குதுக்து கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதுக்து கான் குசாலா
யுவானின் மிங்சோங் பேரரசர்
மங்கோலியப் பேரரசின் 13வது ககான்
(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே)
யுவான் வம்சத்தின் 7வது பேரரசர்
சீனாவின் பேரரசர்
யுவான் வம்சத்தின் பேரரசர்
ஆட்சிக்காலம்பெப்ரவரி 27, 1329 – ஆகத்து 30, 1329
முடிசூட்டுதல்பெப்ரவரி 27, 1329
முன்னையவர்ஜயாது கான்
பின்னையவர்ஜயாது கான்
பிறப்பு(1300-12-22)திசம்பர் 22, 1300
இறப்புசெப்டம்பர் 30, 1329(1329-09-30) (அகவை 28)
ஒங்கச்சடு, உள் மங்கோலியா
இராணிமைலைதி
மனைவிபாபுசா
பெயர்கள்
மொங்கொலியம்: ᠬᠥᠰᠯᠡᠨ
சீனம்: 和世㻋
குதுக்து கான் குசாலா
சகாப்த காலங்கள்
தியனலி (天曆) 1329
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் யிக்சியான் சிங்சியாவோ (翼獻景孝皇帝)
கோயில் பெயர்
மிங்சோங்(明宗)
மரபுபோர்சிசின்
அரசமரபுயுவான்
தந்தைகுலுக் கான்

குதுக்து கான் (மொங்கோலியம்: Хутагт хаан, ஹுடக்ட் ஹான், குடுய்டு கயன்), இயற்பெயர் குசாலா (மொங்கொலியம்: Хүслэн Höslen), மிங்சோங் (யுவானின் மிங்சோங் பேரரசர், சீனம்: 元明宗, டிசம்பர் 22, 1300 – ஆகத்து 30, 1329) என்ற கோயில் பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் கயிசனின் மகன் ஆவார். இவர் யுவான் வம்சத்தின் மன்னனாக 1329 ஆம் ஆண்டில் பதவியேற்றார். ஆனால் பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே இயற்கை எய்தினார்.[1] சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலியப் பேரரசு அல்லது மங்கோலியர்களின் 13வது பெரிய கான் ஆகக் கருதப்படுகிறார். இருப்பினும் மங்கோலியப் பேரரசின் பிரிவு காரணமாக பெயரளவில் மட்டுமே இவர் பேரரசராக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சிறைவாசம்[தொகு]

இவர் கயிசன் (குலுக் கான் அல்லது பேரரசர் உசோங்) மற்றும் ஒரு மங்கோலிய-இகிரேசு இனப் பெண் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். கயிசனின் ஆட்சியானது கயிசன், அவரது தம்பி அயுர்பர்வதா மற்றும் அவர்களின் கொங்கிராத் இன தாயார் தகி ஆகியோருக்கு இடையேயான அதிகாரக் குழப்பத்தில் நிறுவப்பட்டது. இதன் காரணமாக கயிசன் அயுர்பர்வதாவை பட்டத்து இளவரசராக நியமித்தார். இந்நியமானத்திற்குப் பிறகு கயிசனை அயுர்பர்வதா பட்டத்து இளவரசனாக்குவார் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இது நடந்தது.

ஆயினும், கயிசனின் மரணத்தைத் தொடர்ந்து 1311 ஆம் ஆண்டில் அயுர்பர்வதா ஆட்சிக்கு வந்த பிறகு தகி, தெமுதர் மற்றும் கொங்கிராத் பிரிவின் பிற உறுப்பினர்கள் குசாலாவின் தாய் கொங்கிராத் இனத்தில் இருந்து இல்லாமல் இகிரேசு இனத்தில் இருந்து வந்திருந்ததால் அயுர்பர்வதாவின் மகனான சிதேபாலாவை புதிய ஆட்சியாளராக நிறுவினர்.

