொகு]

மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில் சுல்தானால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப் படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மந்திரி பெசார் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்க பதவியில் (Caretaker Government) இருப்பார்கள்.

கெடா மந்திரி பெசார் பட்டியல்[தொகு]

1886-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு வரையிலான கெடா மாநிலத்தின் மந்திரி பெசார்களின் பட்டியல் பின்வருமாறு:[1]

அரசியல் கட்சிகள்:
      அம்னோ       கூட்டணி /       பாரிசான் நேசனல்       பாக்காத்தான் ராக்யாட்       பாக்காத்தான் அரப்பான்       பெரிக்காத்தான் நேசனல்

# தோற்றம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
தொகுதி
பதவியில் கட்சி[a] தேர்தல் கூட்டத் தொடர்
பதவியேற்பு பதவி விலகல் பதவி காலம்
1 டத்தோ சர்
முகமது செரிப் ஒசுமான்
(Mohamad Sheriff Osman)
(1890–1962)
1 பிப்ரவரி
1948
சனவரி
1954
அம்னோ
கூட்டணி
(அம்னோ)
2 துங்கு இசுமாயில் துங்கு யாகயா
(Tunku Ismail Tunku Yahya)
(1907–1969)
சனவரி
1954
24 மே
1959
கூட்டணி
(அம்னோ)
3 சையது ஒமர் சையத் அப்துல்லா சகாபுதீன்
(Syed Omar Syed Abdullah Shahabuddin)
பாலிங் பாராட் சட்டமன்ற உறுப்பினர்
(1902–1967)
24 மே
1959
7 டிசம்பர்
1967
8 ஆண்டுகள், 197 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1959 1-ஆவது சட்டமன்றத் தொடர்
1964 2-ஆவது சட்டமன்றத் தொடர்
4 டத்தோ ஸ்ரீ
சையது அகமது சகாபுதீன்
(Syed Ahmad Shahabuddin)
பாடாங் தெராப் சட்டமன்ற உறுப்பினர் (1974)
கோலா நெராங் சட்டமன்ற உறுப்பினர்
(1925–2008)
14 டிசம்பர்
1967
13 சூலை
1978
10 ஆண்டுகள், 211 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1969 3-ஆவது சட்டமன்றத் தொடர்
கூட்டணி
(அம்னோ)
1974 4-ஆவது சட்டமன்றத் தொடர்
5 சையத் நகார் சையத் சகாபுதீன்
(Syed Nahar Syed Shahabuddin)
(1934–1998)
லங்காவி சட்டமன்ற உறுப்பினர்
13 சூலை
1978
28 சனவரி
1985
6 ஆண்டுகள், 199 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
1978 5-ஆவது சட்டமன்றத் தொடர்
1982 6-ஆவது சட்டமன்றத் தொடர்
6 டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ
ஒசுமான் அரோப்
(Osman Aroff)
(பிறப்பு 1940)
ஜித்ரா சட்டமன்ற உறுப்பினர்
28 சனவரி
1985
16 சூன்
1996
11 ஆண்டுகள், 140 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
1986 7-ஆவது சட்டமன்றத் தொடர்
1990 8-ஆவது சட்டமன்றத் தொடர்
1995 9-ஆவது சட்டமன்றத் தொடர்
7 டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ
சனுசி ஜுனித்
(Sanusi Junid)
(1942–2018)
குவா சட்டமன்ற உறுப்பினர்
16 சூன்
1996
11 டிசம்பர்
1999
3 ஆண்டுகள், 178 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
8 டத்தோ ஸ்ரீ உத்தாமா
சையத் ரசாக் சையத் பராக்பா
(Syed Razak Syed Barakbah)
(1944–2023)
குபாங் ரோத்தான் சட்டமன்ற உறுப்பினர்
11 டிசம்பர்
1999
22 டிசம்பர்
2005
6 ஆண்டுகள், 11 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
1999 10-ஆவது சட்டமன்றத் தொடர்
2004 11-ஆவது சட்டமன்றத் தொடர்
9 டத்தோ ஸ்ரீ
மாட்சிர் காலீத்
(Mahdzir Khalid)
(பிறப்பு 1960)
பெடு சட்டமன்ற உறுப்பினர்
28 டிசம்பர்
2005
9 மார்ச்
2008
2 ஆண்டுகள், 72 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
10 டத்தோ ஸ்ரீ
அசீசான் அப்துல் ரசாக்
(Azizan Abdul Razak)
(1944–2013)
சுங்கை லீமாவ் சட்டமன்ற உறுப்பினர்
9 மார்ச்
2008
6 மே
2013
5 ஆண்டுகள், 58 நாட்கள் பாக்காத்தான் ராக்யாட்
(பாஸ்)
கெடா மாநிலத் தேர்தல், 2008 12-ஆவது சட்டமன்றத் தொடர்
11 டத்தோ ஸ்ரீ
முக்ரிஸ் மகாதீர்
(Mukhriz Mahathir)
(பிறப்பு 1964)
ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர்
6 மே
2013
3 பிப்ரவரி
2016
2 ஆண்டுகள், 273 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
கெடா மாநிலத் தேர்தல், 2013 13-ஆவது சட்டமன்றத் தொடர்
12 டத்தோ ஸ்ரீ
அகமட் பாசா அனிபா(Ahmad Bashah Md Hanipah)
(பிறப்பு 1950)
பாக்கார் பாத்தா சட்டமன்ற உறுப்பினர்
4 பிப்ரவரி
2016
10 மே
2018
2 ஆண்டுகள், 95 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
13 டத்தோ ஸ்ரீ
முக்ரிஸ் மகாதீர்
(Mukhriz Mahathir)
(பிறப்பு 1964)
ஜித்ரா சட்டமன்ற உறுப்பினர்
11 மே
2018
17 மே
2020
2 ஆண்டுகள், 6 நாட்கள் பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
கெடா மாநிலத் தேர்தல், 2018 14-ஆவது சட்டமன்றத் தொடர்
14 டத்தோ ஸ்ரீ
சனுசி முகமது நோர்
(Muhammad Sanusi Md Nor)
(பிறப்பு 1974)
செனரி சட்டமன்ற உறுப்பினர்
17 மே
2020
பதவியில் உள்ளார் 4 ஆண்டுகள், 6 நாட்கள் பெரிக்காத்தான் நேசனல்
(பாஸ்)
கெடா மாநிலத் தேர்தல், 2023 15-ஆவது சட்டமன்றத் தொடர்
  1. இந்த நெடுவரிசையில் மந்திரி பெசார் சார்ந்த கட்சியின் பெயர் மட்டுமே உள்ளது. அவர் தலைமையிலான மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்; அவை இங்கே பட்டியலிடப்படவில்லை.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kedah". WorldStatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 21 April 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடா_மந்திரி_பெசார்&oldid=3952058" இலிருந்து மீள்விக்கப்பட்டது