உள்ளடக்கத்துக்குச் செல்

திபெத்தியக் கம்பளி பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபெத்தியக் கம்பளி பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
யூ. திபெத்தென்சிசு
இருசொற் பெயரீடு
யூபெடாரசு திபெத்தென்சிசு
ஜாக்சன், கெல்கன், கியூ. லி & ஜியாங், 2021

திபெத்தியக் கம்பளி பறக்கும் அணில் (Tibetan woolly flying squirrel)(யூபெடாரசு திபெத்தென்சிசு) என்பது யூபெடாரசு பேரினத்தைச் சேர்ந்த மிகப் பெரிய பறக்கும் அணில் சிற்றினமாகும். இது திபெத்திய பீடபூமியின் தென்-மத்திய பகுதியில், அதாவது தென்-மத்திய திபெத், வடக்கு சிக்கிம் மற்றும் மேற்கு பூட்டானில் காணப்படுகிறது.[1][2][3]

வகைப்பாட்டியல்[தொகு]

இது யுன்னான் கம்பளி பறக்கும் அணிலின் (யூ. நிவாமோன்சு) சகோதர இனமாகக் கருதப்படுகிறது. இது பிளியோசீன் - பிலிசுடோசீன் இடைப்பகுதியின் போது வேறுபட்டிருக்கலாம். இது மேற்கத்தியக் கம்பளி பறக்கும் அணில் (யூ. சைனெரசு) சிற்றினத்திலிருந்து இதன் முழுமையான பழுப்பு நிறத்தில் சிவப்பு நிறத்தால் வேறுபடுகிறது. மேலும் கருப்பு வால் நுனி யூ. நிவாமோன்களை விட நீண்டதாக இருக்கும்.[2]

நிலை[தொகு]

1879 முதல் இதன் இருப்பு அறியப்பட்டாலும், சேகரிக்கப்பட்ட மிகச் சில மாதிரிகள் காரணமாக, இது 2021 வரை விவரிக்கப்படாமல் இருந்தது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தரவுகள் போதாது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Explore the Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
  2. 2.0 2.1 2.2 Jackson, Stephen M; Li, Quan; Wan, Tao; Li, Xue-You; Yu, Fa-Hong; Gao, Ge; He, Li-Kun; Helgen, Kristofer M et al. (2021-05-31). "Across the great divide: revision of the genus Eupetaurus (Sciuridae: Pteromyini), the woolly flying squirrels of the Himalayan region, with the description of two new species". Zoological Journal of the Linnean Society 194 (2): 502–526. doi:10.1093/zoolinnean/zlab018. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-4082. https://doi.org/10.1093/zoolinnean/zlab018. 
  3. "Two New Species of Woolly Flying Squirrels Discovered | Biology | Sci-News.com". Breaking Science News | Sci-News.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.