ஊட்டக்குறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐக்கிய நாடுகள் சபைப் புள்ளி விபரங்களின்படி, நாடு வாரியாக ஊட்டக்குறையால் பாதிக்கப்பட்ட மக்கள்தொகை.
ஊட்டக்குறை
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Orange ribbon.svg
இந்த செம்மஞ்சள் நிறப் பட்டி ஊட்டக்குறைவுக்கான விழிப்புணர்வை குறிக்கும்.
ICD-9 263.9
eMedicine ped/1360 
பாடத் தலைப்பு D044342

ஊட்டக்குறை என்பது, பொருத்தமற்ற, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவினால் ஏற்படும் மருத்துவவியல் நிலையைக் குறிக்கும். இது பொதுவாக குறைந்த உணவு உட்கொள்ளுதலினாலும், உறிஞ்சும் தன்மைக் குறைவாலும், அளவுக்கதிகமாக ஊட்டம் இழத்தலாலும் ஏற்படும் ஊட்டக் குறைவைக் குறித்தாலும், இது கூடுதலாக உணவு உண்பதாலும், குறிப்பிட்ட ஊட்டச் சத்துக்களை அளவு மீறி உட்கொள்வதாலும் ஏற்படக்கூடிய மிகையூட்டத்தையும் உள்ளடக்குகிறது. ஒருவர் நீண்டகாலத்துக்கு உடல்நலத்துக்குத் தேவையான அளவிலும், தரத்திலும் ஊட்டச் சத்துக்களை உட்கொள்ளத் தவறினால் ஊட்டக்குறை ஏற்படும். நீண்டகால ஊட்டக்குறை தொற்றுநோய்களையும், வேறு சில நோய்களையும் ஏற்படுத்தக்கூடியது.


ஊட்டக்குறை பொதுவாக வளரும் நாடுகளில் காணப்படும் கடுமையான வறுமையுடன் தொடர்புபட்டது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளின் அறிவுத்திறன் குறைவுக்கு ஒரு காரணமாக உள்ளது. பொருத்தமற்ற உணவு, அதிக உணவு உண்ணல், சமநிலை உணவு இன்மை என்பவற்றால் வளர்ந்த நாடுகளிலும் ஊட்டக்குறை காணப்படுகிறது. இது அதிகரித்து வரும் உடற் பருமன் போன்றவற்றினால் வெளிப்படுகிறது.

மிகப்பொதுவாக ஊட்டக்குறை உள்ளோரின் உணவில் போதிய கலோரிகள் இருப்பதில்லை அல்லது புரதம், உயிர்ச்சத்துக்கள், கனிமங்கள் என்பன பற்றாக்குறையாக இருக்கின்றன. ஊட்டக்குறையில் இருந்து உருவாகும் மருத்துவப் பிரச்சினைகள் பொதுவாக பற்றாக்குறை நோய்கள் எனப்படுகின்றன. இசுகேவி என்னும் நோய் மிகவும் அறியப்பட்ட ஒரு நோயாகும். உயிர்ச்சத்து சி குறைவினால் உண்டாகும் இந்த நோய், இப்போது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டக்குறை&oldid=1106145" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்