மலேசிய இந்திய காங்கிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலேசிய இந்திய காங்கிரஸ்
马来西亚印度国会
Kongres India Se-Malaysia
MIC
Malaysian Indian Congress.gif
மலேசிய இந்திய காங்கிரஸ் கொடி
தலைவர் டத்தோ ஜி. பழனிவேல்
துணைத் தலைவர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம்
தொடக்கம் 1946
தலைமையகம் கோலாலம்பூர், மலேசியா
கொள்கை தேசியம், பொருளாதாரப் புதுமை, சமுதாய மலர்ச்சி
அரசியல் நிலைப்பாடு வலதுசாரி
தேசிய சார்பு மலேசியம்
அதிகாரப் பட்ச நிறம் பச்சை, நீலம், வெண்மை
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள்
4 / 222
மாநில சட்டமன்றத் தொகுதிகள்
5 / 576
இணையத்தளம்
http://www.mic.org.my/

மலேசிய இந்திய காங்கிரசு (Malaysian Indian Congress அல்லது ’’Kongres India Se-Malaysia’’) என்பது மலேசியாவில் இயங்கும் ஒர் அரசியல் கட்சி ஆகும். இது 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுருக்கமாக ம.இ.கா என்று அழைக்கப் படுகிறது. பெரும்பான்மையான மலேசியத் தமிழர்களைப் பிரதிநிதிப் படுத்தும் கட்சியாக விளங்குகின்றது.

கோலாலம்பூர், செந்தூல் செட்டியார் மண்டபத்தில் 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் அகில மலாயா இந்தியர் மாநாடு நடைபெற்றது. அந்த அமைப்புக் கூட்ட மாநாட்டில் மலாயா, சிஙப்பூரைச் சேர்ந்த 561 பேர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் “மலாயா இந்தியர் காங்கிரஸ்” என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

ஒப்பந்தக் கூலிகளாகத் தென் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்கள். 1890.
மலாயாவில அடிமைகளைப் போல நடத்தப் பட்ட தமிழர் இனம்
ஐந்தாம் தலைமுறை தமிழர்களின் நெஞ்சங்களில் வாழும் மலாயாத் தமிழர்கள்.
தோட்டங்களில் இருந்த ரப்பர் பதனீட்டுச் சாலைகளில் வேலை செய்த தமிழர்கள்
மலேசியக் காமராஜர் துன் வீ.தி.சம்பந்தன். மலேசிய இந்தியர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மாமனிதர்.
மலேசியாவில் இந்தியர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பு. 2007ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.
காவல் துறையின் தண்ணீர் பீரங்கித் தாக்குதலைச் சமாளிக்கும் தமிழ் இளைஞர்கள்.

மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.கா. மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களுக்காகத் தோற்றுவிக்கப் பட்டது. பெரும்பாலான இந்தியர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால், ஒப்பந்த அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப் பட்டனர்.

ம.இ.காவைத் தோற்றுவித்த ஜோன் ஏ. திவி, அப்போது இந்தியர்களிடையே நிலவிய சமூகப் பிரச்னைகளைக் களைவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.

தமிழர்களின் கல்வித் தகுதிக்குறைவு, மதுவிற்கு அடிமை, குடும்பப் பிரச்னைகள் போன்றவையே அப்போதைய இந்தியர்களிடையே சமூகப் பிரச்னைகளாக நிலவி வந்தன.

பிரித்தானியர்கள் மீது இந்தியர்களின் கசப்புணர்வுகள்[தொகு]

பூத் சிங் ம.இ.கா. தலைவராக இருந்த காலத்தில் Malayan Union எனும் மலாயா ஒன்றியத்தில் சேர்வதற்கு மலாயா இந்தியர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கு பிரித்தானியர்கள் மீது இந்தியர்களுக்கு இருந்த கசப்புணர்வுகளே காரணம் ஆகும்.

ம.இ.காவின் மூன்றாவது தலைவர் கே.இராமநாதன் காலத்தில், ம.இ.காவில் பொதுவான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது.

1951 ஆம் ஆண்டு ம.இ.கா.வின் நான்காவது தலைவராக கே.எல்.தேவாசர் பொறுப்பு ஏற்றார். மலேசிய அரசியலில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அரசியல் கூட்டுறவு கண்டிப்பாக இருக்க வேண்டும் எனபதை உணர்ந்தார்.

கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் வாய்ப்பு[தொகு]

அதனால் மலாய்க்காரர்களின் அம்னோ கட்சி, சீனர்களின் ம.சீ.ச. கட்சியுடன் இணைந்து போகும் தனமைகளை முன் நிறுத்தினார். 1952 ஆம் ஆண்டு கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட ம.இ.காவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

டத்தோ ஓன் ஜாபார் தலைமையில் மலாயா சுயேட்சை கட்சியில் Independent Malayan Party (IMP) ம.இ.கா இணைந்து அந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிட்டின.

1955-இல் துன் வீ.தி.சம்பந்தன் பொறுப்பேற்ற பிறகு ம.இ.கா.வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இவர் தலைமைத்துவத்தின் கீழ், ஒரு பரந்த அடிப்படையில் ம.இ.கா. புதுத் தோற்றம் கண்டது. 1957 ஆகஸ்டு 31ஆம் நாள் மலேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது.

அந்த மெர்டேகா சுதந்திர ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. அதில் துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாகக் கையெழுத்திட்டார்.

தடுமாறி நின்ற தமிழ்க் குடும்பங்கள்[தொகு]

இந்தக் காலக்கட்டத்தில் ம.இ.கா. ஒரு பெரும் சவாலை எதிர்நோக்கியது. மேலை நாட்டு நிறுவனங்கள் ரப்பர் தோட்டங்களை விற்று விட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட உள்நாட்டவர் அந்தத் தோட்டங்களை வாங்கித் துண்டாடத் தொடங்கினர்.

அதனால் பல ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வாழ்க்கையில் தடுமாறிப் போய் நின்றனர்.

நடுத்தெருவிற்கு வந்து நின்ற தமிழ்க் குடும்பங்கள் ஆயிரம் ஆயிரம். இதைப் பார்த்த முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தோட்டங்கள் துண்டாடப் படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். நாடாளுமன்றத்தில் தோட்டத் துண்டாடல் சட்டத்தையும் நிறைவேற்றினார்.

அல்லும் பகலும் அலைந்த துன் சம்பந்தன்[தொகு]

மலேசியாவில் பிரதமர் பதவியில் இருந்தவர்களில் மலேசிய இந்தியர்களின் நலன்களில் அதிகமாகக் கவனம் செலுத்திய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆகும். அடுத்த நிலையில் இருப்பவர் இப்போதைய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்.

தோட்டங்கள் துண்டாடப் பட்டதினால் இந்திய இனம் தடுமாறிப் போய் நின்றக் கட்டத்தில் ம.இ.கா. தீவிரமாகக் களம் இறங்கியது. துன் வீ.தி.சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் சென்று தோட்டத் தொழிலாளர்களிடம் பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்தார்.

அல்லும் பகலும் அலைந்து பணத்தைச் சேர்த்தார். அரசாங்கச் சலுகைகளைப் பயன் படுத்தவில்லை. அத்துடன் அரசாங்க வாகனங்களையும் பயன் படுத்தவில்லை. தன் சொந்த வாகனங்களைப் பயன் படுத்தினார்.

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்[தொகு]

அந்தப் பத்துப் பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் National Land Finance Cooperative Society (NLFCS) எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம். இந்தத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தான் 1970 ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே ஆகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது.[1]

துன் சம்பந்தனின் தன்னலமற்ற சேவைகளினால் ஆயிரம் ஆயிரம் இந்தியர் குடும்பங்கள் இப்போது நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. துன் சம்பந்தன் அவர்களை மலேசிய இந்தியர்கள் கர்ம வீரர் காமராசராக நினைக்கின்றார்கள். மலேசியாவில் Bank Buruh எனும் தொழிலாளர் வங்கி உருவாவதற்குக் காரணமாக இருந்தவரும் துன் சம்பந்தன் அவர்களே!

1973ஆம் ஆண்டில் இருந்து தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் பணியாற்றி வருகின்றார்.

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்[தொகு]

அடுத்து ம.இ.கா.வின் ஆறாவது தலைவராக டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் பதவிக்கு வந்தார். இவருடைய தலைமையில் மலேசியர்களின் பொருளாதாரம் தலை தூக்கத் தொடங்கியது. இவர் Nesa Multipurpose Cooperative எனும் நேசா பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தை உருவாக்கினார்.

அடுத்து ம.இ.கா. யூனிட் டிரஸ்ட் எனும் முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்தார். இந்தத் திட்டங்களுக்குப் பின்னால் இருந்தவர் டத்தோ சி. சுப்பிரமணியம். இவர் மலேசிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் ஆகும்.

