ஒட்டக்கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 64: வரிசை 64:
[[கூத்தனூர் சரஸ்வதி கோயில்|கூத்தனூர் சரஸ்வதி கோயிலில்]] ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார்.<ref> அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் திருக்கோயில், மகாமகம் சிறப்பு மலர் 2004 </ref>
[[கூத்தனூர் சரஸ்வதி கோயில்|கூத்தனூர் சரஸ்வதி கோயிலில்]] ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார்.<ref> அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் திருக்கோயில், மகாமகம் சிறப்பு மலர் 2004 </ref>


==வெளி ப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[[Ottakuthar nomber ula|'''ஒட்டக்கூத்தர் பாடிய உலாக்கள்''']] {{த}}
* [http://www.tamilnation.org/literature/pmunicode/mp116.htm ஒட்டக்கூத்தர் பாடிய உலாக்கள்] {{த}}

==அடிக்குறிப்பு==
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{Reflist}}

13:00, 9 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

கவி சக்கரவத்தி
ஒட்டக்கூத்தர்
பிறப்புதிருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி
தொழில்கவிஞர்
தேசியம்சோழர்
இலக்கிய இயக்கம்சைவ சமயம்
குறிப்பிடத்தக்க படைப்புகள், தக்கயாகப் பரணி

ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு.

வரலாறு

நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் கம்பரின் பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. அன்று போர் மறவர்களாக [1] வாழ்ந்த செங்குந்தர் குல மக்களைப் போற்றிப்பாடும் இவர் செங்குந்தர் குலத்தவர் எனக் கொள்ள இடம் தருகிறது. காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல். குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவரும் புகழேந்திப் புலவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடல்கள் சுவை மிக்கவை.

இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.[2] இவரது காலத்துக்குச் சுமார் 500 ஆண்டுகள் முன்னர்பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் தனி நூலாக இல்லை.

பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. [3]

பெயர்ப் பொருள்

கூத்தர் என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.[4]

ஒட்டக்கூத்தரின் நூல்கள்

இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்

  • புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர், புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149
  • நான் கண்ட ஒட்டக்கூத்தர், சிறீநிவாச ரங்கசுவாமி, நாம் தமிழர் பதிப்பகம், 2004, ப்க்.1-90.

சரஸ்வதி கோயில்

கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார்.[5]

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. இன்று நெசவாளர்கள்
  2. http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202152.htm
  3. http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=14268 கலைமகள் போற்றுதும்
  4. ஒட்டக்கூத்தர் அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது, அதில் லரும் ஒரு பாடலை ஒட்டி மற்றொரு பாடலைப் பாடுமாறு விக்கிரம சோழன் கேட்டதாகவும், ஒட்டக்கூத்தர் சோழன் விருப்பப்படி ஒட்டிப் பாடியதால் ‘ஒட்டக்கூத்தர்’ என்னும் பெயரைப் பெற்றார் என்னும் செய்தியும் கூறப்படுகிறது. - *மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
  5. அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் திருக்கோயில், மகாமகம் சிறப்பு மலர் 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டக்கூத்தர்&oldid=2586326" இலிருந்து மீள்விக்கப்பட்டது