நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் | |
---|---|
நிதித்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | அருண் ஜெட்லி |
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | அருண் ஜெட்லி |
வர்த்தகம், தொழில்துறை அமைச்சர்[1] | |
பதவியில் மே 26, 2014 – செப்டம்பர் 15, 2017 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஜெயந்த் சின்ஹா |
பின்னவர் | சுரேஷ் பிரபு |
பாசக பேச்சாளர் | |
பதவியில் 2010–2014 | |
பின்னவர் | சாயினா |
ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 26 சூன் 2014 – 21 சூன் 2016 | |
கருநாடக மாநிலங்களவை உறுப்பினர்[2] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 சூலை 2016 | |
முன்னையவர் | வெங்கையா நாயுடு, பாசக |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஆகத்து 1959 மதுரை, சென்னை மாநிலம் இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பரக்கல பிரபாகர் |
பிள்ளைகள் | 1 |
வாழிடம்(s) | ஐதராபாது, தெலுங்கானா, இந்தியா[3][4] |
முன்னாள் கல்லூரி | சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் |
நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman; பிறப்பு: 18 ஆகத்து 1959) இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் இந்திய அரசின் நிதி அமைச்சராக பதவியில் உள்ளார்.[5] இப்பதவிக்கு முன்பு இவர் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.[6] இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.[7]
கல்வி
[தொகு]நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் மதுரையில் ஒரு தமிழ் ஐயங்கார் குடும்பத்தில்,[8] சாவித்திரி மற்றும் நாராயணன் சீதாராமனுக்கு மகளாகப் பிறந்தார். சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[9] நிர்மலா சீதாராமன் 1980-ல் திருச்சியிலுள்ள சீதாலச்சுமி இராமசாமி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[10][11][12]
வாழ்க்கை
[தொகு]நிர்மலாவின் தாய்வழித் தாத்தா முசிறியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.[13] நிர்மலா சீதாராமன், முனைவர் பரகலா பிரபாகர் என்பவரை மணந்தார். பிரபாகர், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரின் தகவல் தொடர்பு ஆலோசகராகப் பணியாற்றியவர்.[14][15][16] இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.[17][18]
பணி
[தொகு]நிர்மலா சீதாராமன் தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராவார் (2003-2005). இவர் பாரதிய சனதா கட்சியின் ஆறு பேர் கொண்ட செய்தித் தொடர்பாளர்கள் குழுவில் ஒருவராவார்.
வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்
[தொகு]இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில், மே 26, 2014 அன்று நிர்மலா சீதாராமன் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மனோகர் பரிக்கர் முதல்வரான பின்னர் இவர் இந்தியப் பாதுக்காப்புத் துறையின் அமைச்சராக பதவி வகித்தார்.
நிதி அமைச்சர்
[தொகு]2019 மே 31 முதல் இந்திய மத்திய அரசு நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகிக்கும் இரண்டாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார் நிர்மலா சீதாராமன்.[19][20][21]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இவருக்கு 2019-ல் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருதை வழங்கியது.[22] போர்ப்ஸ் இதழ் 2019ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் 34வது இடத்தை வழங்கியது.[23]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://commerce.nic.in/bio/CIMBiodata.pdf
- ↑ http://www.ndtv.com/india-news/congress-wins-3-rajya-sabha-seats-from-karnataka-bjp-gets-1-1418017
- ↑ "National Leadership from Andhra Pradesh - Official BJP site of Andhra Pradesh Nirmala sitharaman's address and contact information". Archived from the original on 2014-10-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-03.
- ↑ "Official BJP National website". Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2017-09-03.
- ↑ "Cabinet rejig: A nod for BJP’s young champs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 September 2017. http://timesofindia.indiatimes.com/india/cabinet-rejig-a-nod-for-bjps-young-champs/articleshow/60344186.cms. பார்த்த நாள்: 3 September 2017.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=984171
- ↑ "Bharatiya Janata Party - The Party with a Difference". Bjp.org. Archived from the original on 2019-03-12. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
- ↑ "A power couple whom AP looks up to". Times of India. https://www.timesofindia.com/city/hyderabad/A-power-couple-whom-AP-looks-up-to/articleshow/38766320.cms.
- ↑ Phadnis, Aditi (4 September 2017). "The rise and rise of Nirmala Sitharaman: From spokesperson to defence minister". Business Standard இம் மூலத்தில் இருந்து 6 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170906121736/http://www.business-standard.com/article/politics/rise-of-nirmala-sitharaman-from-spokesperson-to-defence-minister-117090400030_1.html.
- ↑ Krishnamoorthy, R. (4 September 2017). "Nirmala Sitharaman, the pride of Tiruchi". The Hindu இம் மூலத்தில் இருந்து 2 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171202124119/http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/nirmala-sitharaman-the-pride-of-tiruchi/article19618658.ece.
- ↑ Sitharaman, Nirmala (30 May 2016). "Rajya Sabha Affidavits" (PDF). p. 7.
- ↑ "Nirmala Sitharaman appointed Finance Minister in Modi govt 2.0 as Arun Jaitley retreats". The Financial Express. 31 May 2019 இம் மூலத்தில் இருந்து 1 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190601011218/https://www.financialexpress.com/economy/nirmala-sitharaman-appointed-finance-minister-in-modi-govt-2-0-as-arun-jaitley-retreats/1594251/.
- ↑ தமிழ்நாட்டுப் பெண்- நிர்மலா சீதாராமன்
- ↑ "AP govt advisor and Nirmala Sitharaman's husband Parakala Prabhakar quits, blames Jagan". 19 June 2018. Archived from the original on 20 November 2018. பார்க்கப்பட்ட நாள் 22 June 2018.
- ↑ "In Nirmala Sitharaman, India Gets Its Second Woman Defence Minister After Indira Gandhi". Huffington Post India. 3 September 2017 இம் மூலத்தில் இருந்து 13 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170913183454/http://www.huffingtonpost.in/2017/09/03/in-nirmala-sitharaman-india-gets-its-second-woman-defence-minis_a_23195198/.
- ↑ "12 Unknown Facts About Nirmala Sitharaman: The Sales Girl Bit Will Surprise You". The Hans India. https://www.thehansindia.com/business/12-unknown-facts-about-nirmala-sitharaman-the-sales-girl-bit-will-surprise-you-626023.
- ↑ "Andhra Pradesh / Hyderabad News : BJP spokesperson finds her new role challenging". The Hindu. 2010-04-03. Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2013-06-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2014-05-22.
- ↑ "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
- ↑ மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
- ↑ அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
- ↑ Staff Reporter (12 June 2019). "Nirmala Sitharaman, Jaishankar to get JNU's Distinguished Alumni Award". The Hindu. https://www.thehindu.com/news/national/sitharaman-and-jaishankar-to-get-jnus-distinguished-alumni-award/article27891307.ece.
- ↑ "Nirmala Sitharaman". Forbes. Archived from the original on 13 December 2019. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
வெளியிணைப்புகள்
[தொகு]- டிவிட்டர் தளத்தில் நிர்மலா சீதாராமன்
- யூடியூபில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் - பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் 2019 ஜனவரி 4 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.