சகோதர குழு
சகோதர குழு (Sister group) அல்லது சகோதர வகைப்பாட்டுப் பிரிவு என்பது பரிணாம தொகுதிப் பிறப்பில் ஒரு வரைபடத்தில் கொடுக்கப்பட்ட ஒரு அலகின் மற்றொரு அலகுக்கு நெருங்கிய உறவினரை (களை) குறிப்பதாகும்.[1]
வரையறை
[தொகு]சகோதர குழுவிற்கான விளக்கம் மிக எளிதாக ஒரு கிளைவரை படம் மூலம் விளக்கப்படுகிறது:
சகோதர குழு உறவு | |||||||||||||||||||||
|
உயிரலகு அ மற்றும் உயிரலகு ஆ ஆகியவை சகோதர குழுக்கள் ஆகும். உயிரலகு அ மற்றும் ஆ, மிகச் சமீபத்திய பொதுவான மூதாதையரின் (தற்கால உயிரிகளின் ஆய்வு நூல்) பிற அல்லது அற்றுவிட்ட இனத்துடன் சேர்ந்து,[Note 1] ஒரு ஒற்றைத்தொகுதி மரபு உயிரினத் தோற்றத்தினை, உயிரின கிளை அஆஉருவாக்குகிறது. உயிரினக் கிளை அஆ மற்றும் உயிரலகு இ ஆகியவையும் சகோதர குழுக்கள் ஆகும். உயிரலகு அ, ஆ, மற்றும் இ, ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத்தின் பிற சந்ததியினரும் சேர்ந்து அஆஇ உயிரலகினை உருவாக்குகின்றனர்.
முழு உயிரலகான அஆஇ ஒரு பெரிய மரத்தின் துணை மரமாகும். இதில் மரம் மற்றும் பெரிய, ஆழமாக வேரூன்றிய உயிரலகு இரண்டிலும் இன்னும் கூடுதலான சகோதர குழு உறவுகளை கொண்டிருக்கலாம். காட்டப்பட்டுள்ள மர அமைப்பு அதன் வேர் வழியாக மற்ற உலகளாவிய வாழ்க்கை மரத்துடன் இணைகிறது.
கிளைப்பாட்டியல் தரநிலைகளில், உயிரலகு அ, ஆ மற்றும் இ ஆகியவை மாதிரிகள், சிற்றினம், பேரினம் அல்லது வேறு ஏதேனும் வகைபிரித்தல் அலகுகளைக் குறிக்கலாம். அ மற்றும் ஆ ஆகியவை ஒரே வகைபிரித்தல் மட்டத்திலிருந்தால், சகோதர இனங்கள் அல்லது சகோதர பேரினங்கள் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படலாம்.
உதாரணம்
[தொகு]தொகுதிப்பிறப்பு பகுப்பாய்வில் சகோதர குழு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், பகுப்பாய்வில் அடையாளம் காணப்பட்ட குழுக்கள் மட்டுமே "சகோதர குழுக்கள்" என்று பெயரிடப்படுகின்றன.
உதாரணமாகப் பறவைகள், இவற்றின் பொதுவாக வாழும் சகோதர குழு முதலைகள் ஆகும். ஆனால் இது தற்போதுள்ள உயிரினங்களைப் பற்றி விவாதிக்கும் போது மட்டுமே உண்மையாகும்.[2][3] மற்ற, அழிந்துபோன குழுக்களைக் கருத்தில் கொள்ளும்போது, பறவைகள் மற்றும் முதலைகளுக்கு இடையேயான உறவு தொலைவில் உள்ளது. பறவை குடும்ப மரம் தொன்மாவில் வேரூன்றியிருந்தாலும், பறவைகள் மற்றும் முதலைகளின் கடைசி பொதுவான மூதாதையருக்குப் பிறகு தொன்மாக்களுக்கு வழிவகுக்கும் வரிசையிலிருந்து கிளைத்த பிரிவுகள் போன்ற பல முந்தைய குழுக்களும் உள்ளன.[4]
பகுப்பாய்வில் சேர்க்கப்பட்டுள்ள குழுக்கள்/இனங்கள்/மாதிரிகள் ஆகியவற்றில் சகோதர குழு மட்டுமே நெருங்கிய உறவினர் என்ற எச்சரிக்கையுடன், சகோதர குழு என்ற சொல் ஒரு உறவினர் சொல்லாகப் பார்க்கப்பட வேண்டும்.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ A tree diagram inevitably oversimplifies the complicated process of evolution.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eernisse, Douglas J. "Introduction to Phylogeny: What is a Sister Taxon?". Biology 404 - Evolution. Department of Biological Science, California State University, Fullerton. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012.
- ↑ Padian, Kevin; Lindberg, David R.; Polly, Paul David (May 1994). "Cladistics and the fossil record: The uses of history". Annual Review of Earth and Planetary Sciences 22 (1): 63–89. doi:10.1146/annurev.ea.22.050194.000431. Bibcode: 1994AREPS..22...63P.
- ↑ Kemp, T.S. (January 1988). "Haemothermia or Archosauria? The interrelationships of mammals, birds and crocodiles". Zoological Journal of the Linnean Society 92 (1): 67–104. doi:10.1111/j.1096-3642.1988.tb01527.x.
- ↑ Hughes, J.M. (2011-06-13). "Ancient bird-crocodilian ancestor uncovered" இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120426091546/http://www.avesvitae.org/www.avesvitae.org/News/Entries/2011/6/13_Ancient_Bird-Crocodilian_Ancestor_Uncovered.html.
- ↑ Podani, János (2010). "Taxonomy in evolutionary perspective - An essay on the relationships between taxonomy and evolutionary theory". Synbiologia Hungarica 5: 1–42. https://www.scribd.com/doc/32972918/Podani-Taxonomy-in-evolutionary-perspective-Synbiol-Hung-6-1-42-2010.