மலேசியப் பொதுத் தேர்தல், 1978

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய பொதுத் தேர்தல், 1978

← 1974 8–22 சூலை 1978 1982 →

மலேசிய மக்களவையின் 154 இடங்கள்
அதிகபட்சமாக 78 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்5,059,689
வாக்களித்தோர்75.30%
  First party Second party Third party
 
தலைவர் உசேன் ஓன் லிம் கிட் சியாங் அசுரி மூடா
கட்சி
பாரிசான் நேசனல்

ஜசெக

பாஸ்
முந்தைய
தேர்தல்
60.81%, 135 இடங்கள் 18.32%, 9 இடங்கள் 13 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
130 16 5
மாற்றம் 5 7 8
மொத்த வாக்குகள் 1,987,907 664,433 537,720
விழுக்காடு 57.23% 19.13% 15.58%
மாற்றம் 3.58pp 0.81pp

முந்தைய பிரதமர்

உசேன் ஓன்
பாரிசான் நேசனல்

பிரதமர்-அமர்வு

உசேன் ஓன்
பாரிசான் நேசனல்


மலேசிய பொதுத் தேர்தல், 1978 (ஆங்கிலம்: 1978 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1978) என்பது 1978 சூலை மாதம் 8-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரையில், மலேசியாவில் நடைபெற்ற 5-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவின் அப்போதைய 154 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாளில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 276 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 154 இடங்களில் 130 இடங்களை வென்றது. பாரிசான் நேசனல் கூட்டணிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 57.23%.[1]

பொது[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநில அளவிலான மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது.[2]

தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரை மலேசியப் பிரதமர் அல்லது மலேசியப் பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக் கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[3]

தேசியப் பொதுத் தேர்தல்[தொகு]

மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது.

ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகள்[தொகு]

கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%Seats+/–
பாரிசான் நேசனல்அம்னோ19,87,90757.2369+7
மலேசிய சீனர் சங்கம்17–2
சபா மக்கள் ஐக்கிய முன்னணி9புதிது
சரவாக் தேசியக் கட்சி90
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி80
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி6–1
ஐக்கிய சபா தேசிய அமைப்பு5–8
கெராக்கான்4–1
மலேசிய இந்திய காங்கிரசு3–1
மக்கள் முற்போக்கு கட்சி0–1
மொத்தம்130–5
ஜனநாயக செயல் கட்சி6,64,43319.1316+7
மலேசிய இசுலாமிய கட்சி5,37,72015.485–8
சரவாக் டயாக் இனக்கட்சி35,0091.010புதிது
மலேசியச் சமூக மக்களாட்சி கட்சி23,7920.680–1
மலேசிய மக்கள் கட்சி22,0310.6300
சமூக மக்களாட்சி கட்சி13,7880.400புதிது
சரவாக் மக்கள் அமைப்பு10,1500.291புதிது
சமூக ஐக்கிய சங்கக் கட்சி5,5940.160புதிது
சபா மக்களாட்சி மக்கள் கட்சி4,4910.130புதிது
சரவாக் உமாட் கட்சி3,8980.110புதிது
அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)1,7310.050புதிது
சபா சீனர் சங்கம்1,3050.040–3
சரவாக் மக்கள் தேசிய கட்சி8610.020புதிது
தாயக உணர்வு ஒன்றியம்3500.0100
சுயேச்சைகள்1,60,3704.622+1
மொத்தம்34,73,430100.001540
செல்லுபடியான வாக்குகள்34,73,43096.57
செல்லாத/வெற்று வாக்குகள்1,23,3023.43
மொத்த வாக்குகள்35,96,732100.00
பதிவான வாக்குகள்/வருகை47,76,36175.30
மூலம்: Nohlen et al. CLEA, Thambipillai

மேற்கோள்கள்[தொகு]

  1. Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p152 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
  2. Rahman, Rashid A. (1994). The Conduct of Elections in Malaysia, p. 10. Kuala Lumpur: Berita Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-969-331-7.
  3. Chow, Kum Hor (10 August 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times. 

வெளி இணைப்புகள்[தொகு]