எரிமோபிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிமோபிலா
எரிமோபிலா அல்பெசுட்ரிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
எரிமோபிலா

எப். போயி, 1828
இனம்:
உரையினை காண்க
வேறு பெயர்கள்
  • ஓட்டோகோரிகசு
  • பிலிரெமோசு
  • பிலியோகல்காரியசு

எரிமோபிலா (Eremophila) என்பது பறவை பேரினம் ஆகும். இந்தப் பேரினம் இரண்டு கொம்புடைய வானம்பாடியினை உள்ளடக்கியது.

வகைப்பாட்டியல்[தொகு]

தற்போதைய பேரினப் பெயர் பண்டைக் கிரேக்கச் சொல்லான எரிமோசு என்பதிலிருந்து வந்தது. எரிமோசு என்பதன் பொருள் "பாலைவனம்" ஆகும். பிலியோ, "காதல்" “விருப்பம்” என்பதைக் குறிக்கும்.

பரவியுள்ள இனங்கள்[தொகு]

படம் அறிவியல் பெயர் பொது பெயர் விநியோகம்
எரிமோபிலா அல்பெசுட்ரிசு கொம்புள்ள வானம்பாடி ஐரோப்பா
எரிமோபிலா பிலோபா தெம்மினிக் வானம்பாடி அல்ஜீரியா, எகிப்து, ஈராக், இசுரேல், ஜோர்டான், குவைத், லிபியா, மொரிட்டானியா, மொராக்கோ, சவுதி அரேபியா, சிரியா, துனிசியா மற்றும் மேற்கு சஹாரா

அழிந்துபோன இனங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் குறைந்தது ஒரு புதை படிவ சிற்றினம் உள்ளது:

  • எரிமோபிலா ஓர்கோனென்சிசு (நடு ஆசியாவின் பிற்பகுதி பிலியோசீன், இணைச்சொல் = ப்ளியோகல்காரியசு ஓர்கோனென்சிசு)[1]
  • எரிமோபிலா ப்ரீஅல்பெசுட்ரிசு (பிலியோசீன் ஆப் வர்ஷெட்சு, பல்கேரியா) [2]

விளக்கம்[தொகு]

மற்ற வானம்பாடிகளைப் போலல்லாமல், இவை தனித்துவமான தலை மற்றும் முக வடிவங்களைக் கொண்ட தோற்றமுடைய சிற்றினங்களாகும். கோடையில், இரண்டு சிற்றினங்களின் ஆண்களுக்கும் கருப்பு "கொம்புகள்" உள்ளன. இவை இந்த வானம்பாடிகளுக்கு இவற்றின் மாற்றுப் பெயர்களை வழங்குகின்றன.

பரவல்[தொகு]

இவை திறந்த வெளியில் தரையில் கூடு கட்டும் வானம்பாடிகளாகும். புலம்பெயர்ந்த கொம்பு வானம்பாடி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி மற்றும் ஐரோப்பாவின் மலைப்பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. தெம்மின்க் வானம்பாடி முக்கியமாக வட ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும், வடக்கு அரேபியாவிலிருந்து மேற்கு ஈராக் வரையிலும் வசிக்கும் சிற்றினமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. E. S. Palastrova; N. V. Zelenkov (2020). "A fossil species of Eremophila and other larks (Aves, Alaudidae) from the Upper Pliocene of the Selenga River valley (Central Asia)". Paleontological Journal 54 (2): 187–204. doi:10.1134/S0031030120020124. https://www.elibrary.ru/item.asp?id=42445802. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Boev, Z. 2012. Neogene Larks (Aves: Alaudidae (Vigors, 1825)) from Bulgaria - Acta zoologica bulgarica, 64 (3), 2012: 295-318.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமோபிலா&oldid=3673050" இலிருந்து மீள்விக்கப்பட்டது