கள்ளந்திரி

ஆள்கூறுகள்: 10°02′18″N 78°12′02″E / 10.0383°N 78.2005°E / 10.0383; 78.2005
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கள்ளந்திரி
Kallandhiri
புறநகர்ப் பகுதி
கள்ளந்திரி Kallandhiri is located in தமிழ் நாடு
கள்ளந்திரி Kallandhiri
கள்ளந்திரி
Kallandhiri
கள்ளந்திரி, மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°02′18″N 78°12′02″E / 10.0383°N 78.2005°E / 10.0383; 78.2005
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்219 m (719 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,232
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625301
தொலைபேசி குறியீடு+914549xxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, அப்பன்திருப்பதி, மூன்றுமாவடி, கடச்சனேந்தல், கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி
மாவட்ட ஆட்சித் தலைவர்மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்ற உறுப்பினர்பி. மூர்த்தி
இணையதளம்https://madurai.nic.in

கள்ளந்திரி (ஆங்கில மொழி: Kallandhiri) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கள்ளந்திரி ஊராட்சியில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கள்ளந்திரி, மதுரை - அழகர் கோவில் செல்லும் சாலையில், மதுரையிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. கள்ளந்திரி வருவாய் கிராமம், மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625301 ; தொலைபேசி குறியீடு எண் 04549 ஆகும். [1] கள்ளந்திரியில் ஐடிபிஐ வங்கிக் கிளையும்; அரசு மருத்துவ மனையும் உள்ளது.

அமைவிடம்[தொகு]

மதுரை - அழகர் கோவில் செல்லும் அழகர்கோயில் சாலையில், மதுரையிலிருந்து 17 கி.மீ. தொலைவில், அப்பன்திருப்பதிக்கு அடுத்து கள்ளந்திரி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 219 உயரத்தில், 10°02′18″N 78°12′02″E / 10.0383°N 78.2005°E / 10.0383; 78.2005 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இவ்வூர் அமையப் பெற்றுள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1,488 குடும்பங்களும்; 892.62 ஹெக்டேர் நிலப்பரப்பும் கொண்ட கள்ளந்திரி வருவாய் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 6,232 ஆகும். ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 (20.07%) ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழைந்தகள் 706 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 77.13% ஆகும். இக்கிராமத்தின் மொத்த வேளாண் மற்றும் இதர தொழிலாளர்கள் 3,171 ஆகும். [2]அப்பன்திருப்பதியில் தமிழ், தெலுங்கு மற்றும் சௌராஷ்டிர மொழிகள் பேசப்படுகிறது.

அருகே அமைந்த கிராமங்கள்[தொகு]

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

  • வீரசின்னம்மாள் மற்றும் வீரநாகம்மாள் கோயில்

மேற்கோள்கள்[தொகு]

  1. Kallandhiri
  2. Kallandhiri Population

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளந்திரி&oldid=3778215" இலிருந்து மீள்விக்கப்பட்டது