அடுத்து டான்ஸ்ரீ மாணிக்கா உருவாக்கிய திட்டங்கள் மிகவும் அருமையான திட்டங்கள். MIC Education Fund எனும் ம.இ.கா கல்விநிதி, Malaysian Indian Scholarship எனும் மலேசிய இந்தியர்கள் சகாய நிதி. இவற்றின் மூலமாக பல ஆயிரம் ஏழை இந்திய மாணவர்கள் பட்டதாரிகள் ஆயினர்.

ம.இ.காவின் முதல் செயற்குழு[தொகு]

1946 ஆகஸ்டு 3 ஆம் நாள் ம.இ.கா தோற்றுவிக்கப் பட்டது. மலாயா இந்தியர்களின் அரசியல் கழகமான ம.இ.காவின் முதல் தலைவராக ஜான் திவி என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டார். கூட்டுச் செயலாளர்களாக டி.சபாரத்னம், ஏ.கே.எல்.ஞான சிகாமணி ஆகிய இருவரும் பொறுப்பேற்றனர். குருபாக்ஸ் சிங் ஷாம்பி என்பவர் பொருளாளர் பொறுப்பை ஏற்றார்.

செயலவை உறுப்பினர்கள்

  • ஆர்.ஜி.சேனம்
  • எஸ்.வி.சீனிக்குட்டி
  • எஸ்.அமலு
  • கே.உன்னி
  • உ.அரு.அருணாசலம் செட்டியார்
  • டாக்டர் மூத்ததம்பி
  • ஆர்.ஜும்மாபாய்
  • டாக்டர் என்.கே.மேனன்
  • ஆர்.பாலன்
  • ஏ.என்.மித்ரா
  • டாக்டர் என்.ஆப்ரகாம்
  • ஏ.ராமன்
  • க.குருபாதம்
  • சர்தார் பூத் சிங்

மாரியம்மன் ஆலயத்தில் ம.இ.கா. அலுவலகம்[தொகு]

புதிய அரசியல் கட்சியாக உருவான ம.இ.கா இயங்க ஓர் அலுவலகம் தேவைப் பட்டது. கோலாலம்பூர் ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் உள்ள மகா மாரியம்மன் ஆலய முன் பகுதியில் ஒரு பலகைத் தடுப்பு அறை கட்டப் பட்டது. இந்த அறையில் தான் 1946 லிருந்து 1956 வரை 10 வருடங்களாக ம.இ.கா தலைமை அலுவலகம் இயங்கி வந்தது.[2]

ம.இ.கா தலைவர்கள்[தொகு]

  1. ஜான் திவி (1946 - 1947)
  2. பூத் சிங் (1947 - 1950)
  3. கே. இராமநாதன் (1950 - 1951)
  4. கே. எல். தேவாசர் (1951 - 1955)
  5. வீ. தி. சம்பந்தன் (1955 - 1973)
  6. வி.மாணிக்கவாசகம் (1973 - 1979)
  7. ச. சாமிவேலு (அக்டோபர்12, 1979 - டிசம்பர் 6, 2010)[3]
  8. ஜி. பழனிவேல் (டிசம்பர் 7, 2010 - தற்சமயம் வரை)

ம.இ.கா தலைவர்கள் அன்றும் இன்றும்[தொகு]

ம.இ.காவின் முதல் தலைவர் ஜோன் ஏ. திவி
இரண்டாவது தலைவர் பூத் சிங்
ம.இ.காவின் மூன்றாவது தலைவர் கே. இராமநாதன்
நான்காவது தலைவர் கே. எல். தேவாசர்

ஜான் திவி[தொகு]

ம.இ.காவின் முதல் தலைவர் ஜான் திவி. இவர் 1946 லிருந்து 1947 வரை தலைவராக இருந்தார். இவருடைய காலத்தில் ம.இ.காவிற்கு நிறைய கிளைகள் அமைக்கப் பட்டன. தொடக்கத்தில் செந்தூல், கிள்ளான் பகுதிகளில் கிளைகள் தோன்றின. அப்பொழுது இருந்த சூழ்நிலைகளில் வெவ்வேறு இடங்களுக்குப் கட்சி பணிகளுக்காகப் பயணம் மேற்கொள்வது சிரமமாக இருந்தது.[4]

அதனால், ஜான் திவிக்கு இந்திய சமூகத்தினர் ஒரு காரை அன்பளிப்பாகக் கொடுத்தனர். 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி ம.இ.காவின் முதல் பேராளர் மாநாடு கோலாலம்பூர், செந்தூல் செட்டியார் மண்டபத்தில் நடந்தது.