சிதேபாலா மன்னராவதை உறுதிப்படுத்த, குசாலாவுக்கு சோவுவின் மன்னர் என்ற பட்டம் வழங்கப்பட்டு, 1316ல் யுன்னானுக்கு அனுப்பப்பட்டார்;[2] ஆனால் “சான்சி”யில் ஒரு தோல்வியடைந்த கிளர்ச்சிக்குப் பிறகு தனது ஆதரவு அதிகாரியின் அறிவுரைப்படி மத்திய ஆசியாவில் ஆட்சி செய்த சகடை கானேட்டின் கானான ஏசன் புகாவிடம் சென்றார். குசாலா தனது சாம்ராஜ்யத்திற்கு அருகில் வாழ்ந்ததாக ஏசன் புகா கேள்விப்பட்டபோது, அவரை வரவேற்றார். இதற்குப் பிறகு, குசாலா சகடை கானேட்டின் இளவரசர்களால் ஆதரிக்கப்பட்டார்.[3] மத்திய ஆசியாவிற்கு நாடுகடத்தப்பட்ட சமயத்தில், அவர் கரலகு இனத்தைச் சேர்ந்த தெமுதெரின் மகளான மைலைதியை மணந்தார்.[4]

சிறிது கால ஆட்சி மற்றும் திடீர் மரணம்[தொகு]

யெசுன் தெமுர் (பேரரசர் டைடிங்) எதிர்ப்பிரிவினரை ஒழித்துக்கட்டியபோது சிதேபாலா கானும் (பேரரசர் யிங்சோங்) கொல்லப்பட்டார். இச்சமயத்தில் குசாலா மத்திய ஆசியாவிலேயே தங்கினார். அல்டாய் மலைகளுக்கு மேற்கில் அமைந்துள்ள இவரது அதிகார மையம் வரை இவரது செல்வாக்கு பரவியிருந்தது.

1328 ஆம் ஆண்டில், யெசுன் தெமுர் கான் இறந்தபோது, சங்டுவைச் சேர்ந்த ரகிபக் கான் மற்றும் கன்பலிக்கைச் சேர்ந்த ஜயாது கான் இடையே உள் நாட்டுப்போர் உருவானது. இது இரு தலைநகரங்களின் போர் என்றழைக்கப்படுகிறது. இதில் ரகிபக், யெசுன் தெமுரின் மகன் ஆவார். இவரை தவ்லத் ஷா ஆதரித்தார். ஜயாது கான் குசாலாவின் தம்பி ஆவார். இவரை கிப்சக் தளபதி எல் தெமுரும், மெர்கிட் வம்சத்தைச் சேர்ந்த தளபதி பயனும் ஆதரித்தனர். கோபி பாலைவனத்தின் தெற்கில் இருந்த பல இளவரசர்கள், உயர்குடிகள் மற்றும் போர்வீரர்களின் ஆதரவைப் பெற்றதன் மூலம் ஜயாது கான் இதில் வெற்றியடைந்தார். ஜயாது கான் துக் தெமுர் தனது சகோதரர் குசாலாவை டடுவிற்கு (கன்பலிக் அல்லது பெய்ஜிங்) வரும்படி அழைத்தார்.

அதே சமயத்தில் குசாலா சகடை வம்ச தலைவர்கள், எல்சிசிதே மற்றும் துவா தெமுர் ஆதரவுடன் கங்கை மலைகளின் தர்பகதை பகுதியிலிருந்து மங்கோலியாவிற்குள் நுழைந்தார். இவர் மங்கோலியாவின் இளவரசர்கள் மற்றும் தளபதியினரிடமிருந்து ஆதரவைப் பெற்றிருந்தார். பின்னணியில் பெரும் இராணுவ சக்தியுடன், இவர் ஏற்கனவே அரியணைக்குச் சென்றிருந்த துக் தெமுருக்கு அழுத்தம் கொடுத்தார். குசாலா பெப்ரவரி 27, 1329 அன்று கரகோரத்தின் வடக்கே தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார்.[1]

அதே ஆண்டு ஏப்ரல் 3 ம் தேதி துக் தெமுர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஒரு மாதம் கழித்து, எல் தெமுர் மங்கோலியாவிலிருந்த குசாலாவிற்கு ஏகாதிபத்திய முத்திரையைக் கொண்டு வந்தார், குசாலாவை வரவேற்பதற்காக டடுவின் நோக்கத்தையும் அறிவித்தார். குசாலா செயலகம், இராணுவ அலுவல்கள் பணியகம் மற்றும் தணிக்கை அலுவலகம் ஆகியவற்றில் முக்கியமான பதவிகளுக்கு தனது சொந்த விசுவாசிகளை நியமிக்கத் தொடங்கினார்.

ஆகத்து 26 ம் தேதி குசாலா டடுவிற்குச் செல்லும் வழியில், 1,800 பேருடன், ஒங்குசடில் உள்ள துக் தெமுரைச் சந்தித்தார். இங்குதான் துக் தெமுர் சொங்டு என்ற நகரத்தைக் கட்டியிருந்தார்.[5] துக் தெமுருடன் விருந்து உண்டு 4 நாட்களுக்குப்பின் குசாலா திடீரென இறந்தார்.[6] அதிர்ஷ்டமற்ற குசாலா கான் வன்முறை காரணமாக இறந்ததாக யுவான் வரலாறு (யுவான் ஷி) குறிப்பிடுகிறது.[7] குசாலாவுக்கு எல் தெமுரினால் விஷம் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏனெனில் எல் தெமுர் சகடை கானேடு மற்றும் மங்கோலியாவிலுள்ள இளவரசர்களிடமும், அதிகாரிகளிடமும் தன் அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.[8] செப்டம்பர் 8 அன்று துக் தெமுர் மீண்டும் மன்னனானார்.

குடும்பம் மற்றும் குழந்தைகள்[தொகு]

குசாலாவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். சீனாவை ஆட்சி செய்த கடைசி மங்கோலிய பேரரசர் தோகோன் தெமுர் உட்பட இரண்டு எதிர்கால மங்கோலியப் பேரரசர்களை இவர் பெற்றெடுத்தார்.

குசாலா செங்கிஸ் கானிடம் சரணடைந்த புகழ்பெற்ற கரலகு இனத் தலைவரான அரசலான் வழிவந்த மைலைதியை மணந்தார். இவர்களுக்கு தோகோன் தெமுர் என்ற ஒரு மகன் உண்டு. மேலும் குசாலாவிற்கு நைமர்கள் வம்சத்தைச் சேர்ந்த பாபுசா என்ற மனைவி மூலம் ரிஞ்சின்பால் கான் என்ற மகனும் உண்டு.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • Ч.Далай – Монголын түүх 1260–1388
  • Д.Цэен-Ойдов – Чингис богдоос Лигдэн хутагт хүртэл монголын хаад
  1. 1.0 1.1 Herbert Franke, Denis Twitchett, John King Fairbank-The Cambridge History of China: Alien regimes and border states, 907–1368, p.545
  2. Herbert Franke, Denis Twitchett, John King Fairbank-The Cambridge History of China: Alien regimes and border states, 907–1368, p.542
  3. Yuan shi, 33. pp.694
  4. Andreas Radbruch-Flow cytometry and cell sorting, p.1290
  5. Hsiao Kung-chin-Lun Yuan tai huang wei chi cheng wen ti, p.33
  6. Yuan shi, 31. pp.700
  7. Yuan shi, 31. pp.701
  8. Fujishima Tateki-Gen no Minso no shogai, p.22
குதுக்து கான்
பிறப்பு: 1300 இறப்பு: 1329
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
ஜயாது கான், பேரரசர் வென்சோங்
மங்கோலியப் பேரரசின் பெரிய கான்
(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே]])

1329
பின்னர்
ஜயாது கான், பேரரசர் வென்சோங்
யுவான் வம்சத்தின் பேரரசர்
1329
சீனாவின் பேரரசர்
1329
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதுக்து_கான்&oldid=3848331" இலிருந்து மீள்விக்கப்பட்டது