இலலித் மோகன் பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலலித் மோகன் பானர்ஜி
பிறப்புமேற்கு வங்காளம், இந்தியா
பணிஅறுவை சிகிச்சை நிபுணர்
அறியப்படுவதுமருத்துவ கல்வியாளர்
விருதுகள்பத்ம பூசண்

இலலித் மோகன் பானர்ஜி (Lalit Mohan Banerjee) ஓர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவ கல்வியாளரும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறுவை சிகிச்சை பட்டம் பெற்ற முதல் மருத்துவ நிபுணருமாவார்.[1] இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பேராசிரியராக இருந்தார். மேலும், இந்தியக் குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்தர்.[2] இந்திய அறுவைசிகிச்சை சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர் அதன் மூன்றாவது தலைவராக இருந்தார் (1941-1942).[3] இந்த காலகட்டத்தில்தான், புகழ்பெற்ற கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான இரவீந்திரநாத் தாகூருடன் இணைந்து செயல்பட இவருக்கு கிடைத்தது. மருத்துவ அறிவியலுக்கான இவரது பங்களிப்புகளுக்காக 1955இல் இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த குடிமை விருதான பத்மா பூஷனின் விருதைதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[4] கொல்கத்தாவின் சோத்பூரிலுள்ள ஒரு சாலைக்கு "டாக்டர் எல்.எம். பானர்ஜி சாலை " என்று பெயரிடப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Asoke Kumar Bagchi" (PDF). National Medical Journal of India. 2005. Archived from the original (PDF) on மே 25, 2021. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016.
  2. Dilip Kumar Chakrabarti; Ramanuj Mukherjee; Samik Kumar Bandyopadhyay; Sasanka Nath; Saibal Kumar Mukherjee (October 2011). "R.G.Kar Medical College, Kolkata—A Premiere Institute of India". Indian J Surg. 73 (5): 390–393. doi:10.1007/s12262-011-0327-1. பப்மெட்:23024555. 
  3. "Past Presidents". Association of Surgeons of India. 2016. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  5. "Dr. L.M. Banerjee Road". Pinda.in. 2016. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலித்_மோகன்_பானர்ஜி&oldid=3544536" இலிருந்து மீள்விக்கப்பட்டது