பூத் சிங்[தொகு]

ம.இ.காவின் இரண்டாவது தலைவர் பூத் சிங். காலனித்துவ ஆட்சியை தீவிரமாக எதிர்த்தவர். பதவி காலம் 1947-1948. ஆங்கிலேயர் முன்மொழிந்த மலாயான் யூனியன் அரசியல் அமைப்பைப் பற்றி தெரிந்து கொண்டு இந்தியர்களின் குடியுரிமை உரிமைகளுக்காகப் போராடியவர். இந்தியர்களுக்கு அவர்கள் பிறந்த நாட்டின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது.

ஆனால், சரியான விளக்கம் இல்லை. இந்தியர்களின் பல சலுகைகள் தெளிவாக விளக்கவில்லை. கூட்டரசுப் அரசியல் அமைப்பு சமத்துவத்தை நிலைநாட்ட அமைக்கப்பட்ட அகில மலாயா கூட்டு நடவடிக்கை மன்றத்தில் மஇகாவை இணைக்க முயற்சி எடுத்துக் கொண்டவர்.

கே. இராமநாதன்[தொகு]

ம.இ.காவின் மூன்றாவது தேசியத் தலைவர் கே. இராமநாதன். இவர் மலாய், சீன சமூகங்களைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ம.இ.காவை வலியுறுத்தினார். ஒத்துழைப்பு வழங்காவிட்டால ம.இ.காவிற்கு தொய்வு நிலை ஏற்படும் என்று சொன்னார்.

அதன்படி, 1952ஆம் ஆண்டு கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் மற்றச் சமூகக் கட்சிகளுடன் இணைந்து மஇகா போட்டியிட வழி வகுத்தார். மலேசிய அரசியலில் கூட்டணி அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் இயக்கமே வெற்றி பெறும் என்று திடமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

கே. எல். தேவாசர்[தொகு]

திரு. கே. எல். தேவாசர் நான்காவது தேசியத் தலைவராக 1951லிருந்து 1955 வரை பொறுப்பேற்று இருந்தார். இவர் தலைவராக இருந்த காலத்தில் அம்னோ மற்றும் ம.சீ.ச சமூக அரசியல் கட்சிகளுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளப் பட்டது. அதன் வழி மஇகா மூன்றாவது கூட்டணிக் கட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ம.இ.கா எனும் இந்தியர்களின் கட்சி மலாயா என்ற அமைப்புடன் இணைந்து மற்ற கட்சிகளுடன் இணக்கமான நிலையில் செயலாற்றும் எனும் நம்பிக்கைகளுக்கு தேவாசர் அடித்தளம் அமைத்தார்.

ம.இ.காவின் நோக்கம்[தொகு]

  • மலேசியாவின் தன்னாட்சி உரிமையையும், சுதந்திரத்தையும் தற்காத்து பேணிக் காப்பாற்றுதல்
  • மலேசிய அரசியல் சட்டத்தை கடைப்பிடித்தல்; ருக்குன் நெகாரா கோட்பாடுகளைப் பின்பற்றுதல்
  • மலேசிய இந்தியர்களின் சட்டபூர்வமான இலட்சியங்களுக்கு ஆக்கம் ஊட்டுதல்
  • மலேசிய வாழ் இந்தியர்களின் அரசியல், பொருளாதரம், கல்வி, கலாச்சார சமூக உரிமைகளை மேம்படுத்தல்
  • இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தையும், ஒற்றுமையையும் வளர்த்தல்
  • மற்ற இயக்கங்களுடன் ஒத்துழைத்தல்; இணைந்து பணியாற்றுதல்
  • மற்ற சமுதாயத்துடன் இணைந்து நின்று மலேசியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுதல்

ஆய்வாளர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Land Finance Co Operative Society (NLFCS". NLFCS. http://www.nlfcs.com.my/nlfcs.html. பார்த்த நாள்: 30.07.2011@4.43pm.  The society has 49682 members with a share capital of RM 109 million as at 31.12.2009.
  2. ப.சந்திரகாந்தம், நூலாசிரியர். "200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள் Pages.188-198". Uma Publications, Kuala Lumpur. 
  3. "Malaysian Indian Community". Malaysian Indian Community. http://indian.community.com.my/political-influences/. பார்த்த நாள்: 30.07.2011@4.34pm.  ksmk
  4. "ம.இ.கா வரலாறு". மலேசிய இந்திய காங்கிரஸ். 2011. http://www.mic.org.my/tm/history_tm.htm. பார்த்த நாள்: 06.11.2011@1.59am.  ksmk.