உள்ளடக்கத்துக்குச் செல்

துத்தநாக அசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்தநாக அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
துத்தநாக(II) அசைடு
வேறு பெயர்கள்
துத்தநாக ஈரசைடு
இனங்காட்டிகள்
ChemSpider 26583533
InChI
  • InChI=1S/2N3.Zn/c2*1-3-2;/q2*-1;+2
    Key: QFDUTPNKBRXHTC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 131722987
  • [N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[Zn+2]
பண்புகள்
Zn(N3)2
வாய்ப்பாட்டு எடை 149.4 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 2.559 கி/செ.மீ3 (ஒரு பல்லுருவம்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

துத்தநாக அசைடு (Zinc azide) Zn(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். துத்தநாக (Zn2+) நேர்மின் அயனிகளும் அசைடு (N3) எதிர்மின் அயனிகளும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வெண்மை நிறத்தில் வெடிக்கும் தன்மை கொண்ட திண்மப் பொருளாக துத்தநாக அசைடு உருவாகிறது. ஈரெத்தில் துத்தநாகத்துடன் ஐதரசோயிக் அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் துத்தநாக அசைடு உற்பத்தியாகிறது.:[1]

Zn(C2H5)2 + 2 HN3 → Zn(N3)2 + 2 C2H6

பண்புகள்

[தொகு]

துத்தநாக அசைடு என்பது ஓர் ஒருங்கிணைப்பு பலபடியாகும். இது மூன்று பல்லுருதோற்றங்களில் படிகமாகிறது. இம்மூன்றின் கட்டமைப்பிலும் நான்முகி துத்தநாக மையங்கள் அசைடு ஈந்தணைவிகளுடன் பாலம் அமைக்கின்றன. α-Zn(N3)2 வடிவ துத்தநாக அசைடு ஒற்றைச்சாய்வு இடக்குழுவில் படிகமாகிறது. இது நிலைப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். மற்ற இரண்டு வடிவங்களும் சிற்றுறுதி நிலை நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. β-Zn(N3)2 முக்கோண வடிவமும் P3221 என்ற இடக்குழுவும், γ-Zn(N3)2 வடிவம் ஒற்றைச் சரிவச்சும் C2 இடக்குழுவும் கொண்ட படிகத்திட்டத்தில் படிகமாகின்றன.

துத்தநாக அசைடு எளிதில் நீராற்பகுப்பு அடைகிறது. மேலும் இதை நீரிய கரைசலில் தயாரிக்கும் முயற்சியின் விளைவாக கார அசைடுகள் வீழ்படிவாகின்றன. (Zn(OH)2−x(N3)x (x = 0.9–1.0).) α- மற்றும் β-வடிவங்கள் இரண்டும் மிகவும் உராய்வு மற்றும் அதிர்ச்சி உணர்திறன் கொண்டவையாகும். நீல நிறத் தீச்சுவாலையில் தீவிரமாக வெடிக்கின்ற்ன. மெல்ல சூடாக்க்கும் போது இவை சிதைவடைந்து நைட்ரசன் வாயுவைக் கொடுக்கின்றன. மந்த வளிமண்டல சூழலில் மூடிய கண்ணாடிக் குழாயில், இது துத்தநாக நைட்ரைடு சேர்மத்தைக் கொடுக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schulz, Axel; Villanger, Alexander (2016). "Binary Zinc Azides". Chemistry: A European Journal 22 (6): 2032–2038. doi:10.1002/chem.201504524. பப்மெட்:26749253. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_அசைடு&oldid=3775353" இலிருந்து மீள்விக்கப்பட்டது