பசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருவருக்கு உணவு தேவைப்படுகையில் பசி (hungry) என்ற உணர்வு ஏற்படுகிறது. பல நேரம் பசி எடுக்காத நிலை பசியின்மை ஆகும். ஐப்போதாலமசு (Hypothalamus) எனும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் (Hormone) நுரையீரலில் உள்ள அறிமானிகளைக் குறி வைத்துச் சுரப்பதாலேயே அடிக்கடி விரும்பத்தகாத பசி உணர்வு ஏற்படுகிறது.[1] ஆரோக்கியமான ஒருவர் சில வாரங்களுக்கு உணவு எடுத்துக் கொள்ளாமலேயே உயிர்வாழ முடியும்.[1] சாப்பிடாமல் விட்டு சில மணி நேரங்களுக்குப் பிறகே மிகவும் விரும்பத்தகாத ஒரு விதப் பசி உணர்வு ஏற்படுகிறது. பசி உணர்வு உணவு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே மட்டுப்படுத்தப்படுகிறது.

பசி எனும் சொல்லானது பொதுவாகச் சமூகத்தில் தேவையான உணவில்லாதவரின் நிலையையும் அடிக்கடி அந்நிலைமையை உணர்பவரைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

பசி வேட்கை[தொகு]

வயிற்றில் பசி குறித்த உணர்வு ஏற்படுவது மறைமுகமாகப் பசி வேட்கை (Hunger pang) என்பதைக் குறிக்கும். கடைசியாக எடுத்துக் கொண்ட உணவு செரித்த 12 முதல் 24 மணி நேரத்திற்குள் பசி வேட்கை ஏற்படுவதில்லை.[2] ஒரு தனித்தப் பசிக் குறுக்கம் ஆனது 30 நொடிகள் வரையும், பசி வேட்கையானது 30 - 45 நிமிடங்கள் வரையும் நீடிக்கலாம். 30 - 150 நிமிடங்களுக்குள் பசி வேட்கை அடங்கும்.[2][2] ஒவ்வொருவருக்கும் இந்த நேரமானது மாறத்தக்கது.[2][2]உணர்ச்சிகள் பலவும் பசியைக் குறைக்க வல்லவை.[2][2] பசியின் அளவு ஆனது இரத்தத்தில் குறைவாக உள்ள சர்க்கரையால் அதிகரிக்கும். மேலும் சர்க்கரை நோயினால் அதிகரிக்கும்.[2] அவர்கள் மூன்று முதல் நான்கு நாட்களில் அதிகபட்ச பசி அளவையும் சில நாட்களில் மிகக் குறைவான பசி உணர்வையும் எட்டுவர். இருந்தபோதும் பசி என்பது எந்த ஒரு தனி மனிதருக்கும் அறவே இல்லாமல் இருக்காது.[3] பசியில்லா நிலை ஆனது இளைய வயதினர்க்கே அதிகம் ஏற்படுகிறது. மேலும் அதிக அளவிலான குடல் நோய்கள் உள்ளவர்களுக்கும் இது ஏற்படும்.[2] பசியிலா நிலைகளுக்கு இடைப்பட்ட கால அளவானது வயது முதிர்விர்கேற்ப அதிகரிக்கும்.[2]

உயிரியல் வழிமுறைகள்[தொகு]

லெப்டின், க்ரேலின் போன்ற இயக்குநீர்களின் சுரப்பு உயிரினத்தை உணவு உட்கொள்ளுமாறு செய்கிறது. ஓர் உயிரி உணவு உட்கொள்ளும்போது அடிபோசைட்டுகள் லெப்டினை உடலில் சுரக்கச் செய்கின்றன.[4] லெப்டின் அதிக அளவு சுரந்தால் பசியைக் குறைத்து விடும்.[4] உணவு உண்ணாமல் இருந்த சில நேரங்களுக்குப் பிறகு லெப்டினின் அளவு குறைகிறது. லெப்டினின் குறைவான அளவு இரண்டாம் நிலை ஆர்மோனான க்ரெலினைச் சுரக்கச் செய்கிறது. இது பசியைத் தூண்டுகிறது.

க்ரெலினின் அதிகபட்ச உற்பத்தியானது உணவைப் பார்த்தவுடனேயே சாப்பிடும் விருப்பத்தைத் தூண்டுகிறது என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன.[5] மேலும் உளைச்சலும் இந்த இயக்குநீரின் சுரப்பை அதிகரிக்கிறது. இதன்மூலம் மனஉளைச்சலின் போதும் ஏன் பசி ஏற்படுகிறது என்று அறியப்படுகிறது.

நடத்தைசார் செயல்[தொகு]

பசி பல விலங்குகளில் சுறுசுறுப்புத் தன்மையையும் இயக்கத்தையும் அதிகரிக்கிறது.[6] எடுத்துக்காட்டாக சிலந்திகளில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின் படி பசியில் இருந்த சிலந்திகள் இரைபிடித்துண்டபின் அதிக எடையைப் பெற்றன என்று அறியப்பட்டது.[6] இம்முறை பல விலங்குகளில் காணப்படுகிறது. மனிதரிலும் இம்முறை தூங்கும்பொழுது காணப்படுகிறது.[7] .[7] இது பெரு மூளைப் புறணிக்கோ வயிற்றுக்கோ தொடர்பிலாத ஒன்றாகும்.[8][8]

ஒத்த நாட்டங்கள்[தொகு]

பசியின் பொழுது ஒரு குறிப்பிட்ட உணவை மட்டுமே உண்ணுவது பசி நாட்டம் (Food craving) ஆகும். இதேபோல தாகம் என்பது நீர்ம நாட்டம் ஆகும். நாட்ட நிறுத்தம் மருந்துப் பொருள்களுக்கு அடிமையாதலை ஏற்படுத்தும்.

திருக்குறளில்[தொகு]

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவர் ஆற்றலின் பின் (225)

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. (944)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பசி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 "How long can someone survive without water?". பார்க்கப்பட்ட நாள் 2007-05-14.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 A. J. Carlson (1931) Hunger The Scientific Monthly 33:77-79.
  3. Carlson, A. J. & Hoelzel, F. (1952). The alleged disappearance of hunger during starvation. அறிவியல் , 115 :526-527.
  4. 4.0 4.1 OMIM - LEPTIN; LEP
  5. Malik, S; McGlone F, Bedrossian D, Dagher A (2007). Cell Metabolism 7: 400–9. பப்மெட்:18460331. 
  6. 6.0 6.1 Provencher, L. & Riechert, S. E. (1991) Short-Term Effects of Hunger Conditioning on Spider Behavior, Predation, and Gain of Weight Oikos 62:160-166
  7. 7.0 7.1 Wald, G.; Jackson, B. (1944) Activity and Nutritional Deprivation Proceedings of the National Academy of Sciences of the United States of America 30:255-263
  8. 8.0 8.1 "George Wald: The Origin of Death". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசி&oldid=2899071" இலிருந்து மீள்விக்கப்பட்டது