திருமுல்லைவாசல்
திருமுல்லைவாசல் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°07′55″N 80°07′51″E / 13.13183°N 80.13082°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
நிர்வாகம் | ஆவடி மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600 062 |
வாகனப் பதிவு | TN-13 |
திருமுல்லைவாசல் அல்லது திருமுல்லைவாயல் (Thirumullaivoyal) தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தின், ஆவடி வட்டத்தில் அமைந்துள்ள 5 உள்வட்டங்களில் ஒன்றாகும். மேலும் திருமுல்லைவாசல் ஆவடி மாநகராட்சியில் உள்ளது.[1] சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில், திருமுல்லைவாசல் தொடருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]பெருநகர சென்னை மாநகராட்சியின் வலாயத்தில் திருமுல்லைவாசல் விரைவாக வளரும் நகரப் பகுதியாக மாறிவருகிறது. மேற்கு சென்னையின் ஒரு பகுதியாக உள்ள திருமுல்லைவாசலுக்கு தென்கிழக்கில் 2 கிமீ தொலைவில் அம்பத்தூர் நகராட்சியும், தென்மேற்கில் ஆவடி நகராட்சியும் உள்ளது.
போக்குவரத்து
[தொகு]சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 16 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை - அரக்கோணம் வழியாகச் செல்லும் சென்னை புறநகர் இருப்புவழிகள், திருமுல்லைவாசல் தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் திருமுல்லைவாசல